Followers

Monday, July 11, 2011

ஹனோயில் ஒரு ரங்கநாதன் தெரு! - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே.....



ரெண்டு நாளா வீட்ல இருக்க ரெண்டு குழந்தைங்க என்னைய பெண்டு எடுத்துடுச்சிங்க......இதை வாங்கணும் அத வாங்கணும்....டிரஸ் எடுக்கணும் பர்சு எடுக்கனும்னு சொல்லி ஓடவிட்டு துரத்துனாங்க பாருங்க முடியல....முடியல...எப்படித்தான் இந்த குடும்பஸ்தருங்க(!) இவ்வளோ விஷயத்தையும் தாங்குறாங்களோ(பேச்சுலர்ஸ் don't worry be happy!).....கல்யாணம் ஆகாதவங்க கோச்சிக்காதீங்கப்பா!....


சரி விஷயத்துக்கு வருவோம்...சென்னைல இருந்தா நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு நம்மள கொண்டு போய் அந்த ரங்கநாதன் தெருவுல விட்டு இடிவாங்கி வர வைக்கிறதுல ரொம்ப சந்தோசம்னு பயந்து நாடு விட்டு நாடு வந்தேன்யா...இங்கயும் நம்மள விடல...!

ஹாங் தவ் - இது அந்த தெரு பேருங்கய்யா.....இந்த தெரு ரொம்ப பிரபலம்...ஏன்னா ஹனோயிக்கு வரும் எல்லா வெளிநாட்டவரும் ரசிச்சி பொருள்கள் வாங்கும் இடம்...விலை மட்டும் கொஞ்சம் ஜாஸ்தி(!)....இந்த தெரு போக்குவரத்து நிரஞ்ச இடம்......


அதுவே வெள்ளி மாலை 6 மணி ஆச்சின்னா போதும்...அந்த தெருவின் ஆரம்பத்துல தடுப்ப போட்டு நிறுத்திப்புடுவாங்க வண்டிகளை......நடந்து தான் போகணும்..கிட்ட தட்ட ரெண்டு கிமீ க்கு இந்த கடைகள பரப்பி இருப்பாங்க....ரொம்ப கொறஞ்ச விலையில நிறைவா வாங்கிட்டு போகலாம்!


அதுவும் துணி வகைகள் அதிகம்....ஏன்னா வியட்நாமியர்கள் துணிக்கு செலவு பண்றதா பாத்தா பொறாமையா இருக்கும்...எடுத்தா ஒன்னு ரெண்டு இல்ல நாலு அஞ்சு துணி எடுப்பாங்க....இந்த காதல் ஜோடிங்க தொல்ல தாங்க முடியாது....பய புள்ளைங்க அந்த பக்கமா கடைய பாத்துகிட்டே இந்த பக்கமா இச் கொடுத்துட்டு நடந்து வருங்க...


கடைகள் சின்னதா இருந்தாலும் அழகா டெண்டுகள் வடிவத்துல வச்சிருப்பாங்க...பொதுவா வியட்நாமியர்கள் விலை கெடுபிடி (bargain) செய்வதில்லை...கடைகாரங்களும் அதிகமா விலை சொல்ல மாட்டாங்க...அதுவே வெளி நாட்டு காரங்க போனா மட்டும் விலை அதிகமா இருக்கும்(!)...நம்முடன் வியட்நாமிய ஆட்களை கூட்டி சென்றாலும்...நமமக்குன்னாலே தனி விலைதான்(!).....ஆனா நமக்கு மொழி கொஞ்சம் தெரிஞ்சிருந்தா நல்ல விலைக்கு பொருள்களை வாங்க முடியும்(என்னைப்போல ஹிஹி!)......


இந்த வழி நெடுக துணிகளும், பெண்களுக்கான அலங்கார விஷயங்களும், கைப்பைகள் வித விதமா இருக்கும்....என் மனைவி இந்தியா போகும் போது இங்கிருந்து கொண்டு போய் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசா வாங்கிட்டு போவாங்க...$3 - $5 தான் விலை...ரொம்ப மலிவா கிடைக்கும்!...

