Followers

Friday, July 29, 2011

அழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்!)

வணக்கம் உறவுகளே.....

பெண்கள் வீட்டு பொறுப்பை மட்டும் கவனித்து வந்த காலம் மறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். முடிந்தவரை உழைப்போம், அது குடுமபத்தின் சந்தோஷத்தை பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்!

என் கணவர் பல விஷயங்களில் எனக்கு பெரிய தூண் என்பேன். அவரின் தூண்டுதலான வார்த்தைகள் தான் என் தாழ்வு மனப்பான்மையை அகற்றியது. எனக்கு கிட்ட தட்ட 10 வருட அனுபவம் இருந்தது அழகியல் துறையில்(!). அதை விட்டு விடாத வண்ணம் செயலாக்கி கொண்டு இருக்கிறேன். அதுவும் வியட்நாமில் இந்த வேலையை செய்வது சற்று சிரமமே. ஏனெனில், இங்கு இருக்கும் பெண்கள் மஞ்சள் நிறத்தவர்கள் என்பதால் முக  சம்பந்தப்பட்ட வகைகள் (அலங்காரம் தவிர!) அதிகமாக தேவை இருக்காது.

இருந்தாலும் இவர்களின் சுத்தம் என்னை அதிசயிக்க வைத்தது. உடல் அழகுக்கு பெண்கள் அதிகமாக செலவழிக்கிறார்கள். இருந்தாலும் இந்தியாவை போல தனித்தனி பொருள்கள்(instruments!) கொண்டு செய்து கொள்பவர்கள் குறைவு மற்றும் இங்கு இருக்கும் பெண் அழகு நிலையங்கள் அதிகப்படியான பணத்தை பிடுங்கி விடுகின்றன.


இந்த வேலை சம்பந்தப்பட்ட பொருள்கள் இங்கு கிடைக்காது. ஒவ்வரு முறையும் இந்தியா செல்லும்போதும் கொண்டு வருவேன். கணவரின் நண்பர்கள் சிங்கப்பூரில் இருந்தோ அல்லது மலேசியாவில் இருந்தோ வரும்போது கொண்டு வந்து தருவார்கள்.

நான் முதலில் ஆரம்பித்தது இந்திய பெண்களுக்கு மட்டுமே. ஏன்னெனில், என் அனுபவம் அதனை சார்ந்து மட்டுமே இருந்ததால். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன், அதிலும் இங்கு வரும் பெண்கள் எளிதில் திருப்தி அடைந்து விட மாட்டார்கள். இங்கிருக்கும் (இந்திய)பெண்களின் கணவர்கள் பெரிய வேலைகளில் இருப்பதால் அவர்களால் வீட்டவர்களுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை.


அதுவும் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் பெண்கள் பாடு திண்டாட்டம்தான். எனவே வெளியில் சென்று வருவது மூலம் தங்கள் நேரத்தை தனிமை எனும் கொடிய விஷயத்தில் இருந்து காத்து கொள்கிறார்கள். பலர் பகுதி நேர ஆசிரியர்களாக ஆங்கிலம் கற்று கொடுக்க செல்கிறார்கள்.

நாங்கள் அழகு நிலையம் வீட்டில் ஒரு சின்ன அறையை ஒதுக்கி ஆரம்பித்த போது, இந்திய பெண்கள் தங்கள் வீட்டுக்கு வர சொல்லி வற்ப்புறுத்தினார்கள்(!)..என்னை பொறுத்தவரை அப்படி சென்று வருவதை விரும்பாத காரணத்தால் ஏற்க்க மறுத்து விட்டேன். கொஞ்ச காலம் சென்றது...தானே பெண்கள் வர ஆரம்பித்தனர். இப்போது சுமாராக போய் கொண்டு இருக்கிறது.

இதில் பல வகை உண்டு - முக அழகு, தலை முடி அழகு, கால் அழகு மற்றும் பல இருக்கிறது. இவை எல்லாம் செய்ய வேண்டுமானால் இடம் பெரிதாக வேண்டும். சீக்கிரத்தில் அதுவும் நடக்கும் இன்று நினைக்கிறேன்.


