Followers

Thursday, July 7, 2011

கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-2

வணக்கம் நண்பர்களே....

கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-1 - முதல் பாகம்!

அந்த சம்பவத்துக்கு காரணமான ஆள் யாருன்னு கண்டு பிடிச்சாங்க...வேற யாருமில்லை நான்தான்!...எங்க NCC வாத்தியாரு மன்னிக்கவும் விரிவுரையாளர் முன்னே நிக்க வைக்கப்பட்டேன்....

உனக்கு இந்த காலேஜில சீட் கொடுக்கும்போது என்ன சொன்னேன்...ஞாபகம் இருக்கா!..

இருக்கு சார்!..

எங்க சொல்லு பாப்போம்!

(அமைதியா இருந்தேன்!..அவரே பேச ஆரம்பித்தார்!)

இந்த காலேஜ் ஒரு கோயில் மாதிரி...இங்க வந்து அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் பண்ணக்கூடாதுன்னு முதல்லையே சொன்னேன்ல...இப்போ இப்படி வம்பு வாங்கி வந்து காலேஜ் பேர கெடுக்க பாக்குறியா....

அப்படியில்ல சார்...வந்து...


உன்னை ஒரு மாசத்துக்கு சஸ்பென்ட் பண்ணி இருக்காங்க...உன்ன காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்ண சொன்னாங்க...ஆனா உன் எதிர்காலத்த நெனச்சி நான் கேட்டு கிட்டதால சஸ்பென்ட்டோட  போச்சி பாத்துக்க என்றார்!....(நான் வெளி நாட்டில் இருந்து வந்து கொண்டு இருந்த கல்வி உதவித்தொகையின் மூலம் படித்து வந்தது அவருக்கு தெரியும்!..இது தெரிந்தால் அதுவும் நிறுத்தப்படும்)....இன்னும் இதில் சம்பந்த்தப்பட்ட 4 பேரையும் இதே போல செய்ய சொல்லி சொல்லிட்டாங்க...என்றார்!


இல்ல சார்...இதில் யாரும் என்னுடன் இல்லை...நான் மட்டும் தான் காரணம் என்றேன்!....

இதை அப்படியே பிரின்சிகிட்ட வந்து சொல்லு என்றார்!.....


நான் செய்த தவறுக்காக என் நண்பர்களையும் அதில் கோர்த்து விட எனக்கு மனமில்லாமல் ப்ரின்சியிடம் தவறை ஒத்துக்கொண்டேன்!....அவரும் பெரிய மனதுடன் எனக்கு மட்டும் ஒரு மாத தடை விதித்தார்(!).....

இதை வீட்டில் சொல்ல முடியாமல் அடுத்த நாள் காலேஜ் வருவது போல கிளம்பலானேன்!.....அன்று மாலை மாமா வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்து சென்றேன்...அப்போது கோடம்பாக்க ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த அவர் வீட்டுக்கு போகும் வழியில் சென்று கொண்டு இருந்தேன்....அந்த மங்கிய ஒளியில் எதிர் வந்தவர்கள் யார் என்று தெரிய வில்லை.......


திடீரென்று அடிக்க ஆரம்பித்தனர்...கட்டையா, ஹாக்கி ஸ்டிக்கா தெரியவில்லை...கும்மி எடுத்து விட்டனர்....ஏன் அடிச்சாங்க எதுக்கு அடிச்சாங்கன்னே தெரியல(சொல்லிட்டாவது அடிச்சிருக்கலாம்!)...பய புள்ளைங்க நெறைய வீனாப்போனவங்க படம் பாக்குங்க போல சுத்தி சுத்தி அடிச்சிதுங்க....கிட்ட தட்ட பல நிமிடங்கள் அங்கு கிடந்து இருப்பேன்....அந்த பக்கம் போன ஒரு புண்ணிய ஆத்மா என் முனகல் சத்தம் கேட்டு என்னை சிலரின் துணை கொண்டு பக்கத்தில் இருந்த டீக்கடையில் உட்கார வைத்தார்....

"என்ன தம்பி என்ன ஆச்சி!"

பேச வாய் திறக்க முயன்றேன் முடியவில்லை வலி உயிர் போவது போல் இருந்தது....உதடு கிழிந்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.....அந்த டீக்கடைக்காரர் கோலா வைக்கும் பெட்டியை திறந்து உள்ளிருந்து ஒரு சிறிய ஐஸ் துண்டை எடுத்து ரத்தம் வரும் இடத்தில் வைத்து ஆறுதல் அளித்தார்....


பக்கத்தில் இருந்த நண்பியின்(இவங்க இப்போ பெரிய டிவி சானல்ல செய்தி வாசிப்பாளர்!) வீடு போன் நம்பரை என் இடது கையால்(!) எழுதி கொடுத்தேன்...(ரைட்ட உடசிட்டாங்க போல!)...சிறிது நேரத்தில் அவளும், அவளுடைய நண்பியும் அங்கு வந்து சேர்ந்தனர்....என்னை அவர்கள் வீட்டுக்கு ஆட்டோ வைத்து கொண்டு சென்றனர்!...(ஆஸ்பத்திரின்னாலே எனக்கு அலர்ஜி!)....

