Followers

Friday, December 17, 2010

மானிட்டர் மூர்த்தி - 17/12/2010

இன்று முதல் என் நண்பனின் வற்புறுத்தல் காரணமாக குவாட்டர் கோவிந்தன் ஆகிய நானும் என்னை அவருடன் இணைத்துக்கொள்கிறேன்.குவாட்டர் : என்ன மூர்த்தி இப்பதான் வர எனி ப்ராபுலம்? ஆம்மாம் நேத்து உனக்கும் நம்ம ஏட்டு ஏகாம்பரத்துக்கும் ஏதோ முட்டிகிச்சாமே?

மூர்த்தி:அப்படில்லாம் ஒன்னும் இல்லப்பா இந்த ஏட்டு ஏகா நேத்து கடப்பக்கமா என்னப்பாத்து சொன்னாரு - இந்தா பாரு மானிடரு வந்தமா, குடிச்சமா போனுமான்னு இருக்கணும் அத விட்டுட்டு இங்க அரசியலு அது இது பேசிக்கிட்டு இருந்த உனக்கு ஆப்பு நிச்சயம் அப்படின்னாரு. அதுக்கு நானு எப்போ வாங்கி கொடுப்பிங்கண்ணு கேட்டேன். அவரு டெண்சனு ஆயிட்டாரு. ஏன்னா என் காதுல ஹாபு (half) அப்படின்னு கேட்டதுப்பா.
அது சரி நீ என்னா கடைய மாத்திட்டியா.

குவாட்டர்: ஆமாம்பா இனி உன்கூடதான் நண்பன்டா நீ !
ஆம்மாம் இந்த ஓர வஞ்சன அப்படிங்கறாங்களே - கொஞ்சம் விளக்கமா சொல்லேன்?

மூர்த்தி: அது ஒன்னும் இல்லப்பா மூத்த புள்ளைக்கு மத்தில அரசுல பதவியும், இளைய புள்ளைக்கு மாநிலத்திலையும் பெரிய பதவி குடுத்தாங்க பாரு அதுதான்.

அதவிட லேட்டஸ்டா ஒரு விஷயம் சொல்றேன் கேளு

குவாட்டர்: சொல்லு


மானிட்டர்: நேத்து நம்ம மாப்ள ஒரு லிங்க குடுத்து கேளு மாமுன்னா என்னடான்னு பார்த்தா http://www.youtube.com/watch?v=KEn3fCURgNI&feature=player_embedded
ஒரு நிமிசம் ஆடிப்பூட்டேன். நம்மதலிவரு எல்லாரயும் தமிழ்ல படின்னு சொல்லிப்புட்டு அவரு வம்சத்த மட்டும் இங்கிலிப்பீசு படிக்க வச்சுகிராறு பாரு.

குவாட்டர்:  அப்படிஎன்னத்த கண்ட?

மானிட்டரு: கேட்டியா அந்த டேப்ப - அதுல பாரு அந்தம்மா கேக்குது என்னா ஹெல்து மினிஸ்ட்ரி கெடைக்காதா அப்படின்னு வேற. சும்மா சொல்லக்கூடாது நம்ம பய புள்ளைங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். சரி வேற எதாவது விஷயத்துக்கு போவோம். படுபாவிங்க சரக்க ஒரிஜினலாவே கொடுக்க மாட்டேன்குறாங்க குவாட்டரு ஏற மாட்டேங்குது!!

குவாட்டர்:   நப்பாசைன்னா?

மூர்த்தி: நம்ம அம்மா கேப்டன ஆட்டத்துக்கு சேத்துக்கிட்டு போலாம்ன்னு நினைக்கறது.

குவாட்டர்: பேராசை?

மூர்த்தி: மறுபடியும் ஆட்சி வரலாம்னு துடிக்கிற வயதான தலைது!

நண்பர்: ஏம்பா உளவுத்துறை சொல்லிகீதே பார்த்தியா .... முதல்வருக்கும், பிரதமருக்கும் புலி மூலமா ஆபத்து வரப்போறதா!


மூர்த்தி: ஏய்யா புலிய கொல்றேன்னு சொல்லி எத்தன கிளிய கொன்னுபுட்டாங்க அத  கேக்க யாரும் வரல. விஷயம் என்னனா நம்ம புலி ஆதரவு தலிவரு புலிகள தட பண்ற விஷயத்துக்காக கோர்ட்டுல ஆஜராவராறு இல்ல அதனாலதான் இப்படியெல்லாம். அதுவும் இல்லாம இப்போ நாடே இந்த ராசா மேட்டர பெருசா பேசிக்குனு கீதில்லையா அத டைவர்ட்டு பண்றாங்களாம்.

 ஏன்டா டேய் ஆப் பாயிலு சொல்லி எம்மாம்நேரமாச்சி......

குவாட்டர்: சரி மச்சி ஏகா வாராரு நாம கப்புன்னு ஆயிடலாம்.

மானிட்டர்: போடா டேய் நான் என்கப்பனுக்கே பயந்தவன் கிடையாது.

ரிப்பீட்டே ...................

கொசுறு: டேப்ப கொடுத்து உதவிய திரு. http://vizhiyepesu.blogspot.com  (விழியே பேசு) அவர்களுக்கு நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 comments:

nis said...

:))

விக்கியுலகம் said...

நன்றி திரு. nis அவர்களே

நா.மணிவண்ணன் said...

ஆமாங்க மானிடர் மூர்த்தி . இப்பலாம் ஒரிஜினல் சரக்கே இல்லப்பா .அல்லாம் அடல்ட்ரி. நேத்து கூட ராவா வுட்டு பாத்தேன் .செல்ப்பே எடுக்க மாட்டேங்குது .இந்தவாட்ட துட்ட வாங்கிட்டு அங்கிட்டு குத்திடனும்

விக்கியுலகம் said...

இன்னாபா இப்பிடி சொல்லிபுட்டியே - நம்மள மாதிரி குடிமகனுங்கள நம்பிதானே இந்த நாடே கீது

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே