Followers

Monday, January 24, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 24.1.11

தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்கவைத்தான்.......எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தான்............


இன்னா மானி வரும்போதே சோகமா பாடிட்டு வார.......குடி குடிப்போர் குடிலில் இருந்து........

மானி: ஆமாம்பா என்னா வாழ்கை இது......நம்ம மீனவருங்க அடிக்கடி இலங்கை கடற்படையால கொல்லப்படறாங்க..............கேக்க நாதி இல்ல.........கேக்க வேண்டியவங்க.........கூட்டணிவேலைல பிசியாகீரானுங்க......

குவா: என்னா கொடும இது........என்னதான் பண்றது...........இதுக்கு முடிவே இல்லையா.........

மானி: நானும் நீயும் பேசி இன்னா நடக்கபோகுதுன்னு ஜனங்க நினைக்கரதுனாலதான் இது தொடர்ந்துகிட்டே இருக்கு.......தைரியமான ஆளுங்கள ஆள்ரதுக்கு தேர்ந்தெடுத்து இருந்தா பரவாயில்ல......எல்லாம் பதவிய காப்பாத்த போராடுற வீராதி வீரர்கள தேர்ந்தெடுத்தா இப்படித்தான்..........

குவா: ஆமா நம்ம அடுத்த பிரதமரா வரப்போறவரு சொன்னத கேட்டியா.......


மானி: அத கேக்குறியா........இளைஞ்சர்கள் அரசியலுக்கு வருனுமாம்....அதே நேரத்துல ரொம்ப சிம்பிளா இருக்கனுமாம்...........ஆனா இவங்க மட்டும் சுவிஸ் பேங்குள்ள எவ்ளோ வச்சிகிறாங்க அப்படிங்கற மேட்டர மட்டும் லீக்காவ விடமாட்டங்க.......என்னங்கடா ஞாயம்.....

குவா: நம்ம மாதவன் ரொம்ப டெண்சனாயிட்டாறு போல?

மானி: ஆமாம்பா........லேட்டஸ்டா ஒரு பேட்டில.......மன்மதன் படம் ஒன்னும் இந்திரன் அளவுக்கு ஹிட்டாகப்போறதுஇல்ல...........இது ஒரு தோல்விப்படம் தான் இருந்தாலும் என்னோட கேரக்டர மக்கள் ரசிக்கறத நெனச்சி சந்தோசம் அப்படின்னு சொல்லிகீறாரு......

குவா: ஆம்மாம் எப்போதான் இந்த ட்ரைன் பிடிக்குற நடிகரு அரசியல்ல இறங்கப்போறாராம்?


மானி: அவரு அப்பா சொல்லிட்டாரு.....புள்ள 40 வயசுல அரசியலுக்கு வருமாம்.........அத தடுக்க யாராலையும் முடியாதாம்........

குவா: ஆமாம் மானி நீ எப்போவும் குருவியே குறி வைக்கறதா எல்லாம் சொல்லறாங்க.......

மானி: யாரு ஓவரா உதாரு உடுராங்களோ அவங்கள பத்தி பெருமையா சொல்றது தான் என் ஸ்டைலு.......

சரி ஏதாவது நச்சுன்னு சொல்லு பார்போம்............

லாடு லபக்கு தாஸு சொல்லி கிறாரு இனிமே சினிமால நடிக்கிறவங்கள மக்கள் ஆட்சிக்கு வரவிடக்கூடாதுன்னு...........

ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் செய்யப்போறது இல்ல,..........அவங்க அவங்க முடிஞ்சா தப்பிசுக்குங்க............

கொசுறு: இலவசம் வாங்கும் மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஒன்னுத்துக்கும் உதவாமல் ப்ளாக் எழுதும் சங்கம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

14 comments:

வெறும்பய said...

ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் செய்யப்போறது இல்ல,..........அவங்க அவங்க முடிஞ்சா தப்பிசுக்குங்க............


//

இதை நான் ஆயிரம் தடவை வழிமொழிகிறேன்... எவன் வந்தாலும் நம்ம தலையில் தான் துண்டு விழும்...

MANO நாஞ்சில் மனோ said...

நாடு உருப்படுமா.....?

நா.மணிவண்ணன் said...

