Followers

Tuesday, January 4, 2011

நீதிமன்றம் - சிறுவன் பார்த்த court!?

எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் நினைத்த காரியங்கள் எல்லோருக்கும், எல்லாம் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த நீதிமன்றம் - அப்படிங்கற விஷயத்த பேசும்போது எனக்குள்ளே நான் பலமுறை சிரித்துக்கொண்டதுண்டு. காரணம், நான் முதல் முறையாக இந்த நீதிமன்றம் என்ற ஒன்றை நேரிடையாக பார்த்தது அடிக்கடி எனக்கு ஞாபகம் வருகிறது...........

அது ஒரு டிசம்பர் மாத கடைசி வாரம், வெள்ளிகிழமை இரவு 7 மணி இருக்கும்..............

அந்த வீட்டுல ஒரே கொண்டாட்டம்................

என்னா சித்தி இவ்ளோ சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டீங்க.......


இல்ல கண்ணு சித்திக்கு இந்த மாசம் சீக்கிரமா சம்பளப்பணம் கொடுத்திட்டாங்க..... அதுனால நாம எல்லாம் கோயிலுக்கு போயிட்டு வரும் போது உனக்கு நெறைய இனிப்புகளெல்லாம் வாங்கிதாரேன் சரியா..................

சரி சித்தி ...........

பாட்டி... எல்லோரும் கோயிலுக்கு போறோமா ..............

ஆமாண்டா கண்ணு ..... வா வந்து சட்டைய மாத்திக்க வா என்றாள் பாட்டி..............

உனக்கு இன்னிக்கு ஜாலி தான் பெரிய சித்திக்கு பணம் வந்தாச்சி...............என்றாள் சின்ன சித்தி.

ஆமாம் சித்தி தாத்தா எப்போ வருவாங்க......

தாத்தா திருத்தணி போய் இருக்காருப்பா நாளைக்குதான் வருவாரு....என்றாள் சித்தி.

அந்தக்குடும்பம் - மொத்தம் பாட்டி, இரண்டு சித்திகள் மற்றும் அந்த வாண்டுடன் அந்த சின்ன அம்மன் கோயிலை நோக்கி பயணப்பட்டது.

அந்த சந்தோசமான குடும்பம் கிட்டத்தட்ட 2 கிமு தூரம் நடந்து அந்த இடத்துக்கு போய் சேர்ந்தது.

அந்த இடத்திற்க்கு பெயர் "டெலிபோன் குவாட்டர்ஸ்" என்று சொல்லப்படும் தேனாம்பேட்டை மெயின் ரோடு(இன்றும் இருக்கிறது அந்தக்கோயில்).

அங்கு சென்று சாமி(அம்மனை) கும்பிட்டு விட்டு திரும்பும்போது நேரம் 9.30 மணி..........

வெள்ளிக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம்...........

அந்தக்கோயில் அமைந்திருந்தது பெரிய ரோட்டின் ஒரு புறத்தில்.......

அந்த நால்வரும் சாமியை தரிசித்துவிட்டு அந்த பெரிய ரோட்டை கடக்கும் பொழுது.........


அந்த நேரத்தில் எரிந்து கொண்டு இருந்த சிவப்பு நிற விளக்கை அலட்சியப்படுத்திவிட்டு இரு வெளியூர் செல்லும் அரசாங்க பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு புயல் வேகத்தில் அந்த சிறுவனைக் கடக்க முயன்றது ......

ஒரு நிமிடம் என்ன நிகழ்ந்தது என்று புரியவில்லை...........

அந்த சாக்லேட் பாட்டி உடல் சிதறியது.................

அந்த சின்ன சித்தியின் உடலும் சிதறியது ..........

அந்தப்பொழுதில் அந்தச்சிறுவனை பட்ரி இருந்த பெரிய சித்தி கையை விட்டு அந்த சிறுவன் பறந்தான் அவனுடைய உடல் மீது மிதமாக மோதிய அந்தப்பேருந்தால்........

பெரிய சித்தி இந்த விபத்தைப்பார்த்த அதிர்ச்சியில் பின்னோக்கி சாய்ந்தாள்......

அந்தச்சிறுவன் கண் விழித்து பார்க்கும் போது தலையில் பெரிய கட்டுடன்(வலியுடன்) இருப்பதை உணர்ந்தான்.

பாட்டியும், சின்ன சித்தியும் விபத்து ஏற்பட்ட போதே இறந்ததை அவனால் உணரவோ நம்பவோ இயலவில்லை....

பெரிய சித்தியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவனை அவன் தாத்தா அடுத்த அறையில் படுக்கையில் படுத்திருந்த அவளை காட்டிய போது அந்தச்சிறுவனுக்கு உடல் பதறியது...........

