Followers

Thursday, June 30, 2011

இவங்கல்லாம் நண்பர்களா!

வணக்கம் நண்பர்களே.....


சமீபத்தில் ரெண்டு பழைய நண்பர்களிடம் பேச நேர்ந்தது...இந்த ரெண்டு நல்லவங்களும்(!) எனக்கு ஒரு காலத்துல முக்கிய(முக்காத!) நண்பர்கள்...ஒருத்தரு காலேஜ் முடிச்சப்புறம் சொந்த நிலத்த பாக்க போயிட்டாரு...இன்னொருத்தரு B.E படிச்சி முடிசிட்டதா சொல்லி ஏமாத்திட்டு திரியிறாரு(இன்னும் அரியர்ஸ் இருக்கு!)...

ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமைன்னா அது ரெண்டு பெரும் அரசியல்வாதி ஆயிட்டானுங்க(ஆயிட்டார்கள்!)....திடீர்ன்னு என் ஞாபகம் வந்து என்னோட மெயில்ல தொடர்பு கொண்டார்கள்...நானும் பம்மிகிட்டே பேசுனேன்..அரசியல் வியாதிகள் ஆச்சே சாக்கிரதையா இருக்கோனும்ல...

தொலைபேசி உரையாடல் உங்களுக்காக...... 

என்ன மாப்ள எப்படி இருக்க...

இதுவரைக்கும் நல்லாத்தான் இருக்கேன்...நீங்க....

என்னய்யா புதுசா மரியாதை எல்லாம் குடுக்கற....

நீங்க இப்போ பெரிய ஆளுங்கன்னோவ்...


அப்படியெல்லாம் இல்ல..திடீர்னு உன் ஞாபகம் வந்தது....அதான் எப்படி உன்ன புடிக்கறதுன்னு யோசிச்சேன்....நம்ம பஷீரு உன் மெயில் ஐ டி கொடுத்தான்!...எப்படியோ ரொம்ப வருஷம் கழிச்சி உன்ன புடிச்சிட்டேன்...மாப்ள!

அப்புறம் எப்படி போகுது அரசியலு...

அதான் பாக்குற இல்ல..நம்ம ஆட்சி நடக்குது...இனி பாரு எப்படி போகுதுன்னு...சரி உன் குடும்பம் எப்படி இருக்கு...

எல்லாம் நல்லா இருக்காங்க..உன் வீட்ல எப்படி இருக்காங்க...

அவங்களுக்கு என்ன சூப்பரா இருக்காங்க...

நான் ஒன்னு கேள்விப்பட்டனே...

சொல்லு மாப்ள....

இல்ல...நீ போற வண்டிக்கு முன்னாடி ஒரு Scorpio பின்னாடி ஒரு Scorpio போகுதாமே..

என்ன பண்றது ஒரு பாதுகாப்புக்குத்தான்(!)....

சரிய்யா அந்த அரியர்ஸ முடிச்சியா....

டேய் அத ஏன்டா இப்போ ஞாபகப்படுத்துரே...இங்க நான் முடிசிட்டதா தான் மெயின்டைன் பண்றேன்...

(பயபுள்ள இப்பவும் அப்படியேத்தான் இருக்கா!)

வேற என்ன விசேஷம்....

சரி எப்போ ஊருக்கு வர்ற சொல்லு...

இல்ல நண்பா இப்போதைக்கு இல்ல....


டேய் அங்க என்னத்த சம்பாதிக்கற...வந்து சேரு இங்க ராசா மாதிரி நான் பாத்துக்கறேன்(ஏற்கனவே இந்த பேருல ஒருத்தரு களி தின்றாரு!)....

அதெல்லாம் வேண்டாம்யா...

ஏன்..உன் பேச்சி ரொம்ப தள்ளியே காட்டுதே...உனக்கு அரசியல் ஆர்வம் அதிகம்னு எனக்கு தெரியும்யா...

அப்படியெல்லாம் இல்லையா....விடு!

அதெல்லாம் முடியாது நீ சீக்கிரத்துல வர்ற...என்னடா ரொம்ப பிகு பண்ற...

மாப்ள கண்டிப்பா...சீக்கிரத்துல வந்து நேர்ல பேசுறேன்...


இந்த நண்பர் இப்போது பெரிய தொழில் அதிபர்...அதுவும் கட்டிட காண்ட்ராக்ட் தொழிலில் தனக்கென்று தனி பெயர் எடுத்து இருக்கிறார்(நல்ல பேர்தாங்க!)...

இவர் இப்போதைய ஆட்சி பொறுப்பில் உள்ள புள்ளி(!)...இன்னொரு நண்பரை பற்றி நாளை சொல்கிறேன்..

கொசுறு: அரசியல் பாதை தனிப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே என் அவா!....காலம் என்னை எந்த வழியில் பயணிக்க சொல்லப்போகிறதோ...காத்திருக்கிறேன்...! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

FOOD said...

சீக்கிரம் ஒரு அரசியல் தலைவரா வலம் வருவீங்க!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kudiya sekeram thikar la unkala pakkalam.

மைந்தன் சிவா said...

தலைவரு வாழ்க!!!
இலவச ஒட்டு போடுவீங்களா மொக்கை பதிவுகளுக்கும் அப்புறம்?

சி.பி.செந்தில்குமார் said...

வியட்நாமின் தில்லு தொர

koodal bala said...

பாத்து .....கவனம் மாம்ஸ்

நிரூபன் said...

உங்கள் நண்பர்கள் மூலமாக, அரசியல்வாதிகளின் பின்னணியை விளக்கியிருக்கிறீங்க.

பார்த்துங்க, வியட்னாமுக்கு ஆட்டோ அனுப்பிடப் போறாங்க.

கந்தசாமி. said...

வருங்கால முதல்வர் வாழ்க ..))

தேவைகளற்றவனின் அடிமை said...

அப்ப உங்கள காக்கா புடிசுக்குறது நல்லது........

Shiva sky said...

ஹ haa.....

THOPPITHOPPI said...

//அரசியல் பாதை தனிப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே என் அவா!....காலம் என்னை எந்த வழியில் பயணிக்க சொல்லப்போகிறதோ...காத்திருக்கிறேன்...! //

அப்ப உங்க கட்சி கொ.ப.செ நாந்தான்

ஜீ... said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்! சீக்கிரமா நல்ல அரசியல்வாதியாக....!

தமிழ்வாசி - Prakash said...

தடம் மாறப் போகும் மாம்ஸ்...

செங்கோவி said...

தனிப்பாதை கஷ்டம் மாமூ..இப்போதைக்கு இதுல இருந்தே ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க..

டக்கால்டி said...

neenga paathai amaikkarathu ellaam irukkatum...

pathivikku vanthaa makkal sendru vara nalla paathai podunga (oozhal illaama!!!)

டக்கால்டி said...

thamaasu thamaasu

டக்கால்டி said...

he he he

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

maaple.. late?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எதா இருந்தாலும் நீ சரியா செய்வேன்னு நம்பிக்கை இருக்கு, வாழ்த்துக்கள் மாப்ள....!