Followers

Wednesday, July 20, 2011

சிவாஜின்னா சும்மாவா! (அடைந்தேன் 1 லட்சம்!)

வணக்கம் நண்பர்களே.....

முதலில் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம்மார்ந்த நன்றி!...நான் டைப்புவது(!) கன்றாவியா இருந்தாலும் அதை சகித்து கொண்டு ஒரு லட்சம் ஹிட்சை அடைய உறுதுணையாக இருந்த உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் கோல்ட் சல்யூட்!


கடந்த சினிகூத்தர்களின் காப்பி சேவை  பதிவுல ஒரு நண்பர் என்னை அர்ச்சனை செய்ஞ்சி இருந்தார் (ஹிஹி!)....அப்புறம்தான் தான் கொஞ்சம் எனக்கு தோணினத பதியலாம்னு நினைத்த போது வந்த பதிவு இது...



சிவாஜி - இந்த பெயரை சொல்லும்போதே ஒரு கர்ஜனை தோன்றும்....அந்தகாலத்து சரித்திர சிவாஜிஇடமிருந்து இந்த கர்ஜனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது......நான் சொல்ல வந்தது நம்ம சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் அய்யாவை பற்றியது....


எல்லோரும் இந்தக்காலத்தில் உலக சினிமா பாக்க வாய்ப்புகள் அதிகமா கிடைக்குது...டிவி பொட்டியிலயும் புரியும் படியா தமிழ்ல மொழிமாற்றத்துடன் படங்களை தருவதால் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்து இருக்கிறது...அதிலும் குறை என்னனா எல்லாம் சண்டை படங்களாகவோ அல்லது பேய் படங்களாகவோ(சில நேரத்தில் குழந்தைங்க படங்கள்!) போடுறாங்க.....


இந்தக்காலத்து இளவட்டங்கள்.....அதுவும் கணிப்பொறி கிடைத்தோர் உலக படங்களை எளிதா பாத்துடறாங்க....என்ன இருந்தாலும் நம்ம ஊருல இருந்து நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு பாடுபட்ட பல சரித்திர புருஷர்களை நம் கண் முன் நிறுத்துன நடிகர் திரு. சிவாஜி அவர்கள் தான் என்பது பொதுவான கருத்து....


இன்னைக்கும் நமக்கு "கட்ட பொம்மு" எப்படி இருந்திருப்பாருன்னு ஒரு கற்ப்பன பண்ணி பாக்க நெனச்சா சிம்மக்குரலோன் முகம் தான் ஞாபகம் வரும்.....கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் நினச்சாலும் இவரோட ஞாபகம்தான் வரும்...பல மறைந்த மகான்களை இவரின் துணை கொண்டுதான் நாம் நம் மனத்தில் பதிய முடிந்தது....


பொதுவா மனுசங்களுக்கு ஒரு கெட்ட குணம் உண்டு...அது என்னன்னா கையில இருக்குற விஷயத்த மதிப்பது கிடையாது.....தூர இருக்க விஷயத்த தான் அண்ணாந்து பாத்து கொட்டாவி விடுவாங்க(ஹிஹி என்னைய சொல்லிக்கிறேன்!).....


அந்தக்காலத்துல நாடக மேடைல நடிச்சி புகழ் பெற்று பின்பு தன் நடிப்பால இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் சிவாஜி அவர்கள்....அவர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு "மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு" என்பது!....நம்ம ஊருல யாராவது எமன் கிட்ட அனுமதி வாங்கிட்டாங்கன்னா(!)...அதுவும் நமக்கு பிடிச்ச நெருக்கமானவங்களா இருந்தா எப்படி அழாமல் இருப்போம்...

நாம என்ன ப்ரெட் பட்டர் பாமிலியா....தூரத்துல நின்னு god உங்கள பாத்துப்பாருன்னு சொல்லிட்டு கோட்டு போட்டு நிக்க!....உணர்ச்சி வசப்பட்ட மனிதன் என்னவெல்லாம் செய்வானோ அதை சிம்மக்குரலோனின் நடிப்பில் நாம் பார்த்தோம்....இன்று வரை அந்த குரல் காதில் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது...



எப்பேர்பட்ட அப்பா டக்கரும் எங்கள் தமிழ் நடிகன் சிவாஜியிடம் நடிப்பில் நெருங்க முடியாது என்பதை இந்தப்பதிவில் என் கருத்தாக பதிய வைக்கிறேன்...நன்றி!....


கொசுறு: அந்த முகம் தெரியாத அன்பருக்கு நன்றி!...அடைந்தேன் 1 லட்சம் வருகை பதிவேடு! - ஹிட்ஸ்பா!...இத வச்சி தக்காளி(!) பெரிய பணக்காரன் ஆயிட்டான்னு நண்பர்கள் நினைக்க வேண்டாம்(!) என்று நன்றியுடன் கேட்டுக்கொள்கிறேன்...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Nice.,
Thanks for sharing..
maapla..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

tirattila inaikkavum..
iam in mobile..

மதுரை சரவணன் said...

nalla irukkungka... vaalththukkal

இராஜராஜேஸ்வரி said...

