Followers

Monday, January 31, 2011

சி சைடு(see side!) சூ சைடு(suicide) ஆகிப்போனதே-!?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே -


நான் பிழைக்க வந்த நாட்டில் நான் ஒரு இந்தியன் என்பதாலேயே அதிகமாக மதிக்கப்படுகிறேன். அதற்க்கு காரணம் இந்தியர்கள் உதவும் குணம் அதிகமாக கொண்டவர்கள் என்றும் எதிரிக்கும் உணவு படைக்கும் குணம் கொண்டவர்கள் என்றும் இந்த மக்கள் என் இந்தியாவை நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

நான் எவ்வாறு இவர்களிடம் என் மனக்குறையை எடுத்து சொல்லுவேன்............என் நாடு என் மக்கள் மீதே மறைமுக போர் தொடுத்துக்கொண்டு இருக்கிறது. என்பதை. இந்தியனாகப்பிறந்ததை நினைத்து பெருமைப்படுவதா அன்றி தமிழனாக இந்தியாவில் பிறந்ததை எண்ணி வருந்துவதா!?

எதிரி நாடு எனும் பக்கத்து நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாலும் அவருக்கும் பல சுவை உணவு அளித்து அவர்களை பத்திரமாக திருப்பியனுப்பும் இந்தியாவா இது...............நம்ப முடியவில்லை...............என்றோ எவனோ தவறாக எடுத்த முடிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறதே................


குட்டித்தீவு ஆதி வாசிகள் என் மீனவ மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் போது எதிர்த்து குரல் கொடுக்க துப்பில்லாமல் இருக்கும் என் இக்கால முதல்வனை நினைத்து பெருமைப்படுவதா...........அல்லது ஒன்னுத்துக்கும் உதவாமல் தலையாட்டி பொம்மை கணக்கா ஆமாம் சாமி போடும் என் பிரதமனை நினைத்து கவலைப்படுவதா..............

ஒரு காலத்தில் நிலமும் நிலம் சார்ந்த இடத்தையும் நினைத்து பெருமைப்பட்ட நான் இன்று அம்மக்களின் வாழ்க்கை நிலையை நினைத்து வருத்தப்பட வைத்தது யார் குற்றம்.........விதியின் குற்றமா..........அல்லது அந்த விதியை தன் மதியால் அரசியலாக்கிகொண்டு இருக்கும் வீணர்கள் குற்றமா...........சொல் என் இந்தியத்தாயே.............உன் தங்கை என்தமிழ் தாய் கையேந்தி நிற்கிறாள் காப்பாற்று என் பிள்ளைகளை என்று...........உன் மனம் இளக வில்லையா..........இன்னும் நாங்கள் என்ன செய்தால் நீ மனம் குளிர்வாய்.........


வெறும் சில தொலைவு தூரத்தில் இருக்கும் போதே எம் தொப்புள் கொடி உறவுகள் அலறல்களை கேட்க்காமல் மானாட மார்பாட பார்த்துகொண்டு இருந்த எங்கள் தவறுக்காக நீ என் சகோதரிகளின் தாலிகளை பலியாகக்கேட்க்கிறாயா....

கடலுக்கு மீன் பிடிக்கப்போன கணவன் திரும்பி வரும்வரை என் சகோதரி என்ன கோலத்தில் பொறுத்து இருக்கவேண்டும் என்று நீ எதிர் பார்க்கிறாய் தாலியுடனா அன்றி கைம்பெண் கோலத்திலா............முடிவை நீ எடுக்க தவறினால் காலம் உன்னையும் கைம்பெண்ணாக்கும்...........

கொசுறு: மனப்பாரம் முடியாமல் கொட்டிய சிறு துளியே இது......  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

வைகை said...

இன்னும் நாங்கள் என்ன செய்தால் நீ மனம் குளிர்வாய்.........////////தமிழர் தலைவனுக்கு பாராட்டு விழா எடுக்கவும்!

நா.மணிவண்ணன் said...

சாட்டை அடி

வெறும்பய said...

