Followers

Tuesday, July 19, 2011

வெடிவேலு மாற்றிய பதிவுலகம்! - (மாப்ள!)

வணக்கம் நண்பர்களே.....

நான் பதிவுகளை  படிக்க ஆரம்பித்த போது இந்த அளவுக்கு வெடிவேலுவின் பாதிப்பு இல்லை....காலம் செல்லசெல்ல தன் அப்பாவித்தனமான(!) வார்த்தைகளை கொண்டு இலக்கியத்தரத்துடன் பதிவிடும் நண்பர்களை துரத்தி நுழைத்தார் வெடிவேலு!...

இன்றைய பதிவுலகில் பெரும்பாலும் நடைமுறை வார்த்தைகளே பயன் படுத்தப்படுகின்றன....அதிலும் மதுரைதமிழின் ஆட்சி(!) நடை பெறுவதாகவே நான் கருதுகிறேன்!...பல விஷயம் உள்ள இலக்கிய தரம் வாய்ந்த பதிவர்கள் இந்த உலகத்தை விட்டு தள்ளி நின்று பார்க்கும் அளவுக்கு...இந்த நடைமுறை வார்த்தைகளை பதிவிடும் பதிவர்களால் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்...தமிழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வித கட்டு உறுதியும் வைக்காமல் தன்னை பெரிய கடலாக "உருமாற்றி" வருகிறது பதிவுலகம்....

இந்த பதிவுகளின் பின்னூட்டங்களிலும் வெடிவேலுவின் ஆதிக்கம் அதிகம்!....நான் பல பதிவுகளில் "மாப்ள" எனும் சொல்வழக்கை பதிவு செய்வதற்கு காரணம் .....திருமண நாள் அன்று நடக்கும் விடயம் வைத்தே அழைக்கிறேன். அந்த குறிப்பிட்ட திருமண நாளில் அந்த குறிப்பிட்ட நண்பனின் முகத்தில் ஒரு வெக்கம் கலந்த சிரிப்பு கலந்தோடும் அதை எல்லோரும் கவனித்து இருப்போம்(!)....அந்த சந்தோசத்துடனே எப்போதும் நண்பர்கள் இருக்க வேண்டும் என்பதற்கே இந்த வார்த்தையை தொடர்ந்து பயன் படுத்தி வருகிறேன்....

மாப்ள - காலேஜ் பாழையில் நண்பனுக்கு மறு பெயர் இது தான்(!)....நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும பய புள்ளைங்க முதல்ல சொல்றது..."மாப்ள இப்படி ஆகிப்போச்சி".....பல தரப்பட்ட வார்த்தை ஜாலங்கள்....குறிப்பிடும்படியாக இருப்பவைகள்...உங்க பார்வைக்கு...

மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு....

மாப்ள ஏன் பீலிங்கு!

Why Blood same blood!

இப்படிப்பல இருந்தாலும்...யார் எழுதிக்கொடுத்து இருந்தாலும்(!) அதை உச்சரிப்பவனின் குரலே மக்களை வசியப்படுத்துகிறது...அப்படிப்பட்ட ஒரு நிகழ்கால கருப்பு நாகேஷ் தன் பாதையை தவறாக மாற்றிக்கொண்டு இன்று தடுமாறிப்போயிருக்கிறார்....இதற்க்கு என்ன சொல்லலாம்....


ஆப்பு தேடிவரும் என்பார்களே அதையா...அல்லது தானே தேடிப்போய் ஆப்பின்மேல் உட்கார்ந்து கொள்ளுதல் என்பார்களே அப்படியா....எப்படி இருந்தாலும் நம்மை நம் நிலை மறந்து சிரிக்க வைத்த ஒரு மனிதன் இன்று விலகி நிற்கிறான்....

பணத்தால் இவருக்கு ஒரு கஷ்டமும் இல்லையென்றாலும்....அதி சீக்கிரத்தில் மக்களிடம் இருந்து தன் நகைச்சுவை எனும் தனி அந்தஸ்தை இழப்பது காலத்தால் அல்ல அல்ல அவரால் அவரே தீர்மானித்துக்கொண்டது என்று நினைக்கும் போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது....எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வரிகள்!...

"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...உலகத்தில் போராடலாம்...உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!.."


மீண்டு வரவேண்டும் இந்த கருப்பு குயில்!...எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நடிகர் என்று வரும்போது அவருக்கான மதிப்பான வார்த்தை குறைகிறது!..

கொசுறு: எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் நாவடக்கம் வேண்டும் என்பதற்கு ஒரு சான்று இது!...கவுண்டரின் திரை விலகலுக்கு பிறகு என்னை பாதித்த மிகப்பெரும் சிரிப்பு கடல் இந்த மனிதன்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

32 comments:

♔ம.தி.சுதா♔ said...