6 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த கடைத்தெரு விஷயம் இரவு 2 வரை தொடரும்!....தெருவின் ஒரு முனையில் நீங்க நுழைஞ்சிட்டா போதும்...அன்பு மிக்க மக்கள் உங்களை அப்படியே தள்ளிக்கிட்டே வந்து அடுத்த முனையில் விட்ருவாங்க...இதுக்கு இடையில நீங்க வாங்க வேண்டிய பொருள் இருக்கும் கடையில நிக்கணும்னா சடன் ப்ரேக் போட்டு தான் நிக்கணும்....கொஞ்சம் இறுக்கமா நின்னாத்தான் பொருள் வாங்கிட்டு வர முடியும்!.......


ஜோடி ஜோடியா வரும் மக்களை பார்த்தா அழகா இருக்கும்(!).....இந்த பய புள்ளைங்க கூட வரும் பெண்கள் கேட்கும் பொருள்களை சும்மா ஸ்டைலா வாங்கி கொடுக்கறதா பாக்கும்போது...எந்த நாடா இருந்தாலும் ஆண்கள் மனசு ஒரே மாதிரிதாங்கிறது தோனும்!.....வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் இந்த கடைத்தெரு முழு மூச்சுடன் இயங்கும்!....



 இந்த தெருவின் முடிவில் இருப்பதன் பேருதான் "தோங் சோன்" மார்கட்...இந்த இடம் 1889 ஆம் வருஷம் கட்டப்பட்டது...இங்க கெடைக்காத பொருள்களே இல்லை...சைனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணற்ற பொருள்கள் குவிஞ்சிருக்கும்....விலை அம்புட்டு குறைவா இருக்கும்(எவ்ளோ நாளு வரும்!).....குழந்தைகள் விளையாட்டு பொருள்கள், பெண்களின் வீட்டு உபயோக பொருள்கள், துணிகள், வீட்டுக்கு தேவையான அனைத்து விதமான பொருள்களையும் வாங்கலாம்....


இந்த மார்கெட் பின் புறம் எல்லா வித கடல் வாழ் உணவுகளும் கிடைக்கும்(உயிரோட!..திமிங்கலம் தவிர!)...அதிகமா ஆமைகள், ஆக்டோபஸ் போன்றவைகள் அதிகமா கிடைக்கும்...

கொசுறு: இவையெல்லாம் சுயமா(மாயமா!) நான் சந்திச்ச விஷயங்கள் மட்டுமே....என்னை கொண்டு போய் இந்த தெருவின் வழியாக படாத பாடு படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

30 comments:

koodal bala said...

Vadai

koodal bala said...

பைசா செலவு இல்லாமலே அடிக்கடி வியட்நாம் கூட்டிட்டு போறீங்க .....நன்றி மாம்ஸ் ....

உலக சினிமா ரசிகன் said...

இச் கொடுக்கிறத படம் போடாம கொடுமை பண்ணீட்டீங்க...
உங்க கூட டூ...

சசிகுமார் said...

// துணி வகைகள் அதிகம்....ஏன்னா வியட்நாமியர்கள் துணிக்கு செலவு பண்றதா பாத்தா பொறாமையா இருக்கும்...எடுத்தா ஒன்னு ரெண்டு இல்ல நாலு அஞ்சு துணி எடுப்பாங்க..//

மாப்ள பேசாம நீ ஒரு துணிக்கடை வச்சிரு. வண்டிய நல்லா ஓட்டலாம்.

ஜீ... said...

//இந்த காதல் ஜோடிங்க தொல்ல தாங்க முடியாது....பய புள்ளைங்க அந்த பக்கமா கடைய பாத்துகிட்டே இந்த பக்கமா இச் கொடுத்துட்டு நடந்து வருங்க...//
போட்டோ காணோமே மாம்ஸ்! :-)

விக்கியுலகம் said...

@koodal bala

"koodal bala said...
Vadai"

>>>>>>>>

"kadai!"

koodal bala said...

ரங்கநாதன் தெரு -மாம்பலம் ரயில் நிலையம் சந்திக்குமிடத்தில் அடிக்கடி கூட்ட நெரிசல் ஏற்படுகிறது .நடக்காமலேயே நகர்ந்து செல்லும் இடம் அது .....நான் ஒரு முறை அந்த இடத்தில் உயிர் தப்பியிருக்கிறேன் .......

