Followers

Friday, December 17, 2010

அமெரிக்கனும் நானும் (ஆப்பு யாருக்கு!?)

வந்தவங்க அத்தன பேருக்கும் வணக்கமுங்க .

நானு இப்போ தனியாளு(கூட்டம் இந்தியால இருக்கு) என்று இருப்பதால் நிறைய இடத்துக்கு நண்பர்களின் அழைப்பின் பேரில் செல்வதுண்டு.

அப்படியாக நேற்று ஒரு கெட் டு கெதர் இடத்துக்கு போக வேண்டி வந்தது. அது வெளிநாட்டுக்காரங்க நிறையபேரும், நம்ம நாட்டுப்பயபுள்ளைங்க யாரும் வராததினால நான் மட்டும் வகையா போய் மாட்டுனாப்புல ஆயிடுச்சி. சரி நாமத்தான் ரொம்ப ஸ்டடியாசேன்னுட்டு நானும் ஒரு ஆரஞ்சு ஜுஸ கைல வச்சுக்கிட்டு ஒவ்வருதருகிட்ட போய் ஹாய் சொல்லிக்கிட்டு இருந்தேன்.


என் கெட்ட நேரம் ஸ்டீவன் என்னை பார்த்துட்டாரு. அவரு நம்ம ராபர்ட்டு பிரெண்டு (கேபரே பாக்க போன சோகத்தோட நாயகன்). கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கும் போது எப்பவும் போல பேச்சி அரசியலு பக்கம் வந்துச்சி. அவரு கேட்டதுக்கு நான் அப்படியே ஷாக்காயிட்டேன்(வடிவேலு பாணியில்). அந்தாளு என்னடான்ன நம்ம ஊரு ஸ்பெக்ரம் ஊழல பத்தி புட்டு புட்ட வைக்கிறான். நானும் என் தரப்புக்கு அவங்க ஊரு நாட்டாம விஷயத்த விக்கிலீக்கு போட்டு கிழிச்சதப்பத்தி உடு உடுன்னு உட்டேன்(நாமயாரு!!! ஆமா நாம யாரு?). 

இந்த விஷயத்துல பல பெரிய நாட்டு பத்திரிகைகள் நம்ம நாட்டு ஊழல் விஷயத்த பெரிய அளவுல கொண்டு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். சரி விஷயத்துக்கு வரேன் ....


அவரு அவங்க அரசியல்ன்னா என்னன்னு சொல்லிட்டு இருந்தாரு அதுல அவரு சிந்துன சில முத்துக்கள் மற்றும் அதோட நம்ம நாட்டு அரசியல் ஒரு ஒப்பீடு:

அங்க தனி மனித ஒழுக்கம்ங்கறது நம்மள விட கம்மி ஆனா அரசியல் ஒழுக்கம்கிறது ரொம்ப அதிகம் - நம்ம லெவெலுக்கு சொல்லனும்னா மக்கள் எப்படி வேணா இருப்பாங்ககல்யாணம் செய்யாம புள்ள பெத்துக்கறது, கல்யாணம் செய்யாமலேயே பல வருஷம் சேர்ந்து வாழறது, கலவு(sex) பற்றி கவலைப்படாமல் எத்தன பேரு கூடவாவது உறவு வைத்திருத்தல், போதை விஷயங்கள் என்று பல விஷயங்கள் நம்ம நாட்டைவிட அதிகம்(அமெரிக்கர்கள் மன்னிக்கவும்)

அதே நேரத்துல ஒரு அதிகார வர்கத்துக்கு வர்றவங்களோட தனி மனித ஒழுக்கும் சிறந்ததாக இருக்கவேண்டும்னு ஒரு வரையறை இருக்கு (உதாரணம் - கிளிண்டன் மோனிகா மேட்டர்).


இங்க(இந்தியால) மக்கள் முடிஞ்சவரைக்கும் ஒரு மனைவியுடன் வாழறாங்க (பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான் அதுவேற..). நேர்மை, நியாயம், உண்மை இது பேச்சு மட்டும் இல்லாமல் செயலிலும் இன்னும் தனி மனித ஒழுக்கம் நம்ம மக்கள் கிட்ட அதிகம் - அதே நம்மள ஆளும் அதிகாரா வர்க்கம் இந்த விஷயங்களுக்கு நேர்மாராத்தான் இருக்கு (உதாரணம் கலைஞர், லாலு


எந்த இடத்துல நமக்கு ஆப்பு விழுதுன்னு பாக்கும் போது நம்ம நாட்டு மக்களோட வறுமையும், அப்பாவித்தனம் மட்டுமே மேலோங்கி காணப்படுது

இந்த இரண்டையும் சரியா பயன் படுத்திக்கும் அரசியல் வியாதிகள நம்மளால ஒன்னும் செய்ய முடியல. இத தலவிதின்னு ஒதுக்கவும் முடியாம ஒதுங்கவும் முடியாம இப்ப இருக்க generation தவிக்குது.இதுக்கு என்ன பண்றதுன்னு இது வரைக்கும் யாருக்கும் தெரியல(பொதுவான தேசவிரும்பிகளுக்கு).