இலட்சம் பல இலட்சமாக
இறைவன் அருளட்டும். வாழ்த்துக்கள்.

சிம்மக்குரலில் கர்ஜித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஜீ... said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்! :-)

ஆகுலன் said...

"மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு" என்பது!...

இதுதான் என்னுடைய கருத்தும் பழைய படங்களை பற்றி....

கூகிளுக்கு ஏன் இந்த வேலை????

செங்கோவி said...

ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கி, லட்சாதிபதிகள் லிஸ்ட்டில் இணையும் நண்பனுக்கு வாழ்த்துகள்.

செங்கோவி said...

//எப்பேர்பட்ட அப்பா டக்கரும் எங்கள் தமிழ் நடிகன் சிவாஜியிடம் நடிப்பில் நெருங்க முடியாது //

சூப்பர் விக்கி..நீங்க எழுதுனதிலேயே டாப் இந்த வரிகள் தான்..நானும் இதைப் பத்ட்ஜி எழுதணும்!

Carfire said...

சீக்கிரம் மில்லேனியர் ஆக வாழ்த்துக்கள் மாம்ஸ்....
எல்லாம் எங்க கடின உழைப்பு தான் மறந்துடாதிங்க....

கந்தசாமி. said...

// ஊருல இருந்து நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு பாடுபட்ட பல சரித்திர புருஷர்களை நம் கண் முன் நிறுத்துன நடிகர் திரு. சிவாஜி அவர்கள் தான் என்பது பொதுவான கருத்து....
//உண்மை தான் நண்பா .கர்ணனை கண்டது சிவாஜி வடிவில் கட்டப்பொம்மனை கண்டதும் சிவாஜி வடிவில் ...

வாழ்த்துக்கள் நண்பா .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

உன் மனைவி கிட்டே எத்தனை ஹிட்ஸ்? (உதை )வாங்குனே?

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் மாப்ள

நா.மணிவண்ணன் said...

வாழ்த்துக்கள்

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ஒரு சகாப்தத்தை பற்றி சிறு துளி

கலக்குற மாப்ள

வாழ்த்துக்கள்... (1 லட்சம் ஹிட்ஸ் வாங்குனதுக்கு)

koodal bala said...

கட்ட பொம்மன் எப்படி இருந்திருப்பார் என யூகித்தோமானால் சிவாஜிதான் கண் முன் தோன்றுவார் ....அப்படி ஒரு நடிப்பு .சாதனைக்கு வாழ்த்துக்கள் ....!

பாலா said...

சிவாஜியின் நடிப்பு என்பது உண்மையிலேயே சிறப்பானதுதான். அப்புறம் மாப்ள லட்சத்துக்கு வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள ஓட்டு போட்டுட்டேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

எட்டிய லட்சத்திற்க்கும்...
எட்டப்போகும் லட்சியத்திற்க்கும்
என் வாழ்த்துக்கள்...

FOOD said...

லட்சங்கள் கோடியாக நல்வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி - Prakash said...

பல லட்சம் ஹிட்ஸ் வாங்க வாழ்த்துக்கள்.

மைந்தன் சிவா said...

வாழ்த்த்துக்கள் தல...
பதிவு கலக்கல்!

மாய உலகம் said...

நடிகர் சத்தியராஜ் மேடையில் சொன்னதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்....
சத்தியராஜ்: எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ஆனால் திருவிளையாடல்ல சிவாஜிகணேசன் சிவனாக வருவதை பார்க்கும் போது ஒருவேளை சிவன் இருப்பாரோ என்ற எண்ணத்தை தூண்டியது....

சிவாஜிகணேசனின் சவ ஊர்வலத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி ரஜினிகாந்த் சொன்னதையும் சுட்டிக்காட்டுகிறேன்..
ரஜினிகாந்த்: யாரோ ஒரு ரசிகன் மரத்தின் மீது இருந்து சொன்னார்... இருந்ததே ஒரே நடிகர் அவரையும் கொன்னூட்டீங்களேடா....

இப்படி நமது சிம்ம குரலோனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...

காட்டான் said...

மாயா உலகம் சொல்வது எவ்வளவு உண்மை வாழ்த்துக்கள் மாப்பிள...          100 000கிட்ஸ் என்பது பதிவுலகில் முக்கியமான கட்டம்தான் ..

உங்களிடம் சகிப்புத்தன்மை இருக்கிறது இது எல்லோருக்கும் கை கூடி வருவதில்லை இல்லையென்றால் இந்த காட்டானின் கிறுக்கள்களையும் பதிவென்று அனுமதிப்பீர்களா..?

காட்டான் குழ போட்டான்..

நிரூபன் said...

சிவாஜியால் தலை நிமிர்ந்த தமிழ் சினிமா பற்றிய- சிவாஜியின் பெருமை கூறும் பதிவு கலக்கல்.

நிரூபன் said...

ஒரு இலட்சம் ஹிட்ஸிற்கு பிந்திய வாழ்த்துக்கள். தொடர்ந்தும் பல்வேறு பதிவுகளோடு பல்சுவையான விடயங்களோடு பல இலட்சம் ஹிட்ஸ்களை அடைய வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தாமதமான வாழ்த்துக்கள் மாப்ள....