Followers

Wednesday, January 5, 2011

உதவி (HELP) தேவை - பணம் அல்ல!?


நண்பர்களே நேற்று சில நண்பர்களிடம் இணையம் வழியாக பேசிக்கொண்டு இருக்கும் போது சில விஷயங்கள் நெஞ்சை அடைத்தன.

அவைகள் நட்டாற்றில் விடப்பட்ட பெரியவர்களின் வாழ்வாதாரப்பிரச்சனை. அதாவது இந்தப்பெரியவர்களை வீட்டில் வைத்துக்கொள்ள இவர்களின் வாரிசுகள்(பணத்திற்க்கு மட்டும்!) தயாராக இல்லை.


நான் பேசிப்பார்த்த போது பணம் தரத்தயார் ஆனால், "எங்களுக்கு நேரம் இல்லை" அதனால் முடிந்தால் நீங்களே நல்ல முதியோர் காப்பகம் சொல்லுங்கள். நாங்கள் ஒரு முறை வந்து படிவம் வேண்டுமென்றால் எழுதிக்கொடுத்து எங்கள் வீட்டு பெரியவர்களை சேர்த்து விட்டு வந்து விடுகிறோம் என்றனர்.

இந்த மக்கள் தங்களால் ரூபாய் 3000 - 3500 (மாததிட்க்கு)வரை தர இயலும் என்று கூறுகின்றனர். இந்த குடும்ப தலைவர்களின் மாத வருமானம் ரூபாய் -15000 கீழ் என்பது குறிப்பிடத்தக்கது.

எமக்கு வேண்டிய தகவல் இதுவே:

1. சென்னையில் உள்ள முதியோர் இல்லம்(குறைந்த பணம் வாங்கும்!)முகவரி மற்றும் தொலைபேசி ...

2. இந்த முதியோர் இல்லங்க ரூபாய் 3000 - 3500 க்குள் வாங்குபவை பற்றிய தகவல் தேவை.

3. முன் வைப்பு தொகை ரூபாய் 5000/-  வரை கொடுக்க இயலும்(சம்பந்தப்பட்டவர்களின் அதிக பட்சமாக!).

4. முக்கியமான விஷயம் இந்த பெரியவர்கள் அனைவரும் வாரத்தில் மூன்று முறை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை (சென்னை central railway station எதிர் இருப்பது) சென்று வந்தாகவேண்டும். அதனால் அதிக பட்சமாக 5 - 10 கிமீக்கு மிகாமல் இருந்தால் நல்லது.

தெரிந்தால் தெரிவிக்கவும்.

தெரிவிக்க வேண்டிய முகவரி : vbvvvmv@gmail.com அல்லது dandanaka.vijay@gmail.com 


ஏனெனில் நானும் எனது நண்பர்களும் இனைய வழி தொலை பேசி மூலம் பல இல்லங்களுக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் கேட்ட தொகை ரூபாய் 7000 - 10000. அதுமட்டுமின்றி முன்தொகை (deposit) - ரூபாய் 30000 லிருந்து 1 லட்சம் வரை.

இந்தப்பெரியவர்களுக்கு செய்யும் உதவி அந்த கடவுளுக்கு செய்வது போன்றது.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் .................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

26 comments:

கக்கு - மாணிக்கம் said...

// பல இல்லங்களுக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் கேட்ட தொகை ரூபாய் 7000 - 10000. அதுமட்டுமின்றி முன்தொகை (deposit) - ரூபாய் 30000 லிருந்து 1 லட்சம் வரை.//

வயித்த கலக்குது. நாமெல்லாம் வயதான காலத்தில் என்ன பாடு பட போகிறோமோ? இத்தனைக்கும் அம்மா அப்பா என்று இறுதிவரை ஆதரித்து வாழ்ந்தவர்கள். இதுபோன்ற வயதான முதியர்களுக்கு மதிய மாநில அரசுகள் நிச்சயம் நலத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் செய்ய மாட்டார்கள். மக்களை பற்றியே சிந்தனை இல்லாதவர்கள் கிழவர், கிழவிகளை பற்றியா யோசிப்பார்கள்?

THOPPITHOPPI said...

எனக்கு சரியாக தெரியாது, நண்பர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

sir , i first salute u and to yr post. very usefull. defenetly i will help.

sathish777 said...

நான் சென்னை இல்லை..இருப்பினும் கொள்ளை கும்பல்கள் முதியோர் காப்பகம் என்ற பெயரில் நிறைய இருக்கின்றன...மேலும் பெரிய அளவில் வளர்ந்து விட்ட இல்லங்களில் பணம் தான் பெரிதாக எதிர்பார்க்கின்றன.கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் என்னால் செய்யக் கூடிய ஒரு உதவி இது தான் என் தளத்தில் பார்வைக்கு இடுகிறேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

பட்டாபட்டி.... said...

நான் பேசிப்பார்த்த போது பணம் தரத்தயார் ஆனால், "எங்களுக்கு நேரம் இல்லை" அதனால் முடிந்தால் நீங்களே நல்ல முதியோர் காப்பகம் சொல்லுங்கள். நாங்கள் ஒரு முறை வந்து படிவம் வேண்டுமென்றால் எழுதிக்கொடுத்து எங்கள் வீட்டு பெரியவர்களை சேர்த்து விட்டு வந்து விடுகிறோம் என்றனர்.
//

ஏண்ணே.. இவங்களை, சாணி தொட்டு செருப்பால அடிச்சுட்டு..
அப்புறம், அவங்களை பெற்றவர்களை, காப்பகத்தில் சேர்ப்பீர்களா?..

