Followers

Thursday, December 23, 2010

சமர்ப்பணம்- 50 வது பதிவு


என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.



என் பதிவுகளை மதித்து, எவ்வளவு மொக்கைபதிவாக இருப்பினும் அதைத்தாங்கிக்கொண்டு என்னைப்பின்தொடரும் கலியுக கடவுள்கள்(அவர்தான நாம என்னா சொன்னாலும் அமைதியா போவாரு) 48 பேருக்கும் நன்றி.

இந்த மாதத்தில் தான் நான் நிறைய பதிவுகள் (உட்டாலக்கடி!?) எழுதிஉள்ளேன். இதற்கு முழு முதல் காரணமான என் மனைவிக்கு நன்றி(ஒன்னரை மாதங்களாக இந்தியா சென்று இருந்தார்).

இத்துடன் எனது சிறிய சுயபுராணத்தை (அதாங்க பயோடேட்டா!?) இணைத்துள்ளேன்.

பெயர்: குமார்.

வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects)

உப வேலை : ப்ளாக் எனும் பெயரில் ஊர் வம்பை விலைக்கு வாங்குவது(கொல்றாங்களே ,காப்பாத்துங்க, காப்பாத்துங்க).

தலைவர்கள்: தமிழ் ஆர்வலர்கள்.

உப தலைவர்கள்: மனைவி மற்றும் மகன்.

வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!)

நண்பர்கள்: ப்ளாகில் ஓட்டும் கருத்தும் சொல்பவர்கள்.

பலம் : எதையும் தாங்கும் மனைவி கிடைத்தது.(யப்பா ஐஸ் போதுன்னு நெனைக்கிறேன்)

பலவீனம்: சொந்தங்களை பிரிந்து வேலை(பணம்) காரணமாக வெளிநாட்டில் உழைப்பது.

சமீபத்திய சாதனை: நானும் ஒரு ப்ளாக்கர்.

நீண்ட நாளைய சாதனை: முன்கோபத்தை விட்டது.

பாதித்த விஷயம்: சகோதரி சமீபத்தில் இறந்தபோது வேலை விஷயமாக அணை பார்வையிட சென்றதால் கைப்பேசி இரண்டு நாள் எடுக்காமல் போய் சாவுக்கு கூட இந்தியாவுக்கு போக முடியாமல் போனது.


சாதித்தது:  இதுவரை நண்பர்களைத்தவிர ஒன்றுமில்லை (ஐயோ கல்யாணம் மறந்துட்டனே!)

கொசுறு: வழக்கம்போல ஓட்ட குத்துங்க, கருத்த மறக்காம சொல்லுங்க.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

37 comments:

வெறும்பய said...

வாழ்த்துக்கள்..

வைகை said...

வாழ்த்துக்கள்!

வைகை said...

சகோதரி சமீபத்தில் இறந்தபோது வேலை விஷயமாக அணை பார்வையிட சென்றதால் கைப்பேசி இரண்டு நாள் எடுக்காமல் போய் சாவுக்கு கூட இந்தியாவுக்கு போக முடியாமல் போனது./////


நம்மைப்போல வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற தருணங்கள் கொடுமையானது நண்பா!

பதிவுலகில் பாபு said...

வாழ்த்துக்கள்..

♔ம.தி.சுதா♔ said...

சில நெருடல் பல வருடல்... மொத்த்தில்.. ரசனை.ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

விக்கியுலகம் said...

@வெறும்பயவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. வெறும்பய அவர்களே.

விக்கியுலகம் said...

@பதிவுலகில் பாபுவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. பதிவுலகில் பாபு அவர்களே.

விக்கியுலகம் said...

@வைகைவருகைக்கும், கருத்துரைக்கும்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. வைகை அவர்களே.

பார்க்கணும்னு இருந்தா மட்டுமே பார்க்க முடியும்!திரு. வைகை அவர்களே.

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாவருகைக்கும், கருத்துரைக்கும்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே.

