Followers

Wednesday, December 29, 2010

நண்பர்கள்(friends) - அன்பு,பாசம், நட்பு....!?எனக்கு இந்த காதல் விஷயத்துல ஆர்வமோ, அனுபவமோ அதிகமாக இல்லை(நம்மள போயி யாரு!). காரணம் எனக்கு எந்தளவுக்கு ஆண் நண்பர்களோ அதற்கு சரி சமமாக பெண் நண்பர்கள் இருந்த காரணத்தால் காதல் என்பது ஏதோ காமடி விஷயமாகவே போய்விட்டது(இப்போது அதுதான் வாழ்க்கையே!). 

நாங்க ஒரு பெரிய க்ரூப் என்று இருந்ததால், எங்க போகரதுன்னாலும் ஒரு படையா போவோம். இந்த படைகிட்ட மாட்டாத மக்களே இல்ல என்று சொல்லும் அளவுக்கு ரொம்ப நல்ல பேரு எங்களுக்கு(இதுக்கு காரணமே எங்க அம்மா என்ற அக்காதான்).


இன்று வரை எங்க கேங்குல இருந்த ஆண் பெண் அங்கத்தினருக்குள்ளே காதல் எனும் விஷயம் எட்டிப்பார்த்ததில்லை. காரணம் நாங்க எல்லாம் நண்பர்கள் மற்றும் சகோதர உணர்வு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எங்க கேங்குல சிவான்னு ஒரு நல்லவன் இருந்தான். எங்களுக்கு அடிக்கடி வரும் டவுட்டே இவன் எப்படி எங்க கேங்குல சேர்ந்தான் என்பது தான். ஏன்னா இவன் பேசறத்துக்கு நாங்க காசுகுட்டுக்கணும் அந்த அளவுக்கு அமைதியான ஒரு படிப்பாளி. எப்ப பாரு ஏதாவது படிச்சிட்டே இருப்பான். 


கிரிக்கெட் ஆட கூப்பிட்டாலும் அங்க வந்து ஓரமா உட்க்காந்து ஏதோ ஒரு புக்க வீட்டுல இருந்து எடுத்து வந்து படிச்சிட்டு இருப்பான். அந்த அளவுக்கு படிப்பின் மீது இவனுக்கு காதல்.

இந்த கல்லுளி மங்கனையும் ஒரு பொண்ணு லவ்வினா. திடீர்ன்னு ஒரு நாளு வந்து எங்ககிட்ட "டேய் ப்ளீஸ் நீங்கல்லாம் நாளைக்கு என் காலேஜுக்கு வர முடியுமா" அப்படின்னு கேட்டான்.

என்னடாஇது என்னிக்கும் இல்லாம என்று "என்னதான் விஷயம் சொல்லுடா" என்று ரீல் ஆனந்தி கேட்டா...........


"ஒன்னும் இல்ல ஒரு பொண்ணு என்னை லவ் பண்றேன்னு டெய்லி டார்ச்சர் குடுக்குறா கொஞ்சம் வந்து என்னன்னு கேளுங்கப்பான்னு" சொன்னான்.

"என்ன கொடும சாமி இது இவன ஒரு பொண்ணு லவ்வராலா, ஸ் ஸ் ஸ் டேய் எனக்கு மயக்கமே வந்துடும்போல இருக்குடா" என்றாள் ஹாக்கி சித்ரா.

"ஹேய் அவன்தான் சாமியாருன்னு தெரியும்ல வாங்க நாளைக்கு போய் இன்னா விஷயம்ன்னு பார்த்துட்டு வருவோம்" என்றேன்.

"இங்க பாரு அந்த ஏரியா கோடம்பாக்கம் அப்படியே படத்துக்கு எதாவது போயிட்டு வந்துருவோமாடா" என்றாள் zoo லக்ஷ்மி.