அப்போது தான் அவளுடன் வந்த அந்த நண்பியின் நட்பு கிடைத்தது....அது என்னை இன்னும் ஒரு பாதாளத்துக்கு இட்டு செல்லும் என்று அப்போதைக்கு தெரியாது....(ரண களத்திலும் கிளு கிளுப்பு இது ஒரு மானம்கெட்ட பொழப்பு!)

தொடரும்.....

கொசுறு:  ஒரு விஷயத்த சொல்லிடுறேன்...எனக்கு தனிப்பட்ட இமேஜின்னு ஒன்னும் இல்ல(நான் என்ன அம்மாம்பெரிய அப்பாடக்கரா!) ...நண்பரின் கேள்விக்கான பதில் இது!....ஹிஹி அம்புட்டு தானுங்க...!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

17 comments:

MANO நாஞ்சில் மனோ said...

(ரண களத்திலும் கிளு கிளுப்பு இது ஒரு மானம்கெட்ட பொழப்பு!)//

நாதாரி சிபி'க்கு வேலை குடுத்துட்டியே மக்கா.....

MANO நாஞ்சில் மனோ said...

வடை தம்பி எனக்கே ஹி ஹி,,,,,

MANO நாஞ்சில் மனோ said...

நாங்க இப்போ ரவுண்டு கட்டி அடிக்கலாம்னு நினச்சா, நீ அப்பமே வாங்கி கட்டிகிட்டியா மக்கா ஹே ஹே ஹே ஹே.....

FOOD said...

காலேஜ் கலாட்டா, கடை வீதி வரைக்கும் வந்திட்டுதா?

FOOD said...

//என்னை அவர்கள் வீட்டுக்கு ஆட்டோ வைத்து கொண்டு சென்றனர்!...//
அப்புறம், மருந்து போட்டு, ஒத்தடம் கொடுத்தாங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>நான் செய்த தவறுக்காக என் நண்பர்களையும் அதில் கோர்த்து விட எனக்கு மனமில்லாமல் ப்ரின்சியிடம் தவறை ஒத்துக்கொண்டேன்!.

தம்பி.. நீ கோர்த்து விடரதுல மன்னன் ஆச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒரு விஷயத்த சொல்லிடுறேன்...எனக்கு தனிப்பட்ட இமேஜின்னு ஒன்னும் இல்ல

aamaa ஆமா.. தண்ணி போட்ட இமேஜ் மட்டும் தான் டேமேஜ் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>அப்போது தான் அவளுடன் வந்த அந்த நண்பியின் நட்பு கிடைத்தது....அது என்னை இன்னும் ஒரு பாதாளத்துக்கு இட்டு செல்லும் என்று அப்போதைக்கு தெரியாது.

பாதாள பைரவியும்,விக்கி தக்காளியின் லீலைகளூம் - எப்படி டைட்டில்? ஹி ஹி

தமிழ்வாசி - Prakash said...

ஓகே....ரைட்டு

நாய்க்குட்டி மனசு said...

சந்தோஷங்கள் நிறைந்த அந்த வெள்ளைப் பை எந்தக் கடையில் கிடைக்கும்.
தம்பி, தமிழ் வாசி கொஞ்ச நாளா "ஓகே ! ரைட் " தவிர எதுவும் சொல்றதில்லை . யாராவது பயமுறுத்திட்டாகளா?

ஜீ... said...

ஆகா! கலக்கல் மாம்ஸ்! உங்க பிரண்ட்ஸ் எல்லாருமே பெரிய பிரபலங்கள் போல! செய்தி வாசிப்பாளர், ஹரிஸ் ராகவேந்திரா..!
சூப்பர் மாம்ஸ்!

செங்கோவி said...

//பாதாள பைரவியும்,விக்கி தக்காளியின் லீலைகளூம் - எப்படி டைட்டில்?// ஹா.ஹா..விக்கி, இந்தாளை உள்ள விடாதய்யா..

Niroo said...

"என்ன தம்பி என்ன ஆச்சி!"//

தம்பியா? தாத்தாவா? #டவுட்டு

சசிகுமார் said...

கோடம்பாக்கத்துல மாமா வீடு எங்கன்னு சொல்லு மாப்ள ஆறு வருஷமா இங்க தான் இருக்கேன் உங்க மாமா இருக்குற விஷயமே தெரியாதே... மாமா வீடு இருக்கும் பொது நான் என் ஹோட்டல்ல சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்கணும் ஹி ஹி

நிரூபன் said...

அசத்தலான எழுத்து நடையில்,

கல்லூரி வாழ்வின் நினைவுகளை மீட்டித் தொடரினை நகர்த்துறீங்க.

இப் பதிவில் உங்களுக்கு ஒரு மாத லீவு கொடுத்தமை,

கூட்டாம சேர்ந்து கும்மியமை..மனதை கனக்க வைக்கிறது.

அம்பாளடியாள் said...

பழைய நினைப்பு!....பகிர்வுக்கு நன்றி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனா நல்லா அடிச்சாங்கள்ல?