Followers

Sunday, January 16, 2011

தனித்திரு ஆனா!?

எல்லோருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் நாட்களில் வெளி நாடு வாழ் தமிழர்களின் உணர்வு வித்தியாசமானது என்று நினைக்கிறேன்.
"என்னா இருந்தாலும் எங்கூருல கொண்டாடுற பொங்கல் போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த முறை வந்ததால் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். வீடு மனைவி மக்களைப்பிரிந்து வெளி நாடுகளில் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டு இருக்கும் நெஞ்சங்கள் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் ஏராளம். சரி விஷயம் என்னான்னு கேக்குறீங்களா சொல்றேன் .............


பொதுவா நான் இதுவரை மத உணர்வுகளை பற்றி பதிவிட்டதில்லை. ஆனால் அதே சமயம் யாராவது அது சம்பந்தமாக பதிவிட்டால் படிக்க தவறுவதில்லை. எனக்கு என்னா தோணுதுன்னா............இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தை தாக்குவதை பெருமையாக கருதுகிறார்களோ என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.


ஆத்திகம், நாத்திகம் - இந்த விஷயத்துக்கு என் கருத்து - எனக்கு சாமி கும்புட தோணுது கும்புடறேன், உனக்கு புடிக்கல கும்பிடாத அவ்ளோதான். இந்த பெரும் விஷயங்களில் நான் கொண்ட கருத்து. அதை விடுத்து எப்போதுமே என்னமோ சாமி கும்பிடறவன் எல்லாம் முட்டாள் மாதிரி சித்தரிப்பது எதற்க்கு என்று புரியவில்லை.

மனிதனுக்கு ஒருவித பயம் ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதாலோ அல்லது நமக்கு ஒளி, ஒலி, தண்ணீர், காற்று எனும் விஷயங்களை தரும் இயற்க்கையை வணங்குவது தவறில்லை எனபதலோ கூட கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம்(ஒரு சிந்தனை தான்!).

யாராவது நமக்கு ஒரு சிறு உதவி செய்தாலே அவருக்கு நன்றி சொல்லும் மரபு நம்மிடம் உண்டு. எவ்ளோ பெரிய உதவிகளை செய்து வரும் இயற்கையை அவரவர்க்கு பிடிக்கும் வழியில் வழி படுகிறோம். ஆனால் அதனையே தொழிலாக கொள்பவர் சிலர்(இது தனிப்பாதை!).


சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. அதை விடுத்து நம்மை நாமே தாக்கிக்கொள்வதில் என்னா பெருமை(!?). தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.


கடவுள் மறுப்பு கொள்கை உடையோர் கூட இப்படி கருத்துகள் கூறுவதில்லை. மாறாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அறிவாளிகள் மட்டுமே தான் தோன்றித்தனமாக எதிரிகளைப்போல் மோதிக்கொள்கின்றனர். வேண்டாமே, அமைதியாய் இருப்பதே பெரிய வலிமை என்று யாரோ சொன்னார்கள். தயவு செய்து இனி பதிவிடும்போது(மத விஷயங்கள்) என் கருத்தையும் நண்பர்கள் கொஞ்சம் பரிசீலனை செய்தல் நன்று என்பது என் தாழ்மையான வேண்டுதல்.

கொசுறு: இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை எனக்கே.....

நா.மணிவண்ணன் said...

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மனிதனின் தனிபட்டவிசயம் . நான் கடவுளை கும்பிடுவது இல்லை ஏனென்றால் அதில் ஈடுபாடு இல்லை . நம்பிக்கை இல்லை என்று என்னால் பொய் சொல்ல முடியாது .எந்த நம்பிக்கை ஒரு தனி மனிதனை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கிறதோ அந்த நம்பிக்கை தகர்க்க படவேண்டும் என்பது என் கருத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோவருகைக்கும், வடை எடுத்ததட்க்கும் நன்றி திரு.MANO நாஞ்சில் மனோ அவர்களே.

விக்கியுலகம் said...

@T.V.ராதாகிருஷ்ணன்வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே.

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

உங்க கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே நண்பரே.