Followers

Showing posts with label பஞ்சாயத்து. Show all posts
Showing posts with label பஞ்சாயத்து. Show all posts

Tuesday, March 1, 2011

தள அரசியல் பஞ்சாயத்து(!?) - fight for the right



வாங்கோ வாங்கோ இது உங்களின் ஏகாதிபத்திய சாரிபா ஏகோபித்த ஆதரவுடன் நடக்கும் நானா நீயா பஞ்சாயத்து.........................

நடுவர் எப்பவும் போல எந்தப்பக்கமும் போக முடியாத பொது ஜனம்(நீங்க மாத்திக்கலாம் ஹி ஹி!).


வாங்க அண்ணே வணக்கம் வாழ்த்தோட ஆரம்பிப்போமா............

முதல்ல அந்த தம்பிய பாடசொல்லு...........

சரிங்க..............

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி......சொல்லுங்க ஜெய்ஹிந்த்...........

நீங்க இப்போ அண்ணே.....................

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்.............

ஸ்ஸ்ஸ் ஆரம்பத்துலயேவா இன்னிக்கி டங்குவாரு அறுந்துரும் போல.............

சரிங்கன்னேன்..........இப்போ லேட்டஸ்ட்டா வந்த சரக்கு சரி இல்லன்னு சொல்றாங்களே..............

யாரு சொன்னா அப்படி சொல்றவங்க தான் அத முதல்ல அடிக்கறவங்க தெரியுமா..........

சரி அடிக்கிறாங்க ரைட்டு............அடிச்சிட்டு ஒரு கப்படிக்குதுன்னு சொல்லிகிராங்களே.............

அது அவங்க விருப்பம்...........அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது...............

ஏன்னே நீங்க மூத்தவுக நீங்க தானே உண்மைய சொல்லணும் அப்படியில்லாம நீங்களும் அந்த கப்புக்கு ஆதரவு தரீங்களே.................நாளைக்கு சரக்கு கம்பனில சேத்துபாங்கன்னு இப்படி சொல்றீங்களா..........

எலேய் யாரு நீ சம்மன் இல்லாம ஆஜராகுற..........உன்னோட கடை விலாசம் சொல்லு.........அப்படியே உன் சொந்த பேரு குளம்.... சீ...........குலம் கோத்துரம். நட்சத்துரம். அப்படியே ரேஷன் கார்டு, பாஸ்போர்டு டீடைலு எல்லாத்தையும் முதல்ல சொல்லு...................

அது எதுக்குன்னேன்.........நீங்க தான இந்த சரக்க பத்தி நான் இப்படி சொல்லி இருக்கேன்..............நீங்க என்ன நெனைக்கிறீங்களோ சொல்லுன்னு சொன்னீங்க........இப்போ இப்படி என் பூர்வீகத்த பத்தி ஏன் கேக்குறீங்க...............

தக்காளி வா நேரா மோதிக்கலாம்..............

இதுவா ஒரு பெரிய அண்ணனுக்கான அடையாளம்...............சரிங்கண்ணே நானும் இங்க தான் ஆடருப்பு பாளையத்துல இருந்து வாரேன்............நீங்க இஷ்ட்டப்பட்டா மோதிக்கலாம்......................

ஏம்பா பஞ்சாயத்துக்கு வந்துட்டு............இப்படி சண்ட போடுறீங்களே............சரி அண்ணே நீங்க என்ன முடிவா சொல்றீங்க.................

தக்காளி தூ...............

போயா தூ...............

அடங்கொன்னியா...............ரெண்டு பேரும் இப்படி எங்க மேல துப்பிட்டீங்களே.............யாரு வந்து துடைக்க போறீங்க.................

எனக்கு நேரம் இல்ல துப்பரத துப்பியாச்சி..........உனக்கு வேணுமுன்னா நீயே போயி துடைசிக்க...............எனக்கு நெறய வேல கீது நான் போய் பாக்கணும் 

அப்போ எதுக்கு உங்க கடைல துட்டு வர்றா மாதிரி பலகை வச்சி கிறீங்க..............

அது என் இஷ்டம்........அத பத்தி கேக்க நீ யாரு..............

அண்ணே, தம்பி நிறுத்துங்க............எங்களால முடியல!

எலேய் உன்ன என் உடன்பிறப்புங்கள வச்சி என்னா பண்றேன் பாரு..............

நானும் விட மாட்டேன்.........................

பொது ஜனம் - தக்காளி.....................நாங்களும் எவ்ளோ பஞ்சாயாத்த பாத்து கீறோம்...........இது என்னாடா ஆடை அவிழ்ப்பு சரியா இல்லையான்னு ஒரு பஞ்சாயத்து...........

கொசுறு: இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது இப்படிக்கு அப்பாவி.

Post Comment