காரணம் அவள் தலை முழுதும் பாண்டேஜ் சுற்றப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட ஒரு நாளில் அந்தச்சிறுவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு .....கேள்விகேட்க்கப்பட்டான்....

இவர் தான் அந்த விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்............ நீ இவரை பார்த்திருக்கிறாயா..............

எனக்கு தெரியாது இவரை...........ஆனா அந்த வண்டி என் பாட்டியையும், சின்ன சித்தியையும் இடிச்சத நான் பார்த்தேன்.....


இந்த பதிலுக்காக காத்திருந்த அந்த நீதிபதி தன் தீர்ப்பை அந்த சிறுவன் சாட்சியை உறுதி செய்து நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்......

அந்த பெரிய சித்தியும் கொஞ்ச நாளில் மருத்துவ உதவி உதவாமல் இறந்துவிட்டாள்..........

கொசுறு: அந்த அபாக்கியவாதி சிறுவன் நானே! நான் பார்த்த கோர்ட்டு என் ஆறு வயதிலே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

22 comments:

ஆமினா said...

:(

எஸ்.கே said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது நண்பரே! சிறு வயதில் நெருக்கமானவர்களை பிரிவது கொடுமையானது!

அஞ்சா சிங்கம் said...

சோகமான பதிவு மனம் கனக்கிறது .........

sathish777 said...

kastama irukku

இரவு வானம் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களுக்கு, மிகவும் வருத்தமாக உள்ளது :-)

சி.பி.செந்தில்குமார் said...

mind touching lines

சி.பி.செந்தில்குமார் said...

sorry .

நா.மணிவண்ணன் said...

வருத்தக்குரிய செய்தி . மன்னிக்கவும் இதற்கு எப்படி பின்னுட்ட்டம் இடுவது என்று தெரியவில்லை

எப்பூடி.. said...

உங்க வாழ்க்கையில் எல்லாமே சோகமாவே இருக்கே!! சந்தோசமான பக்கத்தை அதிகமா எழுதுங்க!!! இது அன்பு வேண்டுகோள்.

THOPPITHOPPI said...

நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை

விக்கியுலகம் said...

@ஆமினாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே.

விக்கியுலகம் said...

@எஸ்.கேவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.எஸ்.கே அவர்களே.

"அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாத சாட்சி" - கொடுமை

விக்கியுலகம் said...

@இரவு வானம்ருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.இரவு வானம் அவர்களே.

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.அஞ்சா சிங்கம் அவர்களே.

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.சி.பி.செந்தில்குமார் அவர்களே

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

இதில் நான் சொல்ல வந்த கருத்து இரு வேகங்களின் நடுவே 3 தெய்வங்கள் மறைந்ததே!

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி..அவர்களே.

"உங்க வாழ்க்கையில் எல்லாமே சோகமாவே இருக்கே!! சந்தோசமான பக்கத்தை அதிகமா எழுதுங்க!!! இது அன்பு வேண்டுகோள்."
>>>>>>>>>>>

உங்கள் கருத்துரையை மதிக்கிறேன்.

நான் இங்கு கூறுவது உண்மைகளே மற்றும் நடு நடுவே மகிழ்ச்சியான தருணங்களையும் பதிவேற்றிக்கொண்டே இருப்பேன்.

உங்களை என் பதிவுகள் ஒரு கணம் யோசிக்க வைத்தாலே போதும் மற்றும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒவ்வொரு நிமிடமும் சோதனை ஓட்டமே!

நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே.

"நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை"

>>>>>>>
நண்பரே ஒவ்வொரு மனிதனும் அவன் கடந்து வந்த பாதையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பது என் கருத்து.

அதன்படியே பல விஷயங்களை இங்கு இறக்கி வைக்கிறேன் மற்றும் இந்த விஷயங்கள் நண்பர்களை பக்குவப்படுத்தவேயன்றி அழவைக்க அல்ல.

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனம் கனக்கிறது ......... :((((

Philosophy Prabhakaran said...

// உங்க வாழ்க்கையில் எல்லாமே சோகமாவே இருக்கே!! சந்தோசமான பக்கத்தை அதிகமா எழுதுங்க!!! இது அன்பு வேண்டுகோள்.... //

இதையே நானும் வழிமொழிகிறேன்... இருப்பினும் உங்கள் மனக்கவலை குறையும் என்றால் பகிர்வு நல்லது...

விக்கியுலகம் said...

@T.V.ராதாகிருஷ்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே.

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

நன்றி