Followers

Tuesday, December 14, 2010

மானிட்டர் மூர்த்தி - ஆரம்பம்!?
வணக்கம்வைப்பதுஎன்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கும் தமிழுக்கு என் முதல் வணக்கம்.


எல்லோருக்கும் வணக்கமுங்கோ இந்த விக்கி என்னோட நண்பன். அவனோட வற்புறுத்தலால  நானும் அவனுக்கு டெய்லி பீஸ் - அதாங்க மொக்க செய்தி அல்லது என் சுய நினைவு இல்லாத போது கிடைக்கிற அமிர்தமான செய்திகள அவனுக்கு அளிககறதா வாக்கு கொடுத்துட்டேன். எனவே முடிஞ்சவரைக்கும் டெய்லி வந்து எதாவது சொல்லுவேன்னு நம்புறேன்.


என் பேர் மானிட்டர் மூர்த்தி , மூர்த்தி எம்பேரு மானிட்டர் நான் குடிச்சி வாங்குன பட்டம்!?....
என்ன பத்தி கொஞ்சம் சொல்லனும்னு அவன் ஆசைப்பட்டதால சொல்லிகிறேன் நான் ஒரு பார்ட்டு(part) டைம் மது அருந்தி(குடிகாரனாம்!!). என்னோட தலைக்கு சுதி ஏற ஏற தான் பல விஷயங்கள பேசுவேன். அத இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன் அம்புட்டு தான்

மது அருந்திகள் குடிலில் :

செய்தி: விக்கிலீக் உரிமையாளர் கைது.

நண்பர்: ஏம்பா மூர்த்தி உனக்கொரு செய்தி தெரியுமா?

மூ: டேய் எத்தன முறை சொல்லி இருக்கேன். வெறும் மூர்த்தி இல்ல மானிட்டரு மூர்த்தின்னு சொல்லுன்னு.......

நண்: சரிப்பா சாரி. விக்கிலீகு அப்படின்னு ஒரு சயிட்டாமே(வெப்சைட்) அந்த ஒனர கைது பண்ணிட்டாங்களாமே?


மூ: அதேங்கேக்குற , நம்மூருல இருக்குற பசங்கதான் தொப்பி (condom)போடாம போயி மாட்டிக்கிராங்கன்னு பாத்தா எம்மாம் பெரிய மனுஷன் அவரும் மாட்டிக்கிட்டாரே!! பல கோடி பணமிருந்து என்ன புரோசனம் ஒரு தொப்பி வாங்க முடியாம போச்சே!!

கருத்து: மக்களே தொப்பி போடுங்க உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது


நண்: ஏம்பா இது என்னப்பா பேசனு (பேஷன்)?

மூ: அது ஒன்னும் இல்லப்பா காடு வா வா ங்குது, வீடு போ போ ங்குது, இந்த வயசுல ஒரு இள மனசுக்கு வந்த சந்தோசத்தோட விளைவு, எல்லாம் கலி முத்திடுச்சி!

கருத்து: ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே முடியலாம் 7 பொண்டாட்டியாம்.

நமீதா அப்பிடின்னு எப்படிப்பா பேரு வந்தது?

மூர்த்திஇது தெரியாதா அவங்க வீட்டுக்கு  டைரடக்கரு போயி இருக்கும்போது அந்த மேடத்தோட காதலன் அவங்க கால்ல விழுந்து அழுதுக்கிட்டு இருந்தாராம். அப்போ அவரு என்னை நம்பு கீதா, நம்பு கீதான்னு பலமுறை சொல்லிட்டு இருந்தாரு. அத பாத்த நம்ம டைரடக்கருக்கு மூளைல பல்ப்பு எறிஞ்சிடுச்சி அதனால தான் நமீதான்னு பேரு வச்சிட்டாராம்(மவனே உனக்கு இருக்குடி மாப்ள தீவாளி). 


நண்பர்: என்னப்பா இது இவ்வளவு ஊழல் பண்ணி இருக்காங்க, யாரு தான் இத கேக்கப்போறா அப்டிங்கற தெனாவட்டு தானே?

மூ: மச்சி, என்னதான் நீ குடிச்சாலும் ஒரு லிமிட்டுக்கு மேல போனா வாந்தி வரும்ல அது போலதான் இதுவும். இப்பதான் முத ஆம்லேட்ட போட்டுக்கிறாங்க, இனிமே தொடர்ந்து வரும் பாரு....

கருத்து: எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே, சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் .....................


நண்: இது என்னப்பா இவங்க குடும்பம் எவ்ளவு கவுரதையான குடும்பம், இவங்களுக்கு இப்படி ஆயிடுச்சே!?

மூ: நீ வேற ......... குடும்பம் பெரிசா இருந்தாலே பிரச்சினைதான் நேத்து வரைக்கும் கும்மி அடிச்சவங்க எல்லாம் இன்னிக்கி சொல்லி அடிப்பாங்க......

கருத்து: எவ்வளவு பெரிய மந்தயானாலும் மேய்ப்பர் சரி இல்லைன்னா பாதை தவறிவிடும்.

நண்: அப்படிப்போடு .............(தொடரும்)

கொசுறுமது நாட்டுக்கு வீட்டுக்கு உறவுக்கு கேடு :
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

3 comments:

வைகை said...

உண்மைய பாட்டில் ஒடக்கிற மாதிரி ஒடக்கிராறு

tamil blogs said...

அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
http://tamilblogs.corank.com/

tamil blogs said...

தங்கள் பதிவை இணைத்ததர்க்கு நன்றி. எங்கள் தளத்திற்கு இணைப்புத்தர‌
http://tamilblogs.corank.com/tools.html

நன்றிகள்...