அதும் இல்லாம அவர் சொன்ன விஷயங்கள் - அமெரிக்கால கல்வி என்பது ஸ்கூல் வாழ்கைவரைக்கும் பெரிய அளவுக்கு செலவு என்பது இல்லன்னும், அதுக்கு பிறகு கல்லூரிப்போகும்போது (குறிப்பாக engineer, doctor) அதுக்காக அந்த குறிப்பிட்ட நபர் வங்கி மூலமா கடன் வாங்கித்தான் படிக்கிறார்ன்னும் சொன்னார். அந்த நபர் கடன் பெற்று படித்து முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்து சம்பாரித்து அந்தக்கடனை திரும்ப அடைக்க பல வருடங்கள் தேவைப்படும் என்றும் சொன்னார்.

பாவிங்க இங்க LKG குழந்தைகிட்ட 1 லட்சம் பிச்ச கேக்குற கல்வி முறை என்ன கொடும. அப்படியே பள்ளிக்கல்விய முடிச்சிட்டு கல்லூரிக்கு போகணும்னு முடிவு பண்ணா எவன் கல்விக்கடன் குடுக்குறான். அப்படியே எங்கேயோ கடன வாங்கி படிச்சி முடிச்சா வேலை என்பது இன்னும் சரியான அணுகுமுறைக்கு வரலை. 


யப்பா தல(என் கழுத்துக்கு மேல இருக்கறதா சொன்னேன்) சுத்துது. கடைசில கருத்து யுத்தத்துல வழக்கம்போல என்னென்னமோ பேசி அவர ஒரு வழி பண்ணிட்டேன்(நாமத்தான் என்னதான் ஆப்பு வாங்குனாலும் அத வாங்குனா மாதிரியே காட்டிக்க மாட்டோம்ல).

கடைசில அவரு யப்பா உட்டுடுன்னு சொல்லிட்டாரு...........(என்ன அவரு அடிச்சது விஸ்கி நான் குடிச்சது ஜூசு - நம்புக்கப்பா நிசம்தான்)

கொசுறு: என்னதான் சொன்னாலும் மனசு கேக்கல இந்த அடிமை வாழ்கை என்று மாறும் என் இந்தியனே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

11 comments:

எப்பூடி.. said...

என்னது கலைஞருக்கு கல்யாணம் ஆச்சா?

விக்கியுலகம் said...

இது ஒரு நல்ல கேள்வி இதற்க்காக உங்களுக்கு சீக்கிரமே பொற்கிழி வழங்கப்படும்.
-
இது இந்த புண்பட்ட புலிகேசியின் பரிசு.

venkat said...

தலைவா பதிவு சூப்பர்.
கீழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டவில்லை.(என்ன இருந்தாலும் நம்ம நாட்டை விட்டுகொடுக்க முடியாதுள்ள )
படம் சூப்பர் . ஆனா அந்த கடைசி படம் !!....

எஸ்.கே said...

//இந்த அடிமை வாழ்கை என்று மாறும் என் இந்தியனே.// தெரியவில்லை ஆனால் காத்திருப்போம் மாறும் என்ற நம்பிக்கையில்!

விக்கியுலகம் said...

உண்மையில நம்மள இந்த அரசியல்வாதிங்க என்ன பண்றாங்களோ அதுதான் அந்த படம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

நன்றி திரு . venkat அவர்களே

விக்கியுலகம் said...

நன்றி திரு . எஸ்.கே அவர்களே,

நாம இருக்கோம்ல அப்புறம் என்ன கவலை!!!!!!!!?

THOPPITHOPPI said...

///இங்க(இந்தியால) மக்கள் முடிஞ்சவரைக்கும் ஒரு மனைவியுடன் வாழறாங்க///

முடிஞ்சவரைக்குமா?
நல்லா சொன்னிங்க போங்க...........

ஆமினா said...

//நம்ம நாட்டு ஊழல் விஷயத்த பெரிய அளவுல கொண்டு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்//

இங்கேயுள்ள பத்திரிக்கைகள்ல மட்டும் தான் மேட்டர் வரலையா???

பார் போற்றும் பாரதம் :)

விக்கியுலகம் said...

என்ன பண்றது - நீங்க இந்த வார்த்தைய கொஞ்சம் கவனிங்க

(பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான் அதுவேற..).

விக்கியுலகம் said...

@ஆமினாவருகைக்கும் கருத்துக்கும் நன்றி - இந்த விஷயம் பூதகரமா இந்தியாவுல இருக்கோ இல்லையோ ஆனா வெளி நாடுகள்ள - நம்மள சொல்ற வார்த்த என்ன தெரியுமா ---- பாவப்பட்ட மக்கள்!?

Jeyachandran said...

Maarum endrae nambuvoam.
Kadavul tharuvaar endru nambi kaetkiroam, avar tharugiraaraa illaiyaa enbathillai, nambikkai mudithidum.
Athu poalae, maarum endrae nambuvoam.