இது என் ஆசை..

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு. THOPPITHOPPI அவர்களே.

நன்றி

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.கக்கு - மாணிக்கம் அவர்களே

இதுக்குதான் சொல்றது குழந்தைங்க மேல அன்பு வைக்கறது தப்பு இல்ல, ஆனா அவங்க தான் நம்ம எதிர்காலம் என்று நினைப்பது தவறு.

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.சி.பி.செந்தில்குமார் அவர்களே

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே ,

உங்க ப்ளோக்ல என்னோட இந்தப்பதிவ போட்டு பலருக்கு போய் சேர உதவிய உங்களுக்கு கோடான கோடி நன்றி.

நான் காத்திருக்கிறேன்.....

என் இந்திய பெரியோர்களின் விடியலுக்காக.........

விக்கியுலகம் said...

@பட்டாபட்டி....வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.பட்டாபட்டி....அவர்களே,

பழைய குமாரா இருந்த R5 பிஸ்டலால அவன் நெத்திபொட்டுல சுட்டிருப்பேன்.

என்ன பண்றது காலம் நமக்கு பொறுமய கொடுத்திட்டுது.........

எப்பூடி.. said...

உங்கள் சமூக பொறுப்புக்கு மகிழ்ச்சி, நான் இலங்கை என்பதால் நீங்கள் கேட்கும் முகவரிகளை கொடுக்க இயலாதநிலை :-((

இந்த பதிவுக்கும் மைனஸ் ஒட்டா?

Philosophy Prabhakaran said...

இதுவரை முதியோ இல்லங்கள் பற்றி யாரிடமும் எதற்காகவும் விசாரித்ததில்லை... அது எனக்கு தேவையில்லாத விஷயம் என்பதால்... இருப்பினும் எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்... நான் கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன்...

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே,


"உங்கள் சமூக பொறுப்புக்கு மகிழ்ச்சி, நான் இலங்கை என்பதால் நீங்கள் கேட்கும் முகவரிகளை கொடுக்க இயலாதநிலை :-(("

நன்றி, உதவ நினைப்பவர்களால் உதவ இயலாது...கொடுகக்கூடியவர்களால் நினைக்க இயலாது.......இதுவே உலகம்.............விடுங்க கடமைன்னு வந்துட்டா உலகமே நம்மகூட...சரியா!

"இந்த பதிவுக்கும் மைனஸ் ஒட்டா?"

>>>
"இதத்தான் காலக்கொடும என்பார்களோ'

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran.. அவர்களே,

"ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்... நான் கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன்.."

>>>>>
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

ஆமினா said...

வருட்தப்பட வேண்டியவிஷயத்திலும் உங்களின் அக்கறை கண்டு பாராட்டுகிறேன்!!!

தகவல் கிடைத்தால் சொல்கிறேன்

விக்கியுலகம் said...

@ஆமினாவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே,

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

பதிவுலகில் பாபு said...

இந்தக் காலத்தில் அடுத்தவர் நலன்ல அக்கறை வைக்கறதுக்கு கண்டிப்பாக ஒரு பெரிய மனசு வேனுங்க..

கண்டிப்பாக என் நண்பர்களிடம் விசாரிக்கறேங்க..

பிரியமுடன் ரமேஷ் said...

5 லிருந்து 10 கிமீ தூரத்திற்குள் வேண்டும் என்றால் நிச்சயம் சென்னையில் இருக்கும் நண்பர்களால்தான் சரியாக கணிக்க முடியும்.. அங்கிருக்கும் நண்பர்களின் கவனத்திற்கு இதைக்கொண்டு சென்று முயற்சித்து பார்க்கிறேன் நண்பரே... நன்றி..

விக்கியுலகம் said...

@பதிவுலகில் பாபுவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.பதிவுலகில் பாபு அவர்களே.

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் said...

@பிரியமுடன் ரமேஷ்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.பிரியமுடன் ரமேஷ் அவர்களே.

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

நிச்சயம் பாராட்டுக்குரிய பதிவு.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே..! நானும் சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் விசாரித்துப் பார்க்கிறேன். தகவல் கிடைத்தால் நிச்சயம் கூறுகிறேன்.

விக்கியுலகம் said...

@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫அவர்களே.

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

ANKITHA VARMA said...

மனதை நெகிழ வைக்கின்றன.... சென்னை விருகம்பாக்கத்தில் ரெகபோத் ஹோம்ஸ் பற்றி அறிந்திருந்தேன்... சென்னை செந்தாமஸ் சர்ச் அல்லது அடையார் வேளாங்கண்ணி சர்ச் நிர்வாகத்திடம் பேசி பாருங்கள். இதற்கு முன் அவர்கள் தான் ஒரு கால் இல்லாத மனிதருக்கு உதவினார்கள். பணம் பெறாமல்... . அவர்கள் உதவக் கூடும்....

விக்கியுலகம் said...

@ANKITHA VARMAவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ANKITHA VARMA அவர்களே.

இது ஒரு முரண் பட்ட விஷயம் - அதாவது இந்த பெரியவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தான் அனாதை என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர்கள். அதனால் தான் நான் சற்று தடுமாறினேன். யாரும் இல்லை என்று கூறுவார்களேயானால் எளிதாக சேர்த்து விடலாம்.
உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.