Followers

Tuesday, January 25, 2011

மைதிலி அவன காதலி!?-(தற்கொலைக்கு தேவை!?)

ரொம்ப நாளா எழுதனும்னு இருந்தது இன்னைக்கு தான் முழுசா முடிஞ்சது. மேலும் இது காதை(கதை அல்ல) என்பதால், கொஞ்சம் யோசிச்சி எழுதணும் அதாவது அப்போ நடந்ததை மறக்காமல் குறிப்பிடவேண்டும் என்பதால். சரி தோன்றத செஞ்சிடனும் ஆராஞ்சிக்கிட்டே இருந்தா அது குழப்பமான மனநிலையே தரும். நான் என்ன இளம் வயதில் துறவியாவா இருந்திருக்க முடியும்!?

ஆரம்பம் - சென்னை TTK சாலை computer சென்டரில்............

சும்மா சொல்லக்கூடாது இந்த காதல் படுத்தும் பாட்ட முடியல! முடியல! என்று சொல்லிக்கொண்டே வந்தான் மணி.

என்னங்க சீனியர் இவ்ளோ சலிச்சிகிறீங்க என்றான் குமார்.

பின்ன என்ன இப்படி பைத்தியமா அலையறாங்களே! - என்றார் மணி.

வாங்க மைதிலி எப்படி இருக்கீங்க ............

நான் நல்லா இருக்கேன் நீங்க குமார் ?.................

நல்லா இருக்கங்க .............அப்புறம் இந்த computer class சுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க........ என்ன பண்றது என் அக்கா தொல்ல தாங்க முடியாம தான் இதுல சேர்ந்திருக்கேன்.

உங்கள மாதிரி சீனியர்ஸ் கொஞ்சம் ஹெல்ப் செஞ்சாத்தான் என்னை மாதிரி தமிழ் மீடியம்ல படிச்சு வர்ற பசங்க கொஞ்சமாவது தேற முடியும் என்றான் குமார்.

அட விடுப்பா, முதல்ல இந்த சீனியர் அப்படின்னு கூபுடரத நிறுத்து நான் என்ன உனக்கு அக்கா மாதிரியா இருக்கேன்! - என்றாள் மைதிலி

அப்படியில்லங்க நீங்க இங்க கிட்டத்தட்ட 2 வருஷ கோர்ஸ் படிச்சிட்டு இருக்கீங்க ......... நான் இப்போதான் சேர்ந்து இருக்கேன்... அதான்.............

விடு எதையுமே விருப்பத்தோட கத்துகிட்டாதான் புரியும் இல்லன்ன பணம் தான் வேஸ்டு - என்றாள் மைதிலி

சரிங்க .... என்று ஆமாம்சாமி போட்டு சென்றான் குமார்.

சில மாதங்கள் கழித்து............

எனன மைதிலி..... ரொம்ப நாளாச்சி உங்கள பாத்து....சார் கூட உங்க ப்ராஜெக்டு விஷயமா கேட்டுக்கிட்டு இருந்தாரு........ என்றான் குமார்.

உடனே அவள் கண்ணில் இருந்து கண்ணீர்(whole சேலா வச்சு இருப்பாங்களோ!) எட்டிப்பார்த்தது.

குமார் ......... தயவுசெஞ்சி என் கூட கொஞ்சம் டிரைவ் இன் வரை வர முடியுமா -  என்றாள்.

இதுக்கு எதுக்குங்க பெரியவார்த்த எல்லாம் சொல்றீங்க வாடான்னா வரப்போறேன்(பொண்ணுங்க செலவு பண்றதே பெரிய விஷயம் ஹி ஹி!).....

இன்னைக்கு நம்ம instructor கூட லீவு, வேற என்னா பொழப்பு...... மழை வேற இல்லையா ...........என்றான் குமார் வெகுளியாக...........

ஜெமினி அருகே உள்ள drive in

என்னங்க கூப்பிட்டு வந்து எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க ................

உனக்கு என்ன வேணும் ஆர்டர் பண்ணு........

மைதிலி இது self service பகுதிங்க(சுறு சுறுபானவங்களுக்கு மட்டும்!!) ........அந்தப்பக்கம் உக்காருவோம் வாங்க..........

எனக்கு ஒரு மசால் தோச..........ஒரு ஊத்தப்பம்.........அப்புறம்.......

ஏன்டா.........எவ்ளோ சீரியசான விஷயத்த பத்தி பேச வந்தா......சாப்பாட்டு ராமன் கணக்கா ஆர்டர் கொடுத்துட்டு இருக்க.........

(யக்கோவ் இப்போ கெடசாத்தான் உண்டு அப்புறம் நீங்க ஏதாவது சோக கதய சொல்லிட்டு காபி கூட குடிக்க விடாம........பில்லு கொடுக்காமா எழுந்து போயிடுவீங்க.......எத்தன சினிமா பாத்துகிறோம்....!!)


