Followers

Monday, December 6, 2010

மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!?



இந்த வார்த்தை கேட்டதும் நாம் நினைப்பது அது எப்படி முடியும் என்ற எதிர்கேள்வி மட்டுமே. ஏன்னெனில், வேலைப்பளு அதிகமாகும்போதோ அல்லது பல சூழ்நிலைகளில் இருக்கும் போது நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவர் என்ன சொல்கிறார் - எப்போவும் மனச லேசா வெச்சுக்கோங்க, சந்தோசமா வெச்சுக்கோங்க என்கிறார்




இது எந்த அளவுக்கு நடை முறையில் சாத்தியம் என்று நமக்கு எப்போதுமே நினைப்பு உண்டு. இது சாத்தியமே என்பதே என் வாதம். எப்படி என்பதை சற்று என் வழியில் உங்கள் விழி மூலமாக பார்ப்போம். இது ஒரு சாதாரண முறை மற்றும் இது உங்களுக்கு பொருந்திப்போக வேண்டும் என்பது கட்டாயமில்லை


முதலில் நாம் குழந்தைகளின் உலகத்தை சற்று பார்ப்போம். கொஞ்சம் உற்று கவனித்தால் குழந்தை தனக்கு தானே பேசிக்கொள்வதை கண்டு இருப்பீர்கள். சிறு வயதில் நாமும் அதே போல் தான் எந்த விஷயமாக இருந்தாலும் அதனுள்  எளிதாக பயணப்படுவோம்.


அந்த கால கட்டத்தில் அவ்வாறு நாம் ஏன் செய்தோம் என்பதை இப்போது நாம் நினைத்து பார்ப்பதில்லை. காரணம் அது ஒரு கனாக்காலம் என்போம். உண்மையில் அந்த பிராயத்தில் குழந்தை தன்னை தனக்கு தோதாக மாற்றிக்கொள்கிறது. அதாவது ஒரு சைக்கிளை பார்த்து விட்டு வந்தால் அதனை ஓட்டுவது (சைக்கில் இல்லாமல்) போலவே நினைத்துக்கொண்டு கைகளை நேராக வைத்துக்கொண்டு ஓடும். குழந்தை எந்த அளவுக்கு அறிவுகூர்ந்து யோசிக்கிறது என்று நாம் கண்டு இருக்கிறோமா!?

மற்றும் குழந்தைகள் கழிப்பறையில் உட்கார்ந்து இருக்கும் போது கண்டு இருக்கிறீர்களா? தனக்கு தானே பேசிக்கொண்டு இருக்கும் - அப்போது நம்மில் பலர் அக்குழந்தையை அதட்டி அவ்வாறு பேசிக்கொண்டு இருக்காதே என்று சொல்லி இருக்கிறோம்.
 ??
அது போலதான் என் வாழ்வில் நான் எப்போதும் சந்தோஷத்துடன் வாழ இந்த முறை எனக்கு உதவியாக இருந்து வருகிறது

அதாவது நான் பெரிய வசதியான ஆளாக வர வேண்டும் என்று எண்ணினால், நான் நேரம் கிடைக்கும் போது அவ்வாறு இருப்பதாக கற்பனை செய்து கொள்வேன்(நீங்கள் தவறாக மன நிலை பாதிக்கப்படவனோ என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது).


அப்போது எந்த காரில் நான் போவதாக ஆசைப்பட்டேனோ அந்த காரில் நான் செல்வதாக நினைத்துக்கொள்வேன். நானே எனக்குள் இவ்வாறு பேசிக்கொள்வேன் - உண்மை வேறாக இருந்தாலும் எனக்கு இந்த முறை மூலம் அந்த வசதியோ, வீடோ, வாய்ப்போ நான் அனுபவிப்பது போலவே இருப்பதால் அந்தக்கனவு உலகத்தை விட்டு நான் வெளியேறும்போது என்மனம் எனக்கு சொல்லும் விஷயம் - இதைத்தான் நாம் பார்த்து விட்டோமே என்று.

மனதளவில் எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது. அதனால் எனக்கு மன அழுத்தம் என்பது இல்லை

உதாரணம்: நீங்க வேலையில தப்பே செய்யாம உங்க மேலதிகாரி உங்கள வாட்டி எடுதுடராருன்னு வச்சிக்கோங்க - அந்த நேரத்துல உங்களுக்கு என்னதோணும் - இவன அப்படியே ஒரு அப்பு அப்பனா என்னன்னு தோணும் இல்லையா
 உடனே ஒரு நிமிஷம் கண்ணைமூடிக்கிட்டு  (முடிஞ்சா rest room சென்று) அவர நாலு அரை அரஞ்சதா நெனச்சி பாருங்க - உங்க கோபம் போயிடும். இப்போ மறுபடியும் fresh ஆயிடீங்க மற்றும் no Stress .  

உங்களுக்கு இது உபயோகமாக இருந்தால் நல்லது 

கொசுறு: எப்படியெல்லாம் வாழ வேண்டி இருக்குடா சாமி

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 comments:

THOPPITHOPPI said...

மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!?
--------------------------------------------

தலைப்புக்கு கீழே தியானம் செய்யும் புகைப்படம் போட்டிருந்தால் அழகாக இருக்கும்.

பயனுள்ள பதிவு

விக்கியுலகம் said...

தளதிட்டுக்கு வந்து ஓட்டும் பின்னூட்டமும் இட்ட திரு. THOPPITHOPPI அவர்களுக்கு நன்றி.

நண்பரே மன்னிக்கவும்,
ஒருவன் டென்சனில் இருக்கும்போது அவனிடம் தியானம் எனும் எண்ணம் வர நியாயம் இல்லை.

தியானம் என்பது மனதை கட்டுபடுத்தி ஓர் நிலைக்கு வரவைக்கும் தைரியம் உள்ளவர்களால் மட்டுமே முடியும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.