Followers

Showing posts with label தினம். Show all posts
Showing posts with label தினம். Show all posts

Tuesday, March 8, 2011

உலக மகளிர் தினம்-(இரவுகள் விடியுமா!)

இந்தப்பதிவு என்னுடைய பார்வை மட்டுமே.............இன்னும் பல பெண்களின் இரவு விடியாமலேயே உள்ளது......................


"பட்டணத்து காதல் எல்லாம் பாதியிலே முடியுதப்பா பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவப்பா...............காசு பணம் சேருதப்பா காரு வண்டி பறக்குதப்பா.................சேர்த்த பணம் செலவழிஞ்சா நாட்டுப்பக்கம் திரும்புதப்பா......... "


இந்தப்பாடல் எனக்கு கேட்க்கும்போதேல்லாம் தோன்றும் ஒரு விஷயம் இதில் பாதி உண்மையில நடந்துட்டு இருக்குங்கறது தான்...............எல்லோரும் மகளிர் தினமென்றால் பட்டினத்து பெண்களில் சிலரை வைத்தே பார்ப்பது தவறு என்பது என் கருத்து....................


ஒரு குடம் தண்ணீர் எடுத்துவர இன்றும் பல மைல் தூரம் நடக்கும் இந்த பெண்களின் உழைப்பை என்ன சொல்வது................


இந்தப்பெண்களை பாருங்கள்...........எந்த அளவுக்கு கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள்...............நாள் முழுதும் உடல் வளைந்து நாற்று நடும் பெண்ணுக்கு ஈடாகுமா நம் ஒரு மாத உழைப்பு.............வாழ்வில் என்ன சுகம் கண்டார்கள் இப்பெண்கள்..................


இன்று பல வீடுகளில் குடித்துவிட்டு பெண்களை அடித்துக்கொண்டும், தன் வாழ்வை மட்டும் தொலைக்காமல் தன் குடும்பத்தையும் தொலைத்துக்கொண்டு இருக்கும் பல ஆண்களிடம் பெண் தோற்றுக்கொண்டு தான் இருக்கிறாள்.....................................


உடல் உபாதைகளில் பெண்களின் பாடு கொடுமையானதாக இருந்தாலும் அவர்கள் அதனை மீறித்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக......


சில நாகரிகம் எனும் போதையில் இருக்கும் பெண்களை வைத்து மட்டுமே நாம் முழுமையான சமுதாயத்தை முடிவு செய்ய இயலாது............நம் அன்பு தாய், தமக்கை போன்ற இந்த தெய்வங்களின் உழைப்பில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் ஒரு சாதாரண ஆணாக நான்.................

கொசுறு: மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.

Post Comment