Followers

Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Wednesday, August 10, 2011

எப்படிப்பட்ட பதிவுகள் இட வேண்டும்!

வணக்கம் நண்பர்களே....


முடிந்தவரை நான் சர்ச்சை பதிவுகள் இட்டதில்லை....இருந்தாலும் எனக்கு ஏற்படும் சில சங்கடங்களை தெளிவு படுத்திக்கொள்வதை நான் என்றும் மறப்பதில்லை...

சமீப சங்கடம்...சில பெரிய அப்பாடக்கர்கள் தவறான தங்கள் பார்வையால் இந்த பதிவுலத்தில் ஒரு வித பிளவு வரும் என்று எதிர் பார்த்து காத்து இருக்கிறார்கள்....நான் யாரை சொல்கிறேன் என்பதை படிப்பவர் பார்வைக்கே விட்டு விடுகிறேன்....
சமீபத்தில் ஒரு நண்பர் பதிவு பற்றி கூறிக்கொண்டு இருந்தார்....அதில் ஒரு கவலை தெரிந்தது. என்ன சொல்ல வருகிறார் என்று கவனித்தேன்....அவர் சொல்வது என்னவெனில்......தான் பல விஷயங்களை ஆராய்ந்து எழுதிய பதிவுக்கு யாரும் வரவில்லை என்றும்....தன்னுடைய மொக்கை பதிவுக்கு(அவரே சொன்னது!) இப்படி அலை கடலென கூட்டம் வருவது தனக்கு வேதனை அளிக்கிறது என்றும் கூறினார்....


இதை போய் என்னிடம் சொல்கிறீர்களே....உங்களை போல பதிவர் அல்ல நான்(!)...எதோ தோன்றுவதை டைப்பிக்கும் ஒரு மாக்கான்(!) என்றேன்....என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்....எதோ போடும் உங்களுக்கு எப்படி வாசகர்கள் கிடைத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.....

நானும் சளைக்காமல்(!)...உண்மையில் அவர்கள் என் நலம் விரும்பிகள்....நான் தனியே புலம்புவதை சகிக்காமல்..."தோழா நாங்களும் இருக்கிறோம் கவலைப்படாதே" என்று என்னை தேற்ற வரும் நண்பர்களே அவர்கள் என்றேன்...


இது வரை ஒரு பதிவாவது சமுதாயத்துக்காக போட்டு இருக்கிறாயா என்றார் அவர்...நானும் எனக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாது என்றேன்...இந்த நிலைமையில் நீங்க எதுக்கு பதிவுங்கர உன்னதமான விஷயத்தை இப்படி வெட்டித்தனமா பயன் படுத்துறீங்க என்றார்....

இல்லீங்க....எனக்கு தெரிஞ்ச மற்றும் நான் சந்திச்ச விஷயங்களை இங்கு பகிர்கிறேன் அவ்வளவே....சில பதிவுகள் கொஞ்சம் கோககு மாக்காவும் இருக்கும்...அந்த அளவுக்கு தான் எனக்கு தெரியும் என்றேன்....

அடுத்து அவர் ஒரு குண்டை வீசினார்....

அதாவது சீக்கிரத்தில் இரு பெரும் பாதிகளாக பதிவுலகம் பிரிய வேண்டி வரும்...அதனால் முன்னமே பாதுகாப்பாக ஒரு பக்கம் சென்று விடுமாறும் கூறி அறிவுரை(!) அளித்தார்.....

என்னத்த சொல்ல....இது வரை அவரை மரியாதையுடன் அழைத்து வந்த நான்...சற்று தடுமாற்றத்துடன்...

"அய்யா...என்ன விட்ருங்க...இனி உங்க மானங்கெட்ட பொழப்புக்கு நான் வரல" என்று அந்த  சாட்டிலிருந்து வெளியேறினேன்...


இனி...அடுத்தவரை குறை சொல்லி பழகும் பழக்கத்தை சாமானியர்கள் மட்டும் அல்ல அறிவாளிகள் என்று தம்மை சொல்லிகொள்பர்களே(கொல்பவர்களே!) அதிகம் பிரயோகிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்....

கொசுறு: தாங்கள் எப்படிப்பட்ட பதிவுகள் இட வேண்டும் என்று யாரும் யாரிடமும் கேட்க்க வேண்டியதில்லை என்ற "அரிய" கருத்தை அறிந்து கொள்ளவே இந்த மொக்கை பதிவு ஹிஹி!

சொச்சம்: நண்பர்கள் கோவிக்க வேண்டாம்...இதில் சம்பந்தப்பட்டவர் என் நட்பு வட்டாரத்தில் இல்லாதவர் ஹிஹி!

Post Comment