சுடு சோறு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

♔ம.தி.சுதா♔ said...

பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா..

koodal bala said...

23 ம் புலிகேசிக்கு பிறகு இவருக்கு சற்று கர்வம் அதிகரித்தது என்றே சொல்லலாம் ...சமீப காலமாக இவரது நடிப்பும் குறிப்பிடும்படியாக இல்லை .பொருளாதார வளர்ச்சி காரணமாக இருக்கலாம் ....சிங்கமுத்துவுடனான தகராறும் ஒரு பின்னடைவுதான் .நம் கவலைகளை மறக்க வைக்கும் அவர் திறமையை காணாதிருப்பது ஒரு இழப்புதான் ....

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாங்க மாப்ள....

# கவிதை வீதி # சௌந்தர் said...

தங்களின் கனவு கண்டிப்பாக நிறைவேறும்...

ரஜினி ரானாவில் வடிவேலுவை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்....

கண்டிப்பாக ரானா வடிவேலுக்கு மறுபிரவேசமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கையுட்டும் செய்தி...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தங்களின் கருத்து புரிகியது..
நாவடக்கம் வேண்டும் தான்...
ஆனால் அரசியல் வேறு.. சினிமா வேறு...



அரசியலில் எவ்வளவே பேசிக்கொண்டு நிறைய பேர் சினிமாவிலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

விஜயகாந்த்,
சரத்குமார்,
ராதாரவி,
நெப்போலியன்,
குஷ்பு,
ராமராஜன்,
எஸ்.வி .சேகர்

இன்னும் நிறைய இருக்கிறார்கள் இவர்கள் பேசாதாத வடிவேலு பேசிவிட்டார்....

வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்...
சினி உலகம் அவருக்காக கதவுகளை கண்டிப்பாக திரக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்....

இன்னும் ஆதித்யா, சிரிப்பொலி தொலைக்காட்சிகளில் வடிவேலுவின் காமெடிகள் சக்கைபோடு போடுகிறது...

விக்கியுலகம் said...

@♔ம.தி.சுதா♔


" ♔ம.தி.சுதா♔ said...
பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா.."

>>>>>>

மாப்ள வாங்க வாங்க....திறமை சாலிக்கு கர்வம் இருக்க வேண்டும்!...அது அளவு கடக்கும்போது தான் தன்னை மறக்கிறான் என்னத்த சொல்ல!

விக்கியுலகம் said...

@koodal bala

"koodal bala said...
23 ம் புலிகேசிக்கு பிறகு இவருக்கு சற்று கர்வம் அதிகரித்தது என்றே சொல்லலாம் ...சமீப காலமாக இவரது நடிப்பும் குறிப்பிடும்படியாக இல்லை .பொருளாதார வளர்ச்சி காரணமாக இருக்கலாம் ....சிங்கமுத்துவுடனான தகராறும் ஒரு பின்னடைவுதான் .நம் கவலைகளை மறக்க வைக்கும் அவர் திறமையை காணாதிருப்பது ஒரு இழப்புதான் ...."

>>>>>>>>>>>

என்ன உயரம் சென்றாலும் தன் நிலை மறக்க கூடாது எனபதற்கு ஒரு சிறந்த உதாரணம்!

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
தங்களின் கருத்து புரிகியது..
நாவடக்கம் வேண்டும் தான்...
ஆனால் அரசியல் வேறு.. சினிமா வேறு..."



அரசியலில் எவ்வளவே பேசிக்கொண்டு நிறைய பேர் சினிமாவிலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..."

>>>>>>>>>

மாப்ள ஹீரோவுக்கும் நகைசுவையாலனுக்கும் தனி ட்ராக் இல்ல இங்க இருக்கு!....பேசியவைகளும் யாரோடு கோர்த்து நின்று இருந்தார் என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறதே!

ஆமினா said...

//பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா..///
நானும் அதே தான் சொல்றேன் :)

நிரூபன் said...

வணக்கம் மாப்ளே,

ஒரே கல்லிலில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறீங்க.

முதலாவது பந்தி யாருக்கு, யார் அந்த இலக்கியத் தரமுள்ள ஆளு..
குத்தல் பலமா இருக்கே. பெயரைச் சொன்னால் நாமளும் அவரை ரவுண்டு கட்டி அடிக்க வசதியாயிருக்குமில்லே.

விக்கியுலகம் said...

@ஆமினா

" ஆமினா said...
//பல திறமைசாலிகளின் திறமை வளரும் வேகத்திற்கு கர்வமும் வளர்வத தான் திடீர் வீழ்ச்சி தருகிறது சகோதரா..///
நானும் அதே தான் சொல்றேன் :)"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ!
ஹீரோயிசத்த விட ரொம்ப கஷ்டமானது நகைச்சுவை!.....அது வெறும் ரெட்டிப்பு அர்த்தங்களை கொண்டு மட்டுமே வருவது கண்டனத்துக்குரியது....அதற்க்கு தான் இந்த பதிவு!

