Followers

Tuesday, December 21, 2010

ஆண் தோற்ற பெண்!?-அப்படியா?-18++இந்த காதையில்(கதை அல்ல) வரும் கதா பாத்திரங்களை ஒரு பார்வையாளனாக எங்கு எது வரும் என்று போட்டு புரிந்து கொள்வது உங்கள் அறிவுக்கு உகந்ததாகப்பார்க்கப்படும்.அது ஒரு மாலைபொழுது:

ஏன்டா முருகா அந்தா தொலைவுல வருதே அந்த பொண்ணு என்னா அழாக இருக்குது இல்ல.....

அண்ணே இப்ப சொல்லுங்க தூக்கிட்டு வந்துடறேன்.........

டேய் நெறைய விவரம் தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கு.. பாத்து ஜாக்கிரதை!

விடுங்கண்ணே நாம பாக்காததா....

ரெண்டு நாளு கழிச்சி ஒரு ஷூட்டிங்கில்:


ஏன் பாட்டி நானு ஒரு IAS ஆகனும்ன்னு கனவுகண்டுகிட்டு இருந்தேன் என்னை ஏன் ஸ்கூலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்ட...........

இங்க பாரு கண்ணு நீ படிச்சி வேலைக்கு போயி தான் சம்பாதிக்கணும்னு இல்ல .... பாரு சீக்கிரத்துல நீ பெரிய பணக்காரி ஆகப்போறே பாரு!

அதுதான் இப்பவே பணம் நம்ம கிட்டே இருக்கே போதாதா.........

இது போதாது கண்ணு..............

ஒரு பின்னிரவில்:

இங்க பாரு... எங்க போறே இந்த ராத்திரியில.....?


ஹும்...... என் தலையெழுத்து எனக்கு வாச்ச அம்மா அப்படி! வாழ்கைய நல்லா வாழ சொல்லிக்குடுக்க வேண்டிய பாட்டி கூட்டி குடுத்துட்டு போயிட்டா............

அதுக்கு ஏன் கவலைப்படுறே நான் இருக்கேன்..........

யோவ் நீ எதுக்கய்யா லாயக்கு........உன் மனச தொட்டு சொல்லு...... உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்......... நான் பாட்டுக்கு படிச்சுகிட்டு இருந்தேன் என்ன கூட்டியாந்து இப்போ எந்தப்பக்கமும் போக முடியாதபடி ஆக்கிட்டீயே!?

இப்போ என்ன ஆச்சின்னு இப்படி கோவப்படுறே.......


போய்யா..................நீ ஒரு ஆம்பிளையா...... சொல்லு.......... நாய் நக்கரதுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.........உன்னால ஒரு சராசரி மனுஷன், அவன் கூட இருக்க பொண்ணுக்கு குடுக்குற சந்தோசத்த குடுக்க முடியுமா........எவ்ளோ பணக்காரனா இருந்தா என்னாயா......... என்னாத்துக்கு வேணும் உன் பணம்......... என் வாழ்கையையே நாசம் பண்ணிட்டீயே.......நீ நல்லா இருப்பியா.............என்ன விட்டுடு............

அவன் திக்கித்து நின்றான் அவள் அந்த இடத்தை விட்டு சென்று நெடு நேரமாகியது.

என்ன அண்ணே அந்தப்பொண்ண விட்டுடீங்க,,,,,,,,,,

இல்ல முருகா........இன்னிக்கி அவ கேட்ட கேள்விகளால என் உடம்பு அப்படியே கரண்டு அடிபட்ட எலிக்கனக்கா நின்னுடுச்சி.

மூன்று வருடம் கழித்து:

ஏன்டா அங்க பாரு............


ஆமாண்ணே ஒரு பொண்ணு மயங்கி கெடக்கு.......

அண்ணே அதே பொண்ணு தான்னே.....

சரி தூக்கு வீட்டுக்கு கொண்டு போவோம்.

கொஞ்ச நேரம் கழித்து:

என்ன ஆச்சி ..............