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...
// துணி வகைகள் அதிகம்....ஏன்னா வியட்நாமியர்கள் துணிக்கு செலவு பண்றதா பாத்தா பொறாமையா இருக்கும்...எடுத்தா ஒன்னு ரெண்டு இல்ல நாலு அஞ்சு துணி எடுப்பாங்க..//

மாப்ள பேசாம நீ ஒரு துணிக்கடை வச்சிரு. வண்டிய நல்லா ஓட்டலாம்"

>>>>>>>>>>>

வச்சிடுவோம் மாப்ள!..

விக்கியுலகம் said...

@உலக சினிமா ரசிகன்

"உலக சினிமா ரசிகன் said...
இச் கொடுக்கிறத படம் போடாம கொடுமை பண்ணீட்டீங்க...
உங்க கூட டூ..."

>>>>>>>>>>>

விடுய்யா மாப்ள!...அந்த கொடுமைய வேற பாக்கணுமா ஹிஹி!

விக்கியுலகம் said...

@koodal bala

" koodal bala said...
பைசா செலவு இல்லாமலே அடிக்கடி வியட்நாம் கூட்டிட்டு போறீங்க .....நன்றி மாம்ஸ் ...."

>>>>>>>>>>>

மாப்ள எதோ என்னால முடிஞ்சது ஹிஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள துட்டு அதிகமா செலவாகுமே?

விக்கியுலகம் said...

@ஜீ...

" ஜீ... said...
//இந்த காதல் ஜோடிங்க தொல்ல தாங்க முடியாது....பய புள்ளைங்க அந்த பக்கமா கடைய பாத்துகிட்டே இந்த பக்கமா இச் கொடுத்துட்டு நடந்து வருங்க...//
போட்டோ காணோமே மாம்ஸ்! :-)"

>>>>>>>>>>

மாப்ள கொல வெறில இருக்க போல ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள துட்டு அதிகமா செலவாகுமே?"

>>>>>>>>>>>

மாப்ள எதுக்கு அதிகமா செலவாகுங்கர!

! சிவகுமார் ! said...

மினி டூர் அடிக்க வச்சதுக்கு தேங்க்ஸ் மாம்ஸ்! காதல் ஜோடி கலக்குற எடத்த உத்து பாக்கப்படாது. வேற பக்கம் போங்க.

விக்கியுலகம் said...

@koodal bala

" koodal bala said...
ரங்கநாதன் தெரு -மாம்பலம் ரயில் நிலையம் சந்திக்குமிடத்தில் அடிக்கடி கூட்ட நெரிசல் ஏற்படுகிறது .நடக்காமலேயே நகர்ந்து செல்லும் இடம் அது .....நான் ஒரு முறை அந்த இடத்தில் உயிர் தப்பியிருக்கிறேன் ......."

>>>>>>>>>

அடப்பாவமே...அங்க சத்தியா மார்கெட்டு பக்கம் திரும்புற இடத்துல என் கண்ணு முன்னாடி ஒரு பயங்கரம் நடந்துசிய்யா..என்னத்த சொல்லுறது!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

" ! சிவகுமார் ! said...
மினி டூர் அடிக்க வச்சதுக்கு தேங்க்ஸ் மாம்ஸ்! காதல் ஜோடி கலக்குற எடத்த உத்து பாக்கப்படாது. வேற பக்கம் போங்க."

>>>>>>>>>>>>

மாப்ள எந்தப்பக்கம் திரும்புனாலும் இருந்தா என்னத்த சொல்ல ஹிஹி!

காட்டான் said...

மாப்பிள நாங்க சாப்பட்டுக்குதான் அதிகம் செலவு பண்னுவோம்.. வியட்னாம் காரர்களுக்கு எல்லாமே சின்னதுதானே தப்பா நினைக்காத மாப்பிள வயிறு உடம்பு போன்றவைகைகளைத்தான் சொல்கிறேன் எங்களுக்கு இரண்டு புல் மீல்ஸ் வேண்டும்..!? அவர்களுக்கு அதே நாலு பேர் சாப்பிடலாமென நினக்கிறேன் எனக்கு இவர்களைப்பற்றி அனுபவமில்லை ..ஆனால் நாய்க்கறி சாப்பிட ஆசையிருக்கு அது உவ்விடம் இருக்குமா?இருந்தால் தகவல் தாருங்கோ..! காட்டான் மாட்டு வண்டிய கட்டிக்கொண்டு வருகிறேன்..!!?

