Followers

Wednesday, December 22, 2010

மானிட்டரு மூர்த்தி!? - இன்று 22/12/2010வாங்க மச்சான் வாங்க...............

மானிட்டர்: என்னப்பா வரும்போதே போகசொல்ற?

குவாட்டர்: ஐயோ வாங்கன்னு தானே பாடுனே!?
மானி: அடுத்தவரி என்னா? வழியப்பத்து போங்கன்னு இருக்குல்ல!

குவா: சாரி மச்சான்.  சரி விஷயத்துக்கு வாங்க!

மானி: மச்சி நேத்து ரெண்டு பெரிய காமெடி நடந்திருக்கு....

குவா: என்னாது அது?


மானி: ஒன்னு நம்ம ஜாதி தலைவரு மேட்டரு, இன்னொன்னு நம்ம காமடி அரசியல்வாதி இளங்கோ....

குவா: சொல்லுங்க விலாவரியா.............

மானி: நேத்து ஒரு மீடிங்குல பேசும்போது ஜாதி தலைவரு சொன்னாரு - எங்க கட்சி மாதிரி கொள்கை, குடி எதிர்ப்பு இந்த மாதிரி பல விஷயத்துல கொள்கை பிடிப்போட இருக்குற கட்சி எங்குல்து. யாராவது இந்த மாதிரி ஒரு கட்சி வேற எங்காவது இருக்குன்னா எங்க கட்சி கலைச்சிட்டு அங்கு பூட்ரோம்னு சொல்லிப்புட்டாரு.

குவா: ஐயையோ அப்புறம்....

மானி: ஸ்ஸ்ஸ் ............ முடியல ... சின்னப்புள்ளதனமால்ல இருக்கு இவரோட காமடி. தேர்தலுக்கு தேர்தலு காவடி தூக்கிட்டு இந்த வயசுலயும் ரெண்டு திராவிட கட்சிங்க வாசல்ல போய் நிக்கற இவரு பேசுராருபா இப்படி. விஷயம் என்னான்னா போற போக்கப்பாத்த ரெண்டு பக்கமும் சேக்கலன்னு வெச்சிக்க... டெபாசிட்டு போயி....இப்படி ஒரு கட்சி இருந்ததுன்ற சேதி வந்துடுமோன்னு இவருக்கு பயம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்.

இளங்கோ என்னடான்னா அதிமுக, காங்கிரசு கூட்டணி வர வாய்ப்புன்னு சொல்லி காமடி பண்ணிக்கிட்டு இருக்காரு.

குவா: ஏன் வராதுன்றியா! அந்தம்மா அத தானே விரும்புது!

மானி: டேய் கும்மாங்கோ ........ இப்ப இருக்க நிலமையில ஏற்கனவே தங்கள உத்தமனுங்கோன்னு மத்தில இருக்கவங்க காட்டிக்க படாத பாடு பட்டுட்டு இருக்காங்க. எங்க இந்த ராசா போட்டு குடுத்து அப்புரூவரா மாரிடுவாரோன்னு தானே அவருக்கு சிபிஐ மூலமா பயம் காட்டிட்டு இருக்காங்க.

குவா: இதுக்குள்ள இவ்ளோ விசயம் கீதா..........

மானி: அரசியல்ன்னா சும்மாவா......எவ்ளோ செலவு பண்ணி ஆட்சிக்கு வந்து இருக்காங்க...நாம நல்லா இருக்கவா இவ்ளோ செலவு பண்ணி அரசியல்ல இருக்காங்க.

குவா: ஆமா விசயீ மேட்டரு ஒன்னுமில்லயாபா....

மானி: அத ஏன் கேக்குற இந்த நடிக சங்க கிரிகெட்டு அணி பத்தி சொல்லுறப்போ நம்ம சமத்துவ நடிகரு முதல்ல சூர்யா பேரையும் அப்புறமா விசயீ பேரையும் அழுத்தமா பேசிகிறாரு. அப்போ எல்லாரும் நெனச்ச மாதிரி நானும் நெனச்சேன்...........

குவா: என்னனு..............

மானி: ஒரு படம் போச்சுன்னாவே இந்த பய புள்ளைங்க சம்மந்த பட்ட நடிகர எப்படி வறுத்து எடுக்கலாமுன்னு வயுத்தெரிச்சல்லோட திரிவாங்க. இப்போ வேற... ஆள்றவங்க கூட வேற அந்த நடிகருக்கு லடாய். அதனால இத்தாண்டா சமயம்னும் குத்துறாங்க. 


குவா: கமலுக்கு ஏதோ பாட்டு விஷயத்துல கேசு போடறத சொன்னாங்க! 

மானி: ஆம்மம்பா கமலு வேற வழி இல்லாம அந்த அர்த்தம் பொங்கிய நாட்டுக்கு முக்கியமான கருத்த சொன்ன பாட்ட படத்துலருந்து தூக்கிட்டாராம். என்ன பண்றது படம் யாரோடது தெரியும்ல! அதனாலதான்! 

குவா: ஏம்பா இந்த வெலவாசிப்பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற!?

மானி: மச்சி அதுக்கு என் மனைவி அவங்க தளத்துல பேசப்போறேன்னு சொல்லிபுட்டாங்க அதேன்.... நாம எப்பவுமே அம்மா பேச்சையும், அம்மணி பேச்சையும் தட்டுறதில்ல அதேன்....

