Followers

Thursday, July 14, 2011

அப்பாடக்கர்ஸ் டப்பா டான்ஸ் ஆடும் (கதை!)நேரம்! - Part 1

வணக்கம் நண்பர்களே.........


இந்த பதிவு ஒரு அல்கன்ஜாரா குல்கந்த்(!) மக்களை பற்றியது....சரி உங்க நேரத்தை யோசிச்சி பதிவை தொடருங்க....

ஒரு ஊர்ல ஒரு அப்பாடக்கரு இருந்தாரு...அவரு எவ்ளோ நல்லவருன்னா...எச்ச கையில காக்கா ஓட்ட மாட்டாரு...அதே நேரத்துல ஊருல வேலைவெட்டி எதுவும் கெடைக்காம சுத்திட்டு இருந்தாரு...அப்போ ஒரு மவராசனோட பிரசங்கத்த கேட்டாரு...உடனே அவருக்கு ஒரு ஐடியா வந்துது...இப்படி எவ்ளோ நாளைக்கு துட்டு இல்லாம இருக்கறது...உழைக்காம எப்படி துட்டு சம்பதிக்கரதுன்னு யோசிச்சாரு!....

அந்த மவராசன தொடர்ந்தா பெரிய வாழ்கை வாழலாம்னு திட்டம் போட்டாரு...அப்போ அவரு கூட பாவப்பட்ட ஜீவன் ஒன்னு நண்பன்னு சுத்திட்டு இருந்துது...அவரையும் கூட்டிக்கிட்டு அம்மாம் பெரிய டவுனுக்கு ரயிலு மூலமா போனாரு...போகும்போது பாவம் ரயிலுக்கு டிக்கட் எடுக்க கூட காசு இல்ல(!)...அந்த நல்ல மனுஷன்(!) அவரோட நண்பருக்கு அப்படியே டிக்கட்டு எடுக்காம எப்படி ரயிலுல பயணம் பண்றதுன்னு ஒரு செயல்முறை விளக்கத்தோட செய்ஞ்சி காட்டிகிட்டே டவுனுக்கு வந்து சேந்தாரு...


எப்படியோ ஒரு இடம் தங்குரத்துக்கு கெடச்சிது...அப்போ அந்த மவராசன்கிட்ட நம்பிக்கையான மனுசனா தன்ன காட்டிகிட்டாரு...மவராசனும் இவர நம்பி பொறுப்புகள கொடுத்தாரு....கொஞ்சம் கொஞ்சமா இன்ச் இன்சா தன்னை நிலை நிறுத்திக்கிட்டே வந்தாரு நம்ம அப்பாடக்கரு....இவரு பேசுற பேச்சை பாத்து பய புள்ளைங்க இவர ரொம்ப நல்லவருன்னு நம்பிடுச்சிங்க...இதான் சாக்குன்னு இவரும் அள்ளி விட்டாரு(பொய்களா!)....



அந்த நேரத்துல மவராசன் இன்னொரு மவராசங்கூட ஏற்பட்ட மனசு சங்கடத்தால அவர விட்டு பிரிஞ்சி(!)...நாட்டாம வேலைக்கு தனியா நின்னாரு...இதைத்தானே நம்மாளும் எதிர் பார்த்தாரு...உடனே அவரு பின்னாடி பூட்டாரு....பாசக்கார பய புள்ளைங்களோட விருப்பத்தால நாட்டாம போஸ்டு மவராசனுக்கு கெடச்சிடுச்சி!....ஆனா பாவம் அம்மாம் பெரிய அறிவாளிக்கு ஒரு கொடுமையான நோய் வந்து அவர காவு வாங்கிடுச்சி....


அந்த நெலமையில அவருக்கு பின்னாடி வரவேண்டிய 5 பேரும் தேம்பி தேம்பி அழுவுனாங்க....சரி அய்யா போயிட்டாரு அடுத்து சொம்பை(!) சரியான ஆளுகிட்ட கொடுத்து நாட்டாம போஸ்டிங்க காப்பதனும்னு எல்லாரும் யோசிச்சப்போ...நம்ம அப்பாடக்கரு தன் இன்னொரு நண்பரான ஜிஞ்சினுக்கா ஜினுக்க தேடிப்போனாறு....

தொடரும்.......


கொசுறு: பய புள்ளைங்க கதைன்னா ஒரு ஞாயம் வேணா(!)...தற்போதைய காலத்துக்கேத்தாப்போல சொல்லவேணாம்(!)...அதைவிட்டு புட்டு நீதி, நேர்மை, கருமை, எருமைன்னு சொன்னா யாருக்கு புரியும்!....இதப்பாருங்கப்பு ஒரு குயந்த கதை சொல்லுது யாரும் டென்சன் ஆகாம கேளுங்க ஹிஹி!


   
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

35 comments:

Carfire said...

வடை எனக்க????

Carfire said...

என்ன மாம்ஸ் தெரிஞ்ச கதையே சொல்றிங்க... நம்ம அப்படேக்கரு ஏன் கண்ணாடி போட்டுருக்கருனு சொல்லுங்க பார்க்கலாம்???

விக்கியுலகம் said...

@Carfire

" Carfire said...
என்ன மாம்ஸ் தெரிஞ்ச கதையே சொல்றிங்க... நம்ம அப்படேக்கரு ஏன் கண்ணாடி போட்டுருக்கருனு சொல்லுங்க பார்க்கலாம்???"