என்ன ஆகணும்.........நான் நம்பிய அத்தன ஆம்புளைங்களும் என்னை ஒரு போகப்பொருளா பாத்தானுங்களே தவிர உயிருள்ள ஒரு பெண்ணா பாக்கலியே..... நான் என்னா செய்ய.......எல்லாம் என் தல விதி!

கவலைப்படாதே என் கூடவே இரு உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கும்..........

இனி இருக்கேன் ..... இருப்பேன்


(மனதுக்குள் - என் எதிர்காலம் மற்றும் குறிக்கோள் - ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்)

கொசுறு: இது ஒரு மனசாட்சியின் குரல்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

11 comments:

எப்பூடி.. said...

நல்லாயிருக்கு, எதுக்கு அந்த பொண்ணு (photo) அந்த மனிதருக்கு படக்கூடாத இடத்தில் அந்த போடு போடுது? :-)

விக்கியுலகம் said...

@எப்பூடி..திரு. எப்பூடி..அவர்களே, தளத்திற்க்கு வருகை புரிந்ததட்க்கும், கருத்து தெரிவித்ததட்க்கும் நன்றி.

அந்தப்பொண்ணு அது எதுக்குன்னு அடிக்குது!

இந்த கதை யாரோடதுன்னு இன்னுமா தெரியல!?

அய்யோ அய்யோ!
நீங்க எப்போவுமே இப்படித்தான் பாஸ்!

எப்பூடி.. said...

நீங்க எனக்கு அளித்த பதிலை ஒருவர் கொப்பிபண்ணி எனக்கு பின்னூட்டமாக இட்டுள்ளார், எதுக்கென்று உண்மையிலேயே புரியவில்லை, தெளிவு படுத்திவிடுங்கள். நன்றி.

http://eppoodi.blogspot.com/2010/12/201212.html

Philosophy Prabhakaran said...

சத்தியமா ஒன்னும் புரியல.... ஆண் தோற்ற பெண் என்ற தலைப்பு ஏன்...? காதலி என்றால் என்ன...? இது ஒரு மனசாட்சியின் குரல் என்ற டிஸ்கி எதற்கு...? என்று பல கேள்விகள் எழுகின்றன... விளக்கமளிக்கவும்...

மாணவன் said...

கதை நல்லாருக்கு நண்பரே,

ஆனால் தெளிவா குழப்பிட்டீங்களே....

ஹிஹிஹி....

விக்கியுலகம் said...

@எப்பூடி..மன்னிக்கவும் தவறுதலாக உங்களுக்கு அந்த பின்னூட்டம் வந்துவிட்டது. உங்க ப்ளோக்க பார்த்துகொண்டு இருக்கும்போது நிகழ்ந்துவிட்டது. மன்னிக்கவும் நண்பரே.

விக்கியுலகம் said...

வருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி.

திரு.philosophy prabhakaran அவர்களே,

1. இது கதையல்ல.
2. தற்போதைய ராணி ஒருவருடன் தொடர்புள்ளது.
3. இங்கு காமம்(காதல் அல்ல) ஒன்றே பல வரலாறுகளுக்கு அடிக்கோளுகிறது.

டிஸ்கி!? - அந்த ராணியின் மனசாட்சி இது.

விக்கியுலகம் said...

வருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி.

திரு. மாணவன் அவர்களே,

1. இது கதையல்ல.
2. தற்போதைய ராணி ஒருவருடன் தொடர்புள்ளது.
3. இங்கு காமம்(காதல் அல்ல) ஒன்றே பல வரலாறுகளுக்கு அடிக்கோளுகிறது.

டிஸ்கி!? - அந்த ராணியின் மனசாட்சி இது.

தங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

? said...

ttp://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

அனைவரும் வருக !

Philosophy Prabhakaran said...

கொஞ்சம் கொஞ்சம்...

விக்கியுலகம் said...

@philosophy prabhakaranவருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி.

திரு. philosophy prabhakaran அவர்களே,
இந்தா பாருப்பா "கொஞ்சம் கொஞ்சமா" என்னா பன்றதா இருக்கீக!?