குவா: அது என்ன தளம்?

மானி: http://dandanakavijay.blogspot.com/   இன்னிக்கு மீண்டும் ஆரம்பிக்க போறாங்க.....

கொசுறு: என் வீட்டு அம்மணி என்னுடன் நடைபெரும் போட்டி காரணமாக பல விஷயங்களை அவர்கள் தளத்தில் பகிரப்போவதாக சொல்லி இருக்கிறார்கள். முடிந்தால் விசிட் செய்யவும்... ஒரு விளம்பரம்தேன்..ஹிஹி ....கறிகாய்தான் வாங்கிகொடுக்கரதில்ல இப்படியாவது உதவுவமேன்னுதேன்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

மாணவன் said...

தகவல்களை காமெடி கலந்து கலக்கீட்டீங்க....

சூப்பர்...

மாணவன் said...

//கொசுறு: என் வீட்டு அம்மணி என்னுடன் நடைபெரும் போட்டி காரணமாக பல விஷயங்களை அவர்கள் தளத்தில் பகிரப்போவதாக சொல்லி இருக்கிறார்கள். முடிந்தால் விசிட் செய்யவும்... ஒரு விளம்பரம்தேன்..ஹிஹி ....கறிகாய்தான் வாங்கிகொடுக்கரதில்ல இப்படியாவது உதவுவமேன்னுதேன்.//

கண்டிப்பாக போய் பார்க்குறோம் சார்....

நல்ல உதவி ஹிஹிஹி.......

விக்கியுலகம் said...

@மாணவன்திரு.மாணவன் அவர்களே

வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு போடலாம்னு நினைச்சேன்,ஓட்டு போட்டுட்டு வர்றக்குள்ள முந்திக்கிட்டாரே

சி.பி.செந்தில்குமார் said...

ஆட்டோ பயமே இல்லையோ

சி.பி.செந்தில்குமார் said...

நீங்களே உங்களுக்கு இன்னும் ஓட்டு போடலையா?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

திரு. சி.பி.செந்தில்குமார் அவர்களே,

1. வெட்டு வேணாமுங்க.... வோட்டமட்டும் போடுங்க!

2. ஓட்டு போட்டுட்டேங்க.

3. நாமலே நறைய பஞ்சாயத்துக்கு ஆட்டோல போயிருக்கோமுங்கோ!?

ஜீ... said...

:-)

நா.மணிவண்ணன் said...

இன்னாப்பா மானி ஏமாத்திபுட்டீயே .ஏதாவுது குஜிலி படத்த போடுவேன் பாத்தேன்

வைகை said...

நீங்க கலக்குங்க! ஆடோவேல்லாம் வந்தா வரட்டும் பாக்கலாம்! நேத்து நான் பெருச்சாளிய அறுத்ததுக்கும் இப்பிடித்தான் சொன்னாங்க!

விக்கியுலகம் said...

@ஜீ...வருகைக்கும்,

வடக்கபாத்து சிரிப்பதற்க்கும் நன்றி.

திரு. ஜீ...அவர்களே.

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

திரு. நா.மணிவண்ணன் அவர்களே,

ஏற்கனவே வெங்காய வெலயப்பாத்துட்டு நாமளே குஜிலி கணக்கா வெறும் ஜட்டியோட நிக்கிறோம். இதுல குசும்பு வேறைய உங்களுக்கு...........

விக்கியுலகம் said...

@வைகைவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

திரு. வைகை அவர்களே,

நானும் பார்த்தேனுங்க உங்க பெருச்சாளி மேட்டர. அசத்திப்புட்டீங்க.

அது வெறும் பெருச்சாளி இல்லங்க பல பழம் தின்னு கொட்டயே போடாத பழம் பெருச்சாளி!

எப்பூடி.. said...

****அடுத்த பொது தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்திலும் வென்று தமிழ் நாட்டுக்கென்ன இந்தியாவுக்கே!! இந்தியாவுக்கென்ன உலகத்துக்கே தலைவராகுவார் என் தந்தை ராமதாஸ்.

இப்படிக்கு
அன்புமணி ராமதாஸ்.******

இப்படி ஒரு அறிக்கையை அன்புமணி விடுவது போல கனவு கண்டேன் பலிக்குமா?

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

திரு. எப்பூடி..அவர்களே,

கனவு காண்பது மனித இயல்பு:

1. அறிக்கை என்பது வேறு நிகழ்வு என்பது வேறு.

2. டாஸ்மாக்குல சரக்கடிச்சவன் உளறலவிட இவனுங்க அப்பனும் புள்ளையும் உளர்றது அதிகமா இருக்குது(ஒரு வேல நாற்றம் அடிக்காத சரக்க நாள் முழுசும் அடிப்பாங்களோ!)

3. இன்றைய இவர்களின் நிலை - அரசியல் அனாதைகள் - ஆனால் திமுக இருக்கும் சூழ்நிலையில் இவர்களை ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது(மக்கள் நிலை நேர்மாறு).

4."ஊழ்வினை உருத்து வந்து வூட்டும்". பாபா பட பிரச்சினையில் இவர்களால் அடிப்பட்ட என் நண்பர்களின் சாபம் சும்மா போகுமா!?