>>>>>

தான் பாக்குற டோங்குரா விஷயங்கள யாரும் கவனிசிடக்கூடாதுன்னு தானுங்க மாப்ள!

தமிழ்வாசி - Prakash said...

அப்பாடக்கர் கதை....விக்கி ரெண்டு தடவ படிச்சும் கண்ணை சுத்துதே...

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

" தமிழ்வாசி - Prakash said...
அப்பாடக்கர் கதை....விக்கி ரெண்டு தடவ படிச்சும் கண்ணை சுத்துதே..."

>>>>>

மாப்ள அப்போ உனக்கு வசதி தான் ஹிஹி!

koodal bala said...

சொம்பு அடிபடாம இருந்துச்சா .......

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இப்பவே கண்ண கட்டுதே...

காட்டான் said...

மாப்பிள நீ இண்டைக்கு காட்டான கவுக்கோனும்ன்னு நினைச்சு கத சொன்ன மாதிரி இருக்கு..!? காட்டானுக்கு தல சுத்துதையா...!? ஆனா எனக்கு செம்பு மட்டும் விளங்குது..! அததானே அடிக்கடி தூக்குவம் கொள்ளைக்கு போறதுக்கு..!

MANO நாஞ்சில் மனோ said...

இந்த எளவுல தொடரும் வேறயா...???

MANO நாஞ்சில் மனோ said...

பேசாம பன்னிகுட்டிக்கு போனை போட்ருவோமா....

MANO நாஞ்சில் மனோ said...

எளவு அந்த பக்கார்டி குப்பி எங்கே இருக்குன்னே தெரியாம மறந்து போச்சே இதை படிச்சுட்டு....

ஜீ... said...

தெரிஞ்ச கதைதானே மாம்ஸ்! :-)

ஜீ... said...

//நம்ம அப்பாடக்கரு தன் இன்னொரு நண்பரான ஜிஞ்சினுக்கா ஜினுக்க தேடிப்போனாறு.//
தனக்கு ஆப்பைத் தேடிக் கொண்டுவந்தாரு இல்ல?

நிரூபன் said...

இந்த பதிவு ஒரு அல்கன்ஜாரா குல்கந்த்(!) மக்களை பற்றியது....சரி உங்க நேரத்தை யோசிச்சி பதிவை தொடருங்க....//

ஆகா....அதென்னங்க பாஸ்< அல்கன்ஜாரா....இருங்க படிச்ச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

அதைவிட்டு புட்டு நீதி, நேர்மை, கருமை, எருமைன்னு சொன்னா யாருக்கு புரியும்!....இதப்பாருங்கப்பு ஒரு குயந்த கதை சொல்லுது யாரும் டென்சன் ஆகாம கேளுங்க ஹிஹி//

பாஸ், சம கால சர்ச்சைகளுக்கேற்ற ஒரு தீர்வாக கதை அமைந்து கொள்ளவுள்ளது என நினைக்கிறேன்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

இப்படியும் கதையா..

தொடருங்க....

சரியில்ல....... said...

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டிலே...

சசிகுமார் said...

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

நல்லா கதை விடறான் தக்காளி

FOOD said...

கதை சூப்பருங்கோ!

FOOD said...

//இதப்பாருங்கப்பு ஒரு குயந்த கதை சொல்லுது யாரும் டென்சன் ஆகாம கேளுங்க ஹிஹி!//
ஹி ஹி நம்புறோம்!

விக்கியுலகம் said...

@koodal bala

"koodal bala said...
சொம்பு அடிபடாம இருந்துச்சா ......."

>>>>>

கதை சொன்னா கேக்கணும் ஆராயப்படாது மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இப்பவே கண்ண கட்டுதே..."

>>>>>>>>

ஏன் அவ்ளோ மப்பா!

விக்கியுலகம் said...

@காட்டான்

" காட்டான் said...
மாப்பிள நீ இண்டைக்கு காட்டான கவுக்கோனும்ன்னு நினைச்சு கத சொன்ன மாதிரி இருக்கு..!? காட்டானுக்கு தல சுத்துதையா...!? ஆனா எனக்கு செம்பு மட்டும் விளங்குது..! அததானே அடிக்கடி தூக்குவம் கொள்ளைக்கு போறதுக்கு..!"

>>>>>>

பல பேர கொல்லையில உசுரோட புதச்சதுக்கும் அந்த சொம்பு தான் காரணம்யா!

விக்கியுலகம் said...

@ஜீ...

மாப்ள கதைய நீ சொல்லுவியா..விடமாட்டேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

அண்ணே கோவப்படாதீங்கன்னே!..

விக்கியுலகம் said...

@நிரூபன்

என்னமா கொடுக்கராங்கய்யா டீடைலு!

விக்கியுலகம் said...

@நிரூபன்

அராத்துன்னு அர்த்தம்யா!

விக்கியுலகம் said...

@M.R


மாப்ள தொடருங்க நீங்களும் ஹிஹி!

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said..."

>>>>>>>>>>>

மாப்ள தொடருங்க நீங்களும் ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

நல்ல வேலை வடை சுடல ஹிஹி!

விக்கியுலகம் said...

@சசிகுமார்
hohohoho!

விக்கியுலகம் said...

@சரியில்ல.......

சாகும் வரை போராட்டம் தொடரும் மாப்ள!

விக்கியுலகம் said...

@FOOD

நன்றிங்க அண்ணே!

விக்கியுலகம் said...

@FOOD

நல்ல வேலை நம்பிட்டீங்க...அண்ணே!