சொல்லுங்க..........

உனக்கு தெரியுமா நான் suicide  attempt பண்ணிட்டேன் அதான் 20 நாளா கிளாஸ் பக்கமா வர முடியல ............


என்னாது ..........என்னசொல்றீங்க.............(ஏதோ கிளாஸ் அட்டென்ட் பண்ணா மாதிரி சொல்றா!)

ஆமாம் ..........நேத்து தான் கொஞ்சம் உடம்பு சரியாச்சி.................

என்னங்க சொல்றீங்க ஒன்னும் புரியல..........கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க...........

மணி இருக்கானுள்ள ...........

அவருக்கு என்னங்க..........

அவனுக்கு ஒன்னும் இல்ல .........நான் அவன தான் லவ் பண்ணேன்..........

அதனால என்னங்க..........


அவன் என்னை லவ் பண்றதா சொல்லி 6 மாசம் ஆச்சி.........இப்போ வந்து "முடியாது எங்க மாமா பொண்ணத்தான் கட்டிக்கணும்னு வீட்டுல எங்கம்மா கட்டாயப்படுதுராங்கன்னு சொல்லிட்டு போயிட்டான்" ........

இதுக்கு போயா இந்த அளவுக்கு போனீங்க...........

உன்கிட்ட போய் சொல்றேன் பாரு.............லவ்வுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?.........

எனக்கு அதெல்லாம் தெரிஞ்சிக்கிற interest இல்லைங்க...........(எவன் கிட்ட வைட்டா பர்சு இருக்கோ அவன் தான் அந்த மாதிரி தப்பு காரியமெல்லாம் பண்ணுவான்!)


எனக்கு என்னை பத்தியே தெரிஞ்சிக்க முடியல இதுல இந்த தலவலிங்க வேறயா......

ஏன் அப்படி சொல்றே..........காதல் என்பது தெய்வீகமானது.......

(ஏன் அவன்கிட்ட நெறைய சொத்து இருக்கா! ஹி ஹி! - உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை)

சரிங்க அது எப்படியோ போகட்டும்.........விஷயத்துக்கு வாங்க.......நான் என்ன செய்யணும்.......சொல்லுங்க...........

தொடரும்.........

கொசுறு: உண்மைக்கதை - நாம எப்போவுமே பொய் சொல்லத்தெரியாத முட்டாப்பயலாச்சே இந்த உலகம் எப்படித்தான் நான் சொல்றத நம்பப்போகுதோ தெரியலையே!!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

8 comments:

Philosophy Prabhakaran said...

// தாங்கமுடியாத விஷயம் எது? //

எதுன்னு சொல்லவே முடியல... யோசிச்சு நாளைக்கு ஓட்டு போடறேன்... ஆனால் நிச்சயமா காதல் தோல்வி இல்லை...

சிவகுமாரன் said...

அது சரி. நீங்க மணியா, குமாரா ?

♔ம.தி.சுதா♔ said...

/////உண்மைக்கதை - நாம எப்போவுமே பொய் சொல்லத்தெரியாத முட்டாப்பயலாச்சே இந்த உலகம் எப்படித்தான் நான் சொல்றத நம்பப்போகுதோ தெரியலையே!!////

ஹ..ஹ..ஹ.. கள்ளச் சாமியார்களை நம்பும் உலகம் இதை நம்பாதா...

நா.மணிவண்ணன் said...

அட உலகத்த விட்டு தள்ளுங்க ஆனா நாங்க நம்புவோங்க , நீங்க சொல்ல ஆரம்பிங்க

MANO நாஞ்சில் மனோ said...

//காதல் என்பது தெய்வீகமானது.......//
பதிவு சூப்பர்....

எப்பூடி.. said...

//உண்மைக்கதை - நாம எப்போவுமே பொய் சொல்லத்தெரியாத முட்டாப்பயலாச்சே இந்த உலகம் எப்படித்தான் நான் சொல்றத நம்பப்போகுதோ தெரியலையே!!!//

உலகமும் உங்களை மாதிர்த்தான், நம்பும்; நம்புங்க பாஸ் :-))

கவிதை காதலன் said...

//என்னாது ....என்னசொல்றீங்க..(ஏதோ கிளாஸ் அட்டென்ட் பண்ணா மாதிரி சொல்றா!)//

சரியான பஞ்ச்.. சந்தானத்துக்கு சினிமாவுல யூஸ் ஆகுமோ..
மணிங்கிற என் பேரை யூஸ் பணதுக்கு ஒழுங்கா ராயல்டி கொடுங்க.. இல்லைன்னா இளைஞன் படத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்திடுவேன்

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

Suresh said...

super. viruviruppa irukku