சி.பி.செந்தில்குமார் said...

>>
ஜோடி ஜோடியா வரும் மக்களை பார்த்தா அழகா இருக்கும்(!).....இந்த பய புள்ளைங்க கூட வரும் பெண்கள் கேட்கும் பொருள்களை சும்மா ஸ்டைலா வாங்கி கொடுக்கறதா பாக்கும்போது...எந்த நாடா இருந்தாலும் ஆண்கள் மனசு ஒரே மாதிரிதாங்கிறது தோனும்!..


கண்டு பிடிச்சுட்டான்யா கட்ட தொர

விக்கியுலகம் said...

@ATHAVAN

" ATHAVAN said...
மாப்பிள நாங்க சாப்பட்டுக்குதான் அதிகம் செலவு பண்னுவோம்.. வியட்னாம் காரர்களுக்கு எல்லாமே சின்னதுதானே தப்பா நினைக்காத மாப்பிள வயிறு உடம்பு போன்றவைகைகளைத்தான் சொல்கிறேன் எங்களுக்கு இரண்டு புல் மீல்ஸ் வேண்டும்..!? அவர்களுக்கு அதே நாலு பேர் சாப்பிடலாமென நினக்கிறேன் எனக்கு இவர்களைப்பற்றி அனுபவமில்லை ..ஆனால் நாய்க்கறி சாப்பிட ஆசையிருக்கு அது உவ்விடம் இருக்குமா?இருந்தால் தகவல் தாருங்கோ..! காட்டான் மாட்டு வண்டிய கட்டிக்கொண்டு வருகிறேன்..!!?"

>>>>>>>>

மாப்ள இங்க இது ரொம்ப பேமசுய்யா...இந்த பதிவ பாரும்யா...

கறி சாப்பிட வாரீங்களா! -Only Non-Veg! - http://gladiatorveeran.blogspot.com/2011/02/only-non-veg.html

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அண்ணே வாங்கன்னே வாங்கனே வாங்க!

பாலா said...

நாடு மாறினாலும் மக்களின் மன நிலை ஒரே போலத்தான் இருக்கும் போலிருக்கிறது...

மைந்தன் சிவா said...

அட உங்கயுமா??ஒவ்வொரு நாட்டிலையும் இந்த மாதிரி ஏரியா இருக்கு போல என!!

செங்கோவி said...

அந்த ஸ்டில்லு போடலியா மாமூ.

நிரூபன் said...

எப்படித்தான் இந்த குடும்பஸ்தருங்க(!) இவ்வளோ விஷயத்தையும் தாங்குறாங்களோ(பேச்சுலர்ஸ் don't worry be happy!).....கல்யாணம் ஆகாதவங்க கோச்சிக்காதீங்கப்பா!....//

ஆகா...நம்ம மாம்ஸ், நம்மளை மாதிரிப் பையங்களை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லித் தன் அனுபவத்தை அடிப்படையாக வைத்துச் சொல்லுறாரே.

நிரூபன் said...

ஹனேக்கு வர வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் பதிவினை எழுதியிருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

ஷர்புதீன் said...

அதெல்லாம் சரி, நம்ம ரங்கநாதன் தெருவுல பர்சேஸ் பண்ணியிருக்கீங்களா?

vidivelli said...

வியட்நாமைப்பற்றி அடுக்கடுக்காய் பதிவுகளோ ரணமய்த்தான் இருக்கு...
இதிலையாவது வியட்நாமைப்பார்க்கிறோம்..
வாழ்த்துக்கள்..

Abdullah said...

இதைப் படிக்கும் பொது உங்க கூட நானும் போன மாதிரி இருந்துச்சி........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வியட்னாம்ல மட்டுமில்ல, கிழக்கு நாடுகள்ல துணிவகைகள் நல்லா மலிவா கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன், உண்மைதான் போல....!

F.NIHAZA said...

உண்மையில் அந்த தெருவுக்குள் நுழைந்த திருப்தி