Followers

Thursday, July 28, 2011

இப்படி பாத்து இருக்கீங்களா? - வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே..........



நேற்று ஒரு புதுவித அனுபவமாக இருந்திருக்கும் என் மனைவிக்கும், மகனுக்கும்...ஏனெனில் INS Airavat (ஐராவதம்!) - எனும் பெயர் கொண்ட இந்தியாவின் போர்க்கப்பல் வியட்நாம் வந்து இருந்தது...அழைப்பின் பேரில் சென்று இருந்தோம்...


ஹோனாயிலிருந்து துறைமுகத்திற்கு கிட்ட தட்ட 90 கிமீ தூரம் இருக்கும்...துறைமுகத்தின் பெயர் - ஹைபோங்!....அழகிய துறைமுகம் என்று சொல்ல முடியாவிட்டாலும்....முக்கிய துறைமுகம் என்று சொல்லலாம்!...2 மணி நேர பயணத்தில்(உபயம் -தூதரக பஸ்!) போய் சேர்ந்தோம்....


பெரிய போர் கப்பல் என்பதால் அனுமதி கெடுபிடிகள் அதிகம்...அதுவும் எங்களின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்த லிஸ்ட் காணாமல் போயிருந்தது குறிப்படத்தக்கது...அனைவரையும்(10 இந்தியர்கள், 15 வியட்நாமியர்!) கரையிலேயே நிற்க வைத்து விட்டார்கள் வியட்நாமிய போலீஸ்காரர்கள்!....பின் அந்த கப்பலின் கேப்டனிடம்(ப்ளாக் டைசன் அல்ல!) பேசிப்பார்த்தோம்....அவரும் இந்தியர்களை மட்டுமாவது அனுமதிக்குமாறு அந்த அதிகார்களிடம் பேசி அனுமதி வாங்கினார்......


எவ்வளவு பெரிய கப்பல்....உள்ளே டாங்கு மற்றும் ஒரு பெரிய அளவிலான லாரி நிற்கும் அளவுக்கு கீழ் தளம் இருந்தது...நல்லிணக்க காரணமாக வந்து இருந்ததால் அதனை தாங்கி வரவில்லை கப்பல்.....மேலும் மேல் தளத்தில் நவீன ரக ஹெலிகாப்டர்(ரோந்து!) நிற்க வைக்கப்பட்டு இருந்தது.....அது எவ்வாறு அந்த தளத்தில் இருந்து மேலெழும்பும் என்று விளக்கப்படுத்தினார் ஒரு அதிகாரி....


மொத்தம் 20 ஆபிசர்களும், 180 சிப்பந்திகளும் இந்த கப்பலில் பயணம் செய்கின்றனர்......அப்படியே பார்த்து கொண்டு வந்த போது ஒரு அதிகாரி என்னை பார்த்து தமிழா என்றார்...ஆமாங்க என்றேன்...நீங்க என்ற போது அவர் தான் ஆந்திரம் என்றும் தமிழ் தெரியும் என்றும் சொல்லி அவருடைய ஆபீசர்கள் தாங்கும் குளிர் அறைக்கு கூட்டி சென்றார்....மேல் தளம் அதிகமான வெப்பத்தில் தகித்தது...உள்ளே மிதமான குளிர்(A/C) வீசிக்கொண்டு இருந்தது....

நலம் விசாரித்த வண்ணம் பேசலானேன்.....உள்ளே இருந்த மிகப்பெரிய LCD டிவியில் கேம் X எனப்படும் விஷயத்தை என் மகனிடம் கொடுத்து விளையாட சொல்லி விட்டார் அந்த அதிகாரி(கார் கேம் 3D)....அந்த அதிகாரியின் முகம் என் நண்பன் ஒருவரின் முகதத்தை போல இருந்தது...அன்னியோன்யமாக பேசினார்...சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான்(HIET) கல்லூரியில் ஏரோனாடிக்ஸ் படித்ததாக கூறினார்....(இந்த கல்லூரி கிண்டி முனை - ஜோதி தியேட்டர்(ஹிஹி!) அடுத்து இருக்கிறது)....

