Followers

Monday, December 27, 2010

எங்கே அவள்!?-அக்கா அல்லது அம்!?


எதையோ தொலைச்சிட்டு கொஞ்ச நாளா தேடிட்டு இருக்கேன்னு தெரியுது. ஆனா எத தொலசேன்னுதான் ஞாபகம் வரமாட்டேன்குது. எல்லோரும் என்னை என்னா கஷ்டம் வந்தாலும் கலங்காத மடயன்னு சொல்லும்போது வந்த சிரிப்பும், நய்யாண்டியும் என்னை விட்டு சற்று ஒதுங்கி நின்று என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.சாதாரணமா ஒரு நடிகன் படத்துல கண்ணீர் காட்சில நடிக்கும்போது, காமடி மட்டுமே நினைவுக்கு வந்த இந்த முட்டாப்பய மனசுக்கு இப்போ என்னாச்சி............

என்னவோ படிச்சே, ஏதோ முடிச்சே உனக்கு உன்னப்பதெரிஞ்சிக்கவே நெறைய காலம் ஆச்சி உனக்கு. உன் பலம் என்ன பலவீனம் என்னன்னு உனக்கு தெரியாது இருந்தப்போ, எங்கிருந்தோ வந்தாள் அவள்................


வீட்டுல கொஞ்ச காலத்துலேயே முதல்வி ஆனாள். இவ்வளவு பெரிய கூட்டுக்குடும்பத்துல அதுவும் புதிய எண்ணங்களை விதைக்கும் தலைமுறை கூட்டம் கம்மியா இருந்த குடும்பத்துக்குள்ள வந்து கோலேசுவது அவ்வளவு சுலபமில்லையே.


இந்த பெரியவங்க சாதரணமாவே நான் செய்யற எதையும் ஒத்துக்க மாட்டாங்க. அதுவும் நான் எங்க போனாலும் எதாவது ஒரு தீவட்டி என்னப்பத்தி வீட்டுல வந்து போட்டுக்கொடுத்துடும்.

இந்த நிலமையில கைதி வாழ்க்கைய உடச்சி விடுதலை காற்றை சுவாசிக்க செய்ஞ்ச அன்புள்ள அம்மா அல்லது அக்கா. நான் எப்போதுமே நினைப்பதுண்டு என்னோடு கூடப்பிறக்காமல் போனவளே!


தாய் தன் குழந்தைக்கு செய்யும் பணிவிடைகளும் அறிவுரைகளும் அவளுடைய கடமை என்பது என் கருத்து. ஆனால், இந்ததாய்க்கு என்ன கடமை என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.


"நீ சொல்ற விதத்த மாத்து அந்த வித்தை தான் மத்தவங்ககிட்ட உன் பேச்சிக்கு மரியாதைய கொடுக்கும், உன்ன தொடர்ந்து கவனிப்பாங்க"

" என்னடா எங்கள எல்லாம் விட்டுட்டு வெளிநாடு போறேன்னு ஒன்னும் வருத்தப்படாதே .........எம் மூத்த பையன் வெளி நாட்டுல நல்ல உத்தியோகத்துல இருக்கான்னு சொல்லுறதுல எனக்கு தாண்டா பெரும உங்க அம்மாவவிட"

"எந்த ஊருல என்ன வேலையா இருந்தாலும், இந்த அக்கா கூப்பிட்ட உடனே லீவு கிடைக்கிற மாதிரி கேட்டுக்க"

இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விடும்போதும் தான் பெற்ற மகனை நினைக்காமல் என்னை நினைத்தாய் என்று சுற்றமும்,நட்ப்பும் கூறியபோது நான் அலறியதை என் சொல்வேன்.


ஒரு முறையும் மருத்துவமனைக்கு நோய் என்று செல்லாதவளே. இன்று ஒரே நாளில் உன் இதயம் துடிக்க மறந்து நின்றதேன்!?

சாவே உனக்கு சாவு எப்போது!?