விரைவில் ஒரு தனி நிலையம் அமைக்க யோசித்து கொண்டு இருக்கிறேன். ஏனெனில் பல நாட்டு பெண்களும் வர ஆரம்பித்து உள்ளனர். இதன் மூலம் என் நண்பிகள் வட்டம் பெரிதாகி வருகிறது(!). வீட்டை விட்டு வெளியே செல்லவே பயந்த நான் இன்று பல நாட்டு பெண்களுடன் சகஜமாக பேசி வருவது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

வெறும் பணத்துக்காக இதை செய்யாமல் நான் கற்று கொண்ட விஷயத்தை விட்டு விடக்கூடாது எனபதால் ஆரம்பித்ததே இந்த நிலையம். இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. படிப்பறிவு குறைந்து திருமணம் ஆன இந்தப்பெண்(!) இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று!


சொச்சம்: எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே!(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ!)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

22 comments:

தமிழ்வாசி - Prakash said...

அழகே....அழகே.... நீ எங்கே இருக்கிறாய்?

கோகுல் said...

ஐஸ் ஐஸ்

ஜீ... said...

வாழ்த்துக்கள்! மேலும் வளர!!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

ரைட்டு...

தமிழ்வாசி - Prakash said...

தமிழ்மணம் இணைச்சாச்சு

கந்தசாமி. said...

வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து முன்னேற...

! சிவகுமார் ! said...

விக்கி சார் “படித்தவுடன் கிழித்து விடவும்” எனும் தலைப்பில் எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில் அவருக்கு பிடித்த நடிகை பற்றி பல வரிகள் எழுதி உள்ளார். என்னன்னு கேளுங்க மேடம்.

செங்கோவி said...

அப்போ விக்கிக்கு ஃப்ரீயாவே ப்ளிச்சிங்கா?..மாப்ள வெள்ளை வெளேர்னு ஆயிருப்பாரோ..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சிவா .. போட்டு குடுக்கரதுல கில்லாடி போல..

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

////////வெறும் பணத்துக்காக இதை செய்யாமல் நான் கற்று கொண்ட விஷயத்தை விட்டு விடக்கூடாது எனபதால் ஆரம்பித்ததே இந்த நிலையம். இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. //////////

அருமையானப படைப்பு ஒரு மாறுபட்ட சிந்தனையுடன் நேர்த்தியாக பல புதுமைகளை எதார்த்தமாக சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி

இந்திரா said...

//இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. படிப்பறிவு குறைந்து திருமணம் ஆன இந்தப்பெண்(!) இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று!//


இதற்காகவே பாராட்டலாம்.
பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றி.

FOOD said...

தன்னம்பிக்கைப் பகிர்வு.

FOOD said...

//எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே!(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ!)//
இந்த கொசுறு, உண்மையில் நீங்க எழுதிய வரிகள் மாதிரி தெரியலயே சகோ. குமார் எழுதிக் கொடுத்தது மாதிரியே இருக்கே!

சி.பி.செந்தில்குமார் said...

>>எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே!(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ!)

தம்பி தக்காளி.. நீ இந்தியாவுல இருந்தப்போ பாக்கு வித்தே. இப்போ ஊக்கு விக்கிறியா?

இராஜராஜேஸ்வரி said...

தன்னம்பிக்கைப் ப்கிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்,

மைந்தன் சிவா said...

பாராட்டுக்கள்!!!விக்கி சாருக்கும் தான்!!பாவம் தானே ஹிஹி

மாய உலகம் said...

அழகோவியம் உயிரானதே

அம்பாளடியாள் said...

தன்னம்பிக்கை ஊட்டும் பகிர்வு வாழ்த்துக்கள் .
இன்று என் தளத்தில் ஒரு பாடல் காத்திருக்கின்றது
உங்கள் அனைவரின் கருத்தினைக் காண மறவாதீர்கள்
உறவுகளே....

நிரூபன் said...

முடிந்தவரை உழைப்போம், அது குடுமபத்தின் சந்தோஷத்தை பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்!//

அருமையான கருத்து, தங்களின் இக் கருத்தினை நான் வழி மொழிகிறேன்.

நிரூபன் said...

வாழ்த்துக்கள் அக்காச்சி, உங்கள் முயற்சி வெகு விரைவில் வெற்றி பெற்று, உங்களின் கனவு நிறைவேறட்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்கள் தன்னம்பிக்கைக்கும் முயற்சிக்கும் பாராட்டு, அதேநேரத்தில் துணைநிற்கும் விக்கிக்கும் பாராட்டுக்கள்......

தனிமரம் said...

கற்றதை பலருக்கு பயன்படும் வண்ணம் இருப்பது நல்ல முயற்ச்சி முன்னேற வாழ்த்துக்கள் அக்கா!