விக்கியுலகம் said...

@நிரூபன்

" நிரூபன் said...
வணக்கம் மாப்ளே,

ஒரே கல்லிலில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறீங்க.

முதலாவது பந்தி யாருக்கு, யார் அந்த இலக்கியத் தரமுள்ள ஆளு..
குத்தல் பலமா இருக்கே. பெயரைச் சொன்னால் நாமளும் அவரை ரவுண்டு கட்டி அடிக்க வசதியாயிருக்குமில்லே"

>>>>>>>>>>

மாப்ள பொதுவா சொல்லி இருக்கேன்...யாரும் குறிக்கல...ஏன்யா கொளுத்தி போடுற ஹிஹி...

நிரூபன் said...

பெருக்கத்து வேண்டும் பண்வு
சுருக்கத்து வேண்டும் உய்ர்வு எனும் வள்ளுவனின் தத்துவத்தை உங்கள் பதிவினூடாக எம் எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறீங்க.

Arun Kumar said...

உண்மைதான் நண்பரே.

ரேவா said...

எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் நாவடக்கம் வேண்டும் என்பதற்கு ஒரு சான்று இது!

உண்மை தான் சகோ...நடிப்பு திறமையால் பலரை சிரிக்க வைத்தவர், இன்று அவர் வாயால், அவரே கெடுத்துக் கொண்டார்...

எப்பூடி.. said...

வடிவேலுவின் தவிர்க்கமுடியாத தேவை இன்று அரசியலால் தமிழ் சினிமாவிற்கு இல்லாமல் போய்விட்டது, இன்னுமொரு றீ என்றி வடிவேலுக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது.

இரவு வானம் said...

//உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்//
இந்த பாட்ட எல்லா ஸ்டேஜ்ஜிலும் அதிகமா பாடுவாரு வடிவேலு, பாவம் அவரே அதன் உள்ளர்த்தத்தை உணராம போயிட்டாரு, இந்த அரசியல் எல்லாத்தையும் விட்டுட்டு மறுபடியும் ஒரு நல்ல நகைச்சுவையாரளா திரும்பி வரணும்

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அவரு மீண்டு வருவாரு மாப்ள ஒண்ணும் விசனப்படாதீங்க!!

செங்கோவி said...

ஏன் மாப்ள ஃபீலுங்..அவரு திரும்பி வருவாருய்யா..வருவாருய்யா...

இராஜராஜேஸ்வரி said...

யாகாவாராயினும் நாகாக்க!!

கந்தசாமி. said...

வெடிவேலு தேவையில்லாமல் போய் ஆப்பு மேலே குந்திக்கிட்டார்.. மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தால் பழைய போல மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு ...ஆனா கலைஞர் ஆட்சிக்கு வரணுமே !!!

பாலா said...

அடிக்கடி எம்‌ஜி‌ஆர் பாடல்களை பாடும் இவர், "பதவி வரும்போது, பணிவு வரவேண்டும் தோழா" என்ற வரியை மறந்தது எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

ஃபேமஸ்ஸான ஆர்ட்டிஸ்ட்கள் வீழ்ச்சியை சந்திக்க நேர்வது காலத்தின் கட்டாயம்..

சசிகுமார் said...

உண்மை தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம பதிவுய்யா மாப்ள, இன்னும் ட்ரெண்டு மாறிவிடவில்லை, வடிவேலு மீண்டு வருவாருன்னே நினைக்கிறேன்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள ரைட்டு..

மைந்தன் சிவா said...

அருமையான அலசல் மாப்ள(
ஹிஹி)
வடிவேலு மீண்டும் வந்தால் தான் காமெடி களை கட்டும்!!

தமிழ்வாசி - Prakash said...

வடிவேலு மேல இம்புட்டு பாசமா விக்கி...

உலக சினிமா ரசிகன் said...

வடிவேலு மக்களின் மன ஒட்டத்தை அறியாமல் பேசிய பேச்சுக்கள்தான் அவரது இன்றைய நிலைக்கு காரணம்.
இதே போல்தான் மனோரமா ஒரு தேர்தலில் பேசி வாய்ப்பில்லாமல் இருந்தார்.
ரஜினி அருனாச்சலம் படத்தில் வாய்ப்பு தந்த பிறகுதான் தமிழ் சினிமா அவரை பயன் படுத்த தொடங்கியது.
இந்த ஒரு விசயத்தில் ரஜினி எப்பவுமே கிரேட்.

sathish said...

திம்மிர்

டக்கால்டி said...

Innoru paatu iruku anne...

Athu...

"Yaarum irukkum idatthil irunthu kondaal ellaam savukiyame"