குஜிலி மேட்டர் எதுவும் கிடயாத மானி

இரவு வானம் said...

//இலவசம் வாங்கும் மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஒன்னுத்துக்கும் உதவாமல் ப்ளாக் எழுதும் சங்கம்//

நானும் சங்கத்துல உறுப்பினராயிடுரேன் மானி....

மாணவன் said...

//ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் செய்யப்போறது இல்ல,..........அவங்க அவங்க முடிஞ்சா தப்பிசுக்குங்க............///

நல்லா ஒரைக்கிறமாதிரிதான் சொல்லியிருக்கீங்க ஆனால்????

எப்பூடி.. said...

//அவரு அப்பா சொல்லிட்டாரு.....புள்ள 40 வயசுல அரசியலுக்கு வருமாம்.....//

பையனுக்கு பேச்சு வராதாமா? 37 வயசிலையும் அப்பன் சொல்றத செய்றவரு தனிச்சு முடிவெடுக்கும் அரசியல்ல இறங்குவாரா?

Philosophy Prabhakaran said...

இன்னைக்குத் தான் பார்த்தேன்... நம்ம தண்டோரா மணிஜி ஏற்கனவே மானிட்டர் பக்கங்கள் என்ற பெயரில் பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார் தெரியுமோ...?

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.MANO நாஞ்சில் மனோ அவர்களே.

"நாடு உருப்படுமா.....?"
>>>>>>>>>>>

கவலைப்படாதீங்க நிச்சயம் உருப்படும்

"நான் அரசியலுக்கு வரேனுல்ல....."

விக்கியுலகம் said...

@வெறும்பயவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.வெறும்பய அவர்களே.

"இதை நான் ஆயிரம் தடவை வழிமொழிகிறேன்... எவன் வந்தாலும் நம்ம தலையில் தான் துண்டு விழும்..."

>>>>>>>

இதத்தான் நானும் சொல்றேன் அடுத்தவன் வந்து நம்ம வீட்டு காவாய சுத்தப்பட்டுதுனும்னு ஏன் நாம் எதிர் பார்க்கணும்.......நாமே இறங்கி சுத்தபடுத்தலாம் வாங்க........

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

"குஜிலி மேட்டர் எதுவும் கிடயாத மானி"
>>>>>
நாளைக்கே போட்டுட்டா போச்சு.........விடுங்க கவலைய......இந்த ஊருல திரும்புன பக்கம்ல்லாம் குஜிலி தான்.........என்னா பண்றது நான் உங்கள மாதிரி சுதந்திரப்பறவை இல்லையே ஹிஹி!!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.இரவு வானம் அவர்களே.

"நானும் சங்கத்துல உறுப்பினராயிடுரேன் மானி..."

>>>>>

சீக்கிரத்துல படிவம் அனுப்பி வைக்கிறேன் அரசியலுக்கு வாங்க.........

விக்கியுலகம் said...

@மாணவன்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.மாணவன் அவர்களே.

"நல்லா ஒரைக்கிறமாதிரிதான் சொல்லியிருக்கீங்க ஆனால்????"

>>>>>>>>>

எதாவது தப்பா சொல்லிட்டனா நண்பரே!?

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.எப்பூடி..அவர்களே.

>>>>>>>

"பையனுக்கு பேச்சு வராதாமா? 37 வயசிலையும் அப்பன் சொல்றத செய்றவரு தனிச்சு முடிவெடுக்கும் அரசியல்ல இறங்குவாரா?"

எடுப்பார் கைப்பிள்ளை என்னா செய்வது.....சும்மா உதாரு உட்டுகுனு சுட்டிட்டு இருக்க ஆளு எப்படிங்க பொறுப்பான விஷயத்துல.........விடுங்க...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

"இன்னைக்குத் தான் பார்த்தேன்... நம்ம தண்டோரா மணிஜி ஏற்கனவே மானிட்டர் பக்கங்கள் என்ற பெயரில் பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார் தெரியுமோ...?

>>>>>>>>>>>

ஆமாங்க்ணா நானும் இப்போதான் பாத்தேன் நல்ல வேலை அவரோடது மானிட்டர் பக்கங்கள்......என்னோடது மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்......ஹி ஹி!