Followers

Sunday, January 30, 2011

அன்பில்லா ஒருவருக்கு கோடியில் ஒருவன் எழுதுவது......!?

தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்.........................நண்பர் திரு.  Philosophy பிரபாகரன் அவர்களின் அன்புக்கு இணங்க இந்தப்பதிவு.

நான் இப்படி எழுதலாமான்னு முதல்ல நெனச்சேன்............ஏன்னா உள்ளூருல இருக்கவங்களுக்கு தான் நிலைமை சரியா தெரியும்னு யோசிக்கும்போது தான் ........ஒவ்வொரு நிமிஷமும் என் தாய் மண்ணை நினைத்துக்கொண்டு இருக்கும் என்னைப்போல பல நண்பர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.


என்னதான் வாழ்க்கைப்பயணம் பலருக்கு மாறினாலும் என் தமிழ் மீனவனின் வாழ்கை என்று நல்ல விதமாக மாறும்!? - இந்தக்கேள்வியை யாரை நாம் கேட்பது?..................

எனக்கு தெரிந்து ஆட்சியாளர்கள் இன்று இருக்கும் நிலை - "அய்யா அம்மா ஓட்டு போடுங்க சாமி" - என்று இருந்த அரசியல்வாதிகள், இன்று மக்கள் இவர்களைப்பார்த்து "அய்யா அம்மா நோட்டு குடுங்கன்னு" கேக்க வச்சுட்டாங்க..........இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் சூடு, சொறன இதெல்லாம் இருக்கு அதனால இப்போ ஆளும் அய்யா நீங்க ஒன்னும் செய்ய வேணாம் சாமி. முடிஞ்சா இந்த பாவப்பட்ட மீனவங்க வாழ்கைல ஏதாவது மாற்றம் செய்யலன்னாலும் தினமும் அவங்கள வேட்டயாடுற இலங்கை கடல்படைய தடுத்து நிறுத்த பாருங்க.............எத்தன காலம் தான் கடிதம் எழுதுவீங்க.......அந்தப்பேனாவ கேட்டுப்பாருங்க அது சொல்லும்...........நீங்க எவ்ளோ பொய்யும் புரட்டும் அதன் மூலமா இந்த அப்பவிங்கள ஏமாத்த எழுதினீங்கன்னு...........அன்னிக்கு ரயிலு வர்ற பாதைல படுத்து எங்க முன்னோர்கள எமாற்றுனீங்க................அந்த அப்பாவிகளுக்கு தெரியுமா நாளைக்கு அவங்க மேல ரயில ஏத்த தான் அந்த மாதிரி நீங்க சென்சீங்கன்னு................


நாங்க கேட்டுக்கறது ஒன்னு மட்டும்தான் இப்போதைக்கு தயவு செஞ்சி மத்தில பேசி இப்போ "நிருபமா அம்மா" அந்தூருக்கு போயிருக்காங்களே இப்பவாவது உறுதியான முடிவெடுத்து இந்த கொலைகள தடுத்து நிறுத்தப்பாருங்க...........


ஏதோ சொல்லணும் போல தோணிச்சி சொல்லிட்டேங்க........

கொசுறு: நீயெல்லாம் யாருடான்னு கேட்டுடாதிங்க.......எவ்ளோ கஷ்டப்பட்டாலும், எந்த நாட்டுல இருந்தாலும் தேர்தல் நேரத்துல வந்து ஓட்டு போடும் சாதாரண குடிமகனுங்க.........அம்புட்டுதேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

10 comments:

மாணவன் said...

கண்டிப்பாக நாம் அனைவருமே பங்கெடுத்துகொண்டு குரல் கொடுக்க வேண்டும் உணர்வுள்ள தமிழனாய்...தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்....

Philosophy Prabhakaran said...

உங்கள் பங்கெடுப்புக்கு நன்றி நண்பா... உணர்ச்சித்தீ பரவட்டும்...

ஜீ... said...

//நீயெல்லாம் யாருடான்னு கேட்டுடாதிங்க.......எவ்ளோ கஷ்டப்பட்டாலும், எந்த நாட்டுல இருந்தாலும் தேர்தல் நேரத்துல வந்து ஓட்டு போடும் சாதாரண குடிமகனுங்க//
இதை மட்டும் கேட்பானுங்க!

வைகை said...

எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!

கக்கு - மாணிக்கம் said...

Keep the fire glow the time will come to make a fire.

நா.மணிவண்ணன் said...

உணர்ச்சித்தீ பரவட்டும்...

எப்பூடி.. said...

எப்படி எடுத்து சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

JOTHIG ஜோதிஜி said...

ஒரு வகையில் மீனவ பிரச்சனை குறித்துவலை உலகம் ஒன்றாக சேர்ந்து குரல் எழுப்புவது பாராட்டக்கூடியதே.

நையாண்டி மேளம் said...

மீனவன் தண்ணீரில் மிதக்கிறான்...
நாம் கண்ணீரில் மிதக்கிறோம்..

டக்கால்டி said...

நம்மால் இயன்றதை செய்ய தயங்காமல் இயங்குவோம்!!!