"அடிப்பாவிகளா அவன் எவ்ளோ சீரியஸா வந்து சொல்லிட்டு இருக்கான் படம் தான் இப்போ முக்கியமா போச்சா உங்களுக்கு"...........(படம் பார்த்துவிட்டு வந்தது தனிக்கதை)

"சரி யாரு அந்தப்பொண்ணு கிட்ட பேசுறது............பசங்க நாங்க போயி பேசுனா எதாவது பிரசினயாயிடப்போவுது"........ அதனால.............


"ஏய் விடு நான் பேசுறேன்" என்றாள் வித்யா.

அடுத்த நாள் எல்லோரும் அவங்க அவங்க வீட்டுல சிவா காலேஜுல cultural program என்று சொல்லிட்டு கிளம்பி போனோம்.

சிவா அந்தப்பெண்ணை சுட்டி காட்டினான். 

"டேய் போய் கூப்பிட்டு வாடா பேசுவோம்" என்றான் முனி......

இல்லடா நான் வந்து............எப்படி.....போயி................கூப்பிட்டு..............

"டேய் இது ஆவறது இல்ல ரீலு நீ போய் கூட்டு வா" என்றேன் 

கொழுப்புதாண்டா உனக்கு............


சரி சீக்கிரம் முடிங்கப்பா படத்துக்கு நேரமாகுது....என்றாள் zoo 

சிறிது நேரத்தில் அந்தப்பெண்ணுடன் வந்து நின்றாள் ரீல் ஆனந்தி.

எதிரே இருந்த "Mcrennet" உள் நுழைந்தோம்.........

தொடரும்...........

கொசுறு; இந்த உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பு நீங்கள் அளிக்கும் ஆதரவை பொறுத்தே தொடரலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் என் பார்வையில் சொல்லப்படும் இக்களம்   பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேட்கப்படுகிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

12 comments:

நா.மணிவண்ணன் said...

தொடருங்கள் .முடிவு காமெடி யா இருக்குமா ?

வெறும்பய said...

அப்புறம் என்னாச்சுங்க... சீக்கிரம் சொல்லுங்க...

ஆமினா said...

நல்லா தானே போயிட்டு இருந்துச்சு....

ஏன் பாதியிலேயே விட்டீங்க !!! ஆர்வமா இருக்கு ... சீக்கிரம் அடுத்த பாகத்தையும் போடுங்க

எப்பூடி.. said...

உங்களுக்கு தொடருறதே வேலையா போச்சு :-)

ஜீ... said...

நல்லாத்தானே போகுது! தொடருங்க பாஸ்! :-)

Philosophy Prabhakaran said...

// எனக்கு இந்த காதல் விஷயத்துல ஆர்வமோ, அனுபவமோ அதிகமாக இல்லை(நம்மள போயி யாரு!) //

பொய்தானே... காதலியும் மனைவியும் சந்தித்தால்ன்னு பந்திவு எழுதினீங்களே...

விக்கியுலகம் said...

@வெறும்பயவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.வெறும்பய அவர்களே

ரொம்ப சீரியசான முடிவு.............

விக்கியுலகம் said...

@ஆமினாவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே

விக்கியுலகம் said...

@ஜீ...வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே

அப்படியில்லை நண்பரே............என் மடிக்கணினில அதிக நேரம் என்னால் டைப் செய்ய இயலாததினால்......

விக்கியுலகம் said...

@philosophy prabhakaranவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே,

1.நன்றாக கவனிக்கவும்"

"ஆர்வமோ, அனுபவமோ "அதிகமாக" இல்லை"

சுத்தமாக இல்லை என்று கூறவில்லை நண்பரே.

2. பொய்தானே... காதலியும் மனைவியும் சந்தித்தால்ன்னு பதிவு எழுதினீங்களே...

- "அடுத்து அவள் பற்றிய பதிவுதான்"

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும்,
கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே

ரொம்ப சீரியசான முடிவு..........