Followers

Showing posts with label விவசாயி. Show all posts
Showing posts with label விவசாயி. Show all posts

Wednesday, May 25, 2011

வியட்நாம் - ஜெயித்துகொண்டு இருக்கும் விவசாயி!

வணக்கம் நண்பர்களே.........கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி........முன்னேற்ற பாதையிலே மனச வச்சி......மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ.......விவசாயி...விவசாயி....


எனக்கு எப்பெல்லாம் நேரம் கெடைக்குதோ.......அப்பெல்லாம் வியாபாரம் மற்றும் அதே நேரத்துல நம்ம நாட்டுக்கு அனுப்புராப்போல எதாவது உபயோகமான பொருள தேடி கொண்டு இருப்பேன்....அப்படித்தான் நேத்து ஒரு ஊருக்கு பயணமானேன்........

அன்பான மக்கள்........மஞ்சள் மக்கள், கருப்பு தக்காளிய(!) பாத்து சந்தோசமா பேசுனது மனசுக்கு இன்னும் அதிக சந்தோசத்த கொடுத்தது.........சரி விஷயத்துக்கு வர்றேன்........

இந்த ஊரு நகரத்திலிருந்து உள் வாங்கி இருக்கு........விவசாயம் மட்டுமே மேலோங்கி இருக்கு.........அதில் முக்கியமா இந்த செடி ரொம்ப முக்கியமா பட்டது எனக்கு...........ஏன்னா இந்த செடி விளையற பூமி..........தங்கம் விளையற மாதிரி........


இதன் பெயர் ஆர்டி என்று சொல்லப்படுது.......இதில் இருந்து தான் மலேரியாவுக்கு எதிரான மருந்து கிடைக்கப்படுது...........ரொம்ப அரிய வகை தாவரம் இது.........அதிக பட்சம் 5 அடி உயரம் வரை வளருமாம்....இந்தியாவிலும் விளையுது ஆனா நிறைய இல்ல(இந்தியாவிலே இதன் தேவை அதிகம்!) ........ஏன்னா இது ஒரு குறிப்பிட்ட கால நிலையில தான் விளையுமாம்...........வருசத்துல நாலு மாசம் மட்டுமே அறுவடை......


இந்த செடி 1000 கிலோ போட்டு அதனோட சில பொருள்கள் சேர்த்து அரைச்சி எடுத்தா 3 கிலோ மட்டுமே அந்த மூலப்பொருள்(ஆர்டிமிசினின்) வரும்.........அப்போ பாத்துக்கோங்க எவ்ளோ கிலோ செடி தேவைப்படுதுன்னு ...

இதை பக்கத்து நாடான சீனா எப்படியும் வளைக்க முயற்சித்து தோத்துடுச்சி(போரில் மட்டுமில்லாம, விவசாயத்திலும்!)..........அதாவது இந்த மூலப்பொருளின் விலையை அடி மாட்டு விலைக்கு விற்றால் வியத்நாமிய வியாபாரம் முடங்கிடும்னு அவங்க யோசிச்சி இருக்காங்க........ஏன்னா அவங்க நாட்டுலயும் இந்த செடி விளையுது......பல விவசாயிகள் நொடிஞ்சி போயி இந்த செடிய பயிரிடுரத நிறுத்திட்டாங்க.......


அப்பிடியும் கடந்த 10 வருசமா போராடி ஜெயிச்சிட்டு இருக்கும் ஒரு விவசாயி மற்றும் வியாபாரிய தான் நான் சந்திச்சேன்........இந்தியர் அப்படின்ன உடனே அவரும் நல்லா பேசுனாரு......இப்போ அந்த பொருள் இந்தியாவுக்கு மலேரியா எதிர்ப்பு மருத்துவத்துக்காக அனுப்ப ஒப்பந்தம் கைய்யேழுத்தாயிடுச்சி......வியாபாரமா இருந்தாலும் அது நம்ம நாட்டுக்குன்னு நினைக்கும் போது ஒரு சின்ன சந்தோசம்..............


கொசுறு: எந்த நாட்டுல இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில சொந்த நாட்டுக்கு உதவியா இருக்க முயற்சிக்கணும் அப்படிங்கற ஒரு சின்ன முயற்சியே இது.........அந்த படங்கள்....புதிய தம்பதி(!) மற்றும் அந்த வழியே போகும் குழந்தைகள்(!)........ஹிஹி........

Post Comment