Followers

Tuesday, December 7, 2010

அ - அறிவுரை என்கிற அட்வைசு


இந்த பதிவை படிக்க தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கிய நண்பர்களுக்கு நன்றி.
(இலவசமாக கொடுக்கப்படும் விஷயம் - அறிவுரை)

அறிவுரை என்பது பெரியோர்களும், வாழ்வில் முன்னேறியவர்களும் கொடுத்த காலம் போய் இன்று எல்லோரும் கொடுக்கும் காலம் வந்து விட்டது. இது அறிவுரைக்கு ஏற்பட்ட வறட்சி தான் பாவம்.


நாம் கேட்க்கும் அறிவுரைகள், அதில் என்னை பாதித்த அம்சங்கள் சில உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

. தம்பி சிகரட் பிடிக்காதே உடம்புக்கு நல்லதல்ல - இந்த அறிவுரை கோடான கோடி பேர் அவரவர் மொழியில் தினமும் செய்யும் அறிவுரை (இதில் மதுவும் அடக்கம்).


      >> நான் அந்த பழக்கங்களுக்கு உட்படாதவனாக இருந்தால் மட்டுமே அடுத்தவருக்கு அறிவுறுத்த எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைப்பேன். இதிலும் சிலர் நான் தான் இந்த பழக்கத்துக்கு அடிமையாயிட்டேன் நீ அப்படி ஆகிடாதே என்று கூறுவதை கண்டு இருக்கிறேன்.


தன்னால் தன் தவறை திருதிக்கொள்ளத்தெரியாத ஒரு மூடன் அடுத்தவனுக்கு எவ்வாறு அறிவுரை நல்க முடியும் மற்றும் கேட்பவன் என்ன நினைப்பான் என்பதையும் பொருட்படுத்துவதில்லை

. விமர்சனங்கள் (தற்போது பதிவுலகில்)

>>> ஒரு படத்தையோ அல்லது ஒரு நடிகரையோ நாம் விமர்சிக்கிறோம் எனும் பொழுது அதனில் ஒரு நேர்மை வேண்டும் என்பதே எனது அவா(நானும் அறிவுரை வட்டத்தில் சிக்கிடேனா).
பல பேர் என்னமோ இவங்க தான் அந்த படத்தோட கதைய கேட்டு பணம் கொடுத்து எடுக்கவைத்தது போன்ற தோற்றத்தில் அறிவுரை நல்குகிறார்கள்.

அதுவும் எப்படி அவர் இங்கே இப்படி பேசியிருக்க வேண்டும், அங்கே அந்த கருத்தை சொல்லி இருக்கக் கூடாது, அவர் இந்த மாதிரி வாழ வேண்டும் - இவ்வாறான அறிவுரைகள் நமக்கே எவ்வளவு மோசமானதாக தோன்றவில்லை(சின்னப்புள்ளத்தனமா).


. மேல் நோக்கிய பார்வை எனும் அறிவுரை

>> இருப்பது அமைந்தகரை பேசுவதோ அமெரிக்க பொருளாதாரத்தை பற்றி(எண்ணம் உயர்வாக இருப்பது தவறில்லை ஆனால்!!) 
நாம் எப்படி நம் பாதையை முன்னேற்றி அடுத்தவருக்கும் சற்று பயன் படும்படி வாழ போகிறோம் என்பதை ஏன் யோசிப்பதில்லை!?


. அரசியலுக்கு அறிவுரை (என்னையும் சேர்த்து)

ஒவ்வொரு தலைவனும் சும்மா ஆகிவிடவில்லை தலைவனாக! அதற்க்கு எந்த அளவு உழைப்பு! மக்களுக்காக எத்தனை சேவை! எவ்வளவு கொலை, ஏமாற்றுதல். திருட்டுத்தனம் போன்ற பெரிய செயல்களில் முதன்மை படுத்தப்பட்டால் மட்டுமே இயலும். இந்த மாதிரியான காரியங்களை செய்யமுடியாத நாம் எவ்வாறு அவர் இப்படி இருக்க வேண்டும், இதை செய்யவேண்டும், அதை செய்யவேண்டும் என்று அறிவுரை கொடுக்க இயலும்(காமடியனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசம் இல்ல!?).

கொசுறு: முடிந்தவரை நம்மை செம்மைப்படுத்திக்கொண்டு மற்றும் முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவியாக இல்லாவிடினும் உபத்திரம் அளிப்பவனாக இருக்காமல் வாழ்வதே சிறந்தது என்ற என்னோட தாழ்மையான கருத்துக்காகதான் இந்தப்பதிவு.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

அறிவுரை சொல்லும்போது அதனை கேட்பவர்கள் நெளிவார்கள் பாருங்கள் ... நடிப்பு சக்கரவர்த்திகள் பிச்சை எடுக்கணும்..

THOPPITHOPPI said...

உண்மைய சொல்லனும்னா அறிவுரை கேட்பது எனக்கும் பிடிக்காது. வாழ்க்கையில் சில தவறுகள் செய்தால் தான் அவன் பக்குவம் அடைவான். அதற்காக அதே தப்பை மீண்டும் செய்தால் அவன் முட்டாள்

வெறும்பய said...

என்னை பொறுத்தவரை நீ யோக்கியனா இருந்துகிட்டு அடுதுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணு.. (இது உங்களை சொல்லல)

விக்கியுலகம் said...

நன்றி திரு. கே.ஆர்.பி.செந்தில் அவர்களே

உங்கள் கருத்து உண்மை.

விக்கியுலகம் said...

நன்றி திரு. THOPPITHOPPI அவர்களே

முடிந்தவரை நாம் நம் குறையை போக்கிக்கொண்டாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்து. அதனை அடுத்தவர் மீது திணிப்பதே அறிவுரை!

விக்கியுலகம் said...

நன்றி திரு. வெறும்பய அவர்களே,

யோக்கியர்கள் பொதுவாக அறிவுரை சொல்லுவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆச்சி!