ஏதாவது தவறாக சொல்லி இருக்கிறேனா!

நா.மணிவண்ணன் said...

ஒரு வருத்ததுடன் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்டிமென்டா போட்டுடீங்க, 50க்கு வாழ்த்துக்கள்!

பாரத்... பாரதி... said...

சுய விவரங்கள் தந்ததற்கு நன்றிகள்..

பாரத்... பாரதி... said...

அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... said...

வெங்கட் குமார் என்பது யாருடைய பெயர்?

ரஹீம் கஸாலி said...

வாழ்த்துக்கள் நண்பரே....தொடர்ந்து எழுதுங்கள். உங்களோடு நாங்கள் இருக்கிறோம்.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ...

எப்பூடி.. said...

இன்னும் பல நூறு பதிவெழுதி சிறக்க வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>
வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects)

like sirippupolice ramesh?

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இதற்கு முழு முதல் காரணமான என் மனைவிக்கு நன்றி(ஒன்னரை மாதங்களாக இந்தியா சென்று இருந்தார்).

super knosecut

சி.பி.செந்தில்குமார் said...

congrats for 50 . pls stop often make 90 in tasmac, ha ha ha

Philosophy Prabhakaran said...

முதலில் வாழ்த்துக்கள்... அப்புறம்...

// பெயர்: குமார் //
நான் வெங்கட் என்றுதானே நினைத்திருந்தேன்... அப்படின்னா whos vicky...?

// வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects) //
அப்படின்னா நீங்க ராணுவ வீரர் இல்லையா...?

// வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!) //
இதுல ஏதும் உள்குத்து இருக்கா...?

உங்களை பாதித்த விஷயம் எங்களையும் பாதித்தது... கவலையை விட்டுத்தள்ளவும்... காலம் உங்கள் காயங்களை ஆற்றட்டும்...

நான் சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய உதவி வேண்டி ஒரு மெயில் அனுப்பி இருந்தேன்... ஆனால் இதுவரை உங்களிடம் இருந்து பதில் இல்லையே....

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே.

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி... நன்றி திரு.பாரத்... பாரதி...அவர்களே.

வெங்கட்(ரொம்ப பெருசு அதனால ஸ்டைலா நான் சுருக்கினது) என்பது எனது தந்தை பெயர்.

குமார் என்பது எனக்கு என் தந்தை வைத்த பெயர்.

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி நன்றி திரு.ரஹீம் கஸாலி அவர்களே.

விக்கியுலகம் said...

@எப்பூடி.. நன்றி திரு.எப்பூடி..அவர்களே.

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில் நன்றி திரு.கே.ஆர்.பி.செந்தில் அவர்களே.

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார் நன்றி சி.பி.செந்தில்குமார் அவர்களே.

"super knosecut"
-
அய்யா சாமி நல்லா இருக்குற குடும்பத்துல பாம் போட்டு போயிட்டீங்களே

- ஒரு தமாசுக்காக!(கண்டு புடிசிருப்பாளோ, ச்சே ச்சே!)

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்


நன்றி சி.பி.செந்தில்குமார் அவர்களே.

இன்ஜினியரிங் சம்பந்தப்பட்டதல்ல

- ஒன்லி administration.

நன்றி சி.பி.செந்தில்குமார் அவர்களே.

இன்ஜினியரிங் சம்பந்தப்பட்டதல்ல

- ஒன்லி administration.

"மேஸ்திரி"(மாண்புமிகு அல்ல)

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்>>>>>>>
"congrats for 50 . pls stop often make 90 in tasmac, ha ha ha"

"துர இங்கிலிஸ்ல எல்லாம் பேசுது"

நாம அடிச்சா புல்லு இல்லன்ன கல்லு (இப்போதைக்கு சரக்கு விஷயத்துல ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லைங்க!)

ஆமினா said...

வாழ்த்துக்கள் சகோ

விக்கியுலகம் said...

@philosophy prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே.

1.// பெயர