Followers

Thursday, January 20, 2011

பாவப்பட்ட(friend) நண்பன்(!?)


இன்று காலையிலிருந்து ஒரு பெரிய பஞ்சாயத்து...........ஸ் ஸ் ஸ் நாம வெளி நாட்டுல இருக்கோம்னு தான் பேரு நம்மள லோக்கல் சொம்புதூக்கி நாட்டாம கணக்கா அலைய விடுறாங்க. என்னத்த பண்றது எல்லாம் வந்த வழி அப்படி...........சரி மேட்டருக்கு வருவோம்......நண்பர் காலையில கையோசில கூப்பிட்டாரு சாரிபா கைப்பேசில கூப்பிட்டு........

மச்சான்..........ஒரு பெரிய பிரச்சன...............

டேய் நான் மீடிங்குல இருக்கேன் ..........என் அப்பன்(BOSS) முருகன் முன்னாடி இருக்காரு............

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு............

சொல்லு வெளிய வந்துட்டேன் சொல்லு சீக்கிரம்...............

எங்கப்பா எம்மேல கம்ப்ளைன்ட் குடுத்து இருக்காரு...........


என்னது உம்மேலையா ..............ஏன்........எதுக்கு.............

கொஞ்ச நாளாவே அவரு நடவடிக்க சரி இல்ல.........அம்மா அண்ணன் வீட்டுல இருக்கறது உனக்கு தெரியும்?........

தெரியும் சொல்லு............

திடீர்ன்னு என் பொண்டாட்டி எங்கிட்ட வந்து..........உங்கப்பா நான் குளிக்கும் போது சாவி துவாரம் வழியா பார்த்தாரு அப்படின்னு சொன்னா......... ஆனா நான் நம்பலே...........

டேய் சீ..........அப்படியெல்லாம் இருக்காது.......உங்கப்பா அந்தமாதிரி.............சான்சே இல்ல......அவங்களுக்கு எதாவது பிரமையா இருக்கும்............

நானும் அப்படித்தான் சொல்லி அவள திட்டி விட்டுட்டேன்.........ஒரு வாரம் முன்னாடி என் முன்னாலேயே..........."இந்தாம்மா அந்த ரோஸ் கலர் புடவை கட்டிக்கோ உனக்கு எடுப்பா இருக்கும் .........எனக்கும் அது தான் புடிக்கும்" அப்படின்னு சொன்னாரு.......
எனக்கு தூக்கி வாரிப்போட்டுது..........என்னாச்சி இவருக்கு........என் இப்படி எல்லாம் ..............பேசுறாருன்னு தோனுச்சி.......நாலு நாளு முன்னாடி புடவையே புடிச்சி இழுத்து இருக்காரு...........நான் கூப்பிட்டு கண்டிச்சேன்.........

அய்யயோ அப்புறம்..........


அதுக்கு அவரு .......உன் பொண்டாட்டி ஒரு கேசு.......அவள நம்பாதே அப்படின்னாரு.........எனக்கு கோவம் வந்து ரெண்டு பேருக்கும் சண்ட பெருசாயி ...........அவரு கெளம்பி ஊருக்கு போயிட்டாரு........

நேத்து என்னடான்னா நைட்டு ஒரு மணிக்கு போலிசு வீட்டு கதவ தட்டி எங்க நானுனு என் wife கிட்ட கேட்டு இருக்காங்க.......ஏன்னா நான் நைட்டு லேட்டா வருவேன்னு நெனச்சி....... நான் ஆபீஸ் வேலை அதிகமா இருந்ததால போக முடியல.........

சரி என்னா சொல்லிட்டு போனாங்க...........

உங்க புருஷன் மேல அவரு அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு.......அதுல அவர் உயிருக்கு ஆபத்துன்னும்..........தனக்கு ஏதாவது ஏற்பட்டா உங்க புருஷன் தான் காரணம் அப்படின்னு கொடுத்து இருக்காரு.........அப்புறம் லேட்டா வந்தாருன்னா...........ஸ்டேசன்........வந்து பாக்க சொல்லுங்க என்று சொல்லிட்டு போனாங்களாம்............இப்போ இன்னா செய்யறது............

தொடரும்...........

கொசுறு: இந்த விஷயத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறோம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

11 comments:

இரவு வானம் said...

முதல்ல அவங்க அப்பாவை ஏதாவது மனநல மருத்துவமனையில சேர்க்க சொல்லுங்க, நிறைய பேரு இப்படித்தான் சுத்திகிட்டு இருக்காங்க, கொஞ்சம் நார்மலாகிட்டாங்கன்னா எல்லாம் சரியாகிடும்.ஆனாலும் சிந்து சமவெளி படம் பார்த்த மாதிரியே இருக்கு...

பாரத்... பாரதி... said...

ஐய்யோ....படங்கள் பயமுறுத்துது...

பாரத்... பாரதி... said...

எதை நினைச்சா சிரிப்பு வருது... மிக அருமையான யோசனை.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இது விவேக் கையாளுற விதமா கையாண்டாதான் உரு[சரி]ப்படும்....

ஆமினா said...

ரொம்ப டெரரான அப்பாவா இருககரே...(படத்துல உள்ளது;)

சி.பி.செந்தில்குமார் said...

படங்கள் ல ஏன் இந்த கொலை வெறி..? ஹி ஹி பயந்துட்டேன்

சமுத்ரா said...

ஐய்யோ....படங்கள் பயமுறுத்துது..

மாணவன் said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....

நா.மணிவண்ணன் said...

சிந்த சமவெளி ?

NKS.ஹாஜா மைதீன் said...

என்ன கொடுமை சார்...

Philosophy Prabhakaran said...

கொஞ்சம் சீரியசான பிரச்சனையா தான் இருக்கு... சம்பவம் இந்தியாவில் நடந்ததா அல்லது வியட்நாமில் நடந்ததா....? நான் இந்தியா என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பதில் சொல்ல முடியும்... முதலில் நல்ல வக்கீலை சந்தித்து உங்கள் நண்பருக்கு முன்ஜாமீன் எடுத்து வையுங்கள்... அதன்பிறகு வீட்டில் வேறு சில பெரியவர்கள் அதாவது உங்கள் நண்பருக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமா முறையில் இருப்பவர்களை அழைத்துக்கொண்டு அவரது தந்தையை சந்தித்து பேசுங்கள்... முதலில் கனிவாக பேசி புரிய வைக்க முயலுங்கள்... முடியவில்லை என்றால் மிரட்டிப் பார்க்கவும்... சுருங்கச் சொன்னால் சாம, தான, பேத, தண்டம் நான்கையும் பயன்படுத்தச் சொல்லுங்க....


நாளும் தோத்துபோச்சுன்னா தகிடுதத்தோம்... SAY தகிடுதத்தோம்...