இன்னும் நாங்கள் என்ன செய்தால் நீ மனம் குளிர்வாய்.........
//

நாலு நடிகைகள் நடனமாட நடுவே உக்கார வைத்து பாராட்டுவிழா எடுத்தா மனம் என்ன எல்லா இடமும் குளிரும்...

அஞ்சா சிங்கம் said...

முடிவை நீ எடுக்க தவறினால் காலம் உன்னையும் கைம்பெண்ணாக்கும்...........கண்டிப்பாக அந்த நாள் வந்தே தீரும் ................

எப்பூடி.. said...

கலைஞர் வாழ்க, சோனியா வாழ்க, ராகுல் வாழ்க, அழகிரி வாழ்க, ஸ்டாலின் வாழ்க, கனிமொழி வாழ்க, தமிழர் அழிக.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அழிவிற்கான ஆரம்பம் தலைவா?
சாட்டை அட பதிவு..

MANO நாஞ்சில் மனோ said...

தானை தலைவனை தூக்கி முதல்ல கடல்ல போடுங்கடே..........

ஜீ... said...

//MANO நாஞ்சில் மனோ said...
தானை தலைவனை தூக்கி முதல்ல கடல்ல போடுங்கடே......//
அதே!
அவரே அடிக்கடி சொல்றாரே!

பாரத்... பாரதி... said...

சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் சரி...

விக்கியுலகம் said...

@வைகைவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.வைகை அவர்களே,

>>>>>
அவருக்கு சங்கு விழா எடுக்கலாம்னு இருக்கோம் ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே,

"சாட்டை அடி"

>>>>>

பழயகாலத்துலையே இருக்குறீங்களே "செருப்படின்னு" சொல்லுங்க ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@வெறும்பயவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.வெறும்பய அவர்களே,

"நாலு நடிகைகள் நடனமாட நடுவே உக்கார வைத்து பாராட்டுவிழா எடுத்தா மனம் என்ன எல்லா இடமும் குளிரும்..."

>>>>

ஒருத்தருக்கு எழுந்தே நிக்க முடியலையாம் ஊரெல்லாம் வப்பாட்டி கேக்குதாம் ஹி ஹி!!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.அஞ்சா சிங்கம் அவர்களே,

"முடிவை நீ எடுக்க தவறினால் காலம் உன்னையும் கைம்பெண்ணாக்கும்...........கண்டிப்பாக அந்த நாள் வந்தே தீரும் ..."

>>>>>

வேண்டாங்க வீழ்வது நாமா இருப்பினும் வாழ்வது நாடா இருக்கட்டும் நண்பா!

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி..அவர்களே,

"கலைஞர் வாழ்க, சோனியா வாழ்க, ராகுல் வாழ்க, அழகிரி வாழ்க, ஸ்டாலின் வாழ்க, கனிமொழி வாழ்க, தமிழர் அழிக"

>>>>

தமிழர் என்றொரு இனம் ஒரு காலத்தில் இருந்தது என்றாகிடுமோ!!

விக்கியுலகம் said...

@sakthistudycentre-கருன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.sakthistudycentre-கருன் அவர்களே

"அழிவிற்கான ஆரம்பம் தலைவா?"

>>>>
அதே அதே!!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.MANO நாஞ்சில் மனோ அவர்களே,

"தானை தலைவனை தூக்கி முதல்ல கடல்ல போடுங்கடே........"

>>>
அது அந்த காலத்து கட்டை அவ்வளவு சீக்கிரத்துல மூழ்காது..............பாருங்க எவ்ளோ துனைக்கட்டைங்கள உருவாக்கியிருக்கு

விக்கியுலகம் said...

@ஜீ...வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ...அவர்களே,

>>>>

அது அந்த காலத்து கட்டை அவ்வளவு சீக்கிரத்துல மூழ்காது..............பாருங்க எவ்ளோ துனைக்கட்டைங்கள உருவாக்கியிருக்கு

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.பாரத்... பாரதி...அவர்களே,

"சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் சரி.."

>>>>>>>>>>>

ஒருத்தரு அதிகமா சிந்திச்சு தான் ஊரெல்லாம் போண்டாடீ சீ பொண்டாட்டி புள்ள பெத்து வாழ்ந்துட்டு இருக்காரு!