அவர் பேசிக்கொண்டே வந்தார்....எப்படிப்பட்ட வேலை...கடல் நடுவே செல்ல வேண்டும்...தொடர்ந்து பல வாரங்களாக கடலில்(கப்பலில்!) இருப்பதாகவும்...பொதுவாக மாதத்துக்கு சில நாட்கள் குடும்பத்தை பார்க்க முடியும் என்றும்(விடுமுறை அல்ல!) என்றும் கூறினார்....இந்த கப்பல் விஷாகப்பட்டினத்தில் இருந்து வருவதாகவும் வரும் வழியில் புரூனே, கம்போடியா மற்றும் ங்காசாங் (அழகிய வியட்நாமிய துறைமுகம்!) கடந்து வந்ததாக கூறினார்!.....

பல விஷயங்களையும்...போர் நேர நடை முறைகளையும் விளக்கினார் அந்த நண்பர்(காபி மற்றும் ஸ்நாக்ஸ் உடன்!)....எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது இந்த பயணம்...இரவு வந்து சேர்ந்தோம் இனிதாக!

கொசுறு: எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

42 comments:

கோவை நேரம் said...

நல்ல தகவல்

கோகுல் said...

நானும் கப்பலை நேரில் பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.நன்றி.\எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்.\உண்மைதான் .

தமிழ்வாசி - Prakash said...

நல்லவங்களுக்கு நண்பர்கள் சீக்கிரம் கிடைப்பாங்க.

தமிழ்வாசி - Prakash said...

துறைமுக அனுபவம் சூப்பரா பகிர்ந்திருக்கிங்க.

ஜீ... said...

கலக்கல்! வாழ்த்துக்கள் மாம்ஸ்! தொடர்ந்து நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும்!

மைந்தன் சிவா said...

கப்பல் பார்க்க போயிருக்கீங்க...கவிந்திடாதே??

யாழினி said...

வணக்கம் விக்கி, சென்ற மாதம் இந்த வாய்ப்பை நான் தவற விட்டேன். ஆனால் இப்போது கப்பலுக்குள் நேரடியாக சென்று பார்த்த அனுபவம் தந்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி !!

தனிமரம் said...

கப்பல்பார்த்ததை சுவையான பதிவாக்கியிருக்கிறீர்கள்! நட்பு விடயம் உண்மைதான்!

இந்திரா said...

நல்லதொரு பகிர்வு..
நண்பருக்கு நன்றி.

சசிகுமார் said...

ஆஹா மாப்ள கொடுத்து வச்சவரு நாம இங்கயே இருந்தாலும் நம்மள ஒரு நாய் கூப்பிட மாட்டேங்குது ஆனால் மாப்பிள்ளைக்காக வியட்நாம் சென்று சுற்றி காட்டி இருக்கிறார்கள் பெரிய ஆளு மச்சி நீ ஹீ ஹீ

நா.மணிவண்ணன் said...

அண்ணே கலக்கல்னே

///கொசுறு: எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..///

உங்க ராசி அப்படினே

பாலா said...

மாப்ள.. கப்பலுக்குள் சென்று சுற்றி பார்ப்பது ஒரு உன்னதமான அனுபவம் இல்லையா? நான் நிறைய கப்பல்களை பார்த்திருக்கிறேன். போர் கப்பல்களை பார்த்ததில்லை.

கந்தசாமி. said...

அழகிய அனுபவம் ..
அந்த கப்பலின் பெயர் ///ஐராவதம்!///இந்திரன் யானையின் பெயர் தானே ...))

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக் டெம்ப்ளேட் செமயா இருக்கே?அடிக்கடி மாத்திட்டே இருப்பதாலா? ஹி ஹி

# கவிதை வீதி # சௌந்தர் said...

உணர்ச்சி பூர்வமான அனுபவம்தான்...