ஏய் காலமே ஏன் என்னை இப்படி ஒரு கருணை கொள்ளைகாரியிடம் அறிமுகம் செய்து வைத்தாய்!?................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

14 comments:

நா.மணிவண்ணன் said...

வார்த்தைகள் இல்லை .

வெறும்பய said...

கனமான மனதுடன்...

sathish777 said...

அருமை நெகிழ வைக்கும் பதிவு

எப்பூடி.. said...

வலிகளை புரிந்துகொள்ள முடிகிறது, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

THOPPITHOPPI said...

பதிவுகளும் எழுத்துக்களும் மெருகேறிக்கொண்டே வருகிறது வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு said...

ரொம்பக் கஷ்டமாயிடுச்சுங்க..

Philosophy Prabhakaran said...

மனசு சரியில்லை என்று சொன்னது இதனால்தானா... காலம் உங்கள் காயங்களை ஆற்றும்...

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்என் வலிக்கு மருந்தாக பங்கெடுத்துக்கொண்ட நண்பர்கள் திரு. நா.மணிவண்ணன். திரு.வெறும்பய, திரு.ஆர்.கே.சதீஷ்குமார், திரு.எப்பூடி.., திரு.THOPPITHOPPI, திரு.பதிவுலகில் பாபு, திரு.philosophy prabhakaran நண்பர்களுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

@philosophy prabhakaranஎன் வலிக்கு மருந்தாக பங்கெடுத்துக்கொண்ட நண்பர்கள் திரு. நா.மணிவண்ணன். திரு.வெறும்பய, திரு.ஆர்.கே.சதீஷ்குமார், திரு.எப்பூடி.., திரு.THOPPITHOPPI, திரு.பதிவுலகில் பாபு, திரு.philosophy prabhakaran நண்பர்களுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

@பதிவுலகில் பாபுஎன் வலிக்கு மருந்தாக பங்கெடுத்துக்கொண்ட நண்பர்கள் திரு. நா.மணிவண்ணன். திரு.வெறும்பய, திரு.ஆர்.கே.சதீஷ்குமார், திரு.எப்பூடி.., திரு.THOPPITHOPPI, திரு.பதிவுலகில் பாபு, திரு.philosophy prabhakaran நண்பர்களுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIஎன் வலிக்கு மருந்தாக பங்கெடுத்துக்கொண்ட நண்பர்கள் திரு. நா.மணிவண்ணன். திரு.வெறும்பய, திரு.ஆர்.கே.சதீஷ்குமார், திரு.எப்பூடி.., திரு.THOPPITHOPPI, திரு.பதிவுலகில் பாபு, திரு.philosophy prabhakaran நண்பர்களுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

@எப்பூடி..என் வலிக்கு மருந்தாக பங்கெடுத்துக்கொண்ட நண்பர்கள் திரு. நா.மணிவண்ணன். திரு.வெறும்பய, திரு.ஆர்.கே.சதீஷ்குமார், திரு.எப்பூடி.., திரு.THOPPITHOPPI, திரு.பதிவுலகில் பாபு, திரு.philosophy prabhakaran நண்பர்களுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்என் வலிக்கு மருந்தாக பங்கெடுத்துக்கொண்ட நண்பர்கள் திரு. நா.மணிவண்ணன். திரு.வெறும்பய, திரு.ஆர்.கே.சதீஷ்குமார், திரு.எப்பூடி.., திரு.THOPPITHOPPI, திரு.பதிவுலகில் பாபு, திரு.philosophy prabhakaran நண்பர்களுக்கு நன்றி.

விக்கியுலகம் said...

@வெறும்பயஎன் வலிக்கு மருந்தாக பங்கெடுத்துக்கொண்ட நண்பர்கள் திரு. நா.மணிவண்ணன். திரு.வெறும்பய, திரு.ஆர்.கே.சதீஷ்குமார், திரு.எப்பூடி.., திரு.THOPPITHOPPI, திரு.பதிவுலகில் பாபு, திரு.philosophy prabhakaran நண்பர்களுக்கு நன்றி.