பகிர்வுக்கு மிக்க நன்றி தல...

இராஜராஜேஸ்வரி said...

கப்பல் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..
///////

அது மிகப்பெரிய கலை....

உலக சினிமா ரசிகன் said...

நண்பா...கப்பலை பற்றி நேரடி ஒளிபரப்பாக இருந்தது... பதிவு...
செல்லும் இடம் எல்லாம் நண்பர்கள் கிடைப்பது...
உங்கள் நட்பின் விசாலத்தை காட்டுகிறது.

! சிவகுமார் ! said...

கப்பல் நின்னா இறங்கி தள்ளுவாங்களான்னு கேட்டீங்களா மாம்ஸ்!

செங்கோவி said...

நான் ஒர்க் பண்ணது வேற கப்பல்ல மாப்பு!

இந்திரா said...

என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

koodal bala said...

நல்ல அனுபவம் ......தாங்கள் கொடுத்து வைத்தவர்தான் ........

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்லா இருந்த டெண்ப்லேட் ஏன் மாப்ள மாத்துன?

சங்கவி said...

..எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்.....

மாப்ள உன் முக ராசி அப்படின்னு நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...

Ramani said...

உங்கள் தயவில் நாங்களும் கப்பலைக்
கண்டு ரசித்தோம்
இவனிடம் கொடுத்தால் பத்து பேருக்குப்
போய்ச் சேரும் என்றால் ஆண்டவன்
அள்ளி அள்ளிக் கொடுப்பானாம்
இல்லயேல் கொடுக்கமாட்டானாம்
உங்களுக்கு எங்கு சென்றாலும் நண்பர்கள்
கிடைப்பது கூட ஆண்டவனின்
சித்தமாக இருக்கும்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

FOOD said...

//எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..//
அத்துடன் விக்கியின் சொக்கத்தங்க குணமும் என்பேன். பகிர்வு அருமை நண்பரே. படித்து, பார்த்து ரசித்தேன்.

M.R said...

இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

M.R said...

தங்கள் தயவால் நானும் பார்த்தேன் கப்பலை .

பகிர்வுக்கு நன்றி நண்பரே

sundararajanche said...

hindusthan college old makabalipuram road il ullathu. gindiil iruppathu college in office.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டெம்ப்ளே நல்லாருக்கு, ஆனா வலது பக்கத்துல உள்ள எழுத்துக்கள் கலர் மாத்தனும், படிக்க முடியல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான அனுபவம் மாப்ள....

காட்டான் said...

நன்பர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அதுவும் நல்ல நன்பர்கள்..!?
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.. 

காட்டான் குழ போட்டான்...

மாய உலகம் said...

சூப்பரான அனுபவம் மச்சி

MANO நாஞ்சில் மனோ said...

அனுபவி ராசா அனுபவி ஹி ஹி....!!

MANO நாஞ்சில் மனோ said...

நண்பனா இருக்க நினைக்கிரவனுக்கு எங்கே போனாலும் நண்பன் கிடைச்சிருவான்ய்யா.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஐயய்யோ தமிழ்மணம் காணோமே....

நிரூபன் said...

டெம்பிளேட் கலக்கல், ஆனால் பதிவின் டைட்டில் டெம்பிளேட்டினுள் மறைகின்றதே.

நிரூபன் said...

ஓட்டுப் பட்டைகளைக் காணவில்லையே பாஸ்,
இந்த இணைப்பில் சென்று இணைக்கலாம்,

http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
இந்தியாவின் மிகப் பெரிய போர்க் கப்பலினைப் பார்த்து, ரசித்த விடயங்களோடு, அந்தக் கப்பல் பற்றிய சிறப்பினையும் பகிர்ந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

F.NIHAZA said...

@! ????????? !

super

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

ஷர்புதீன் said...

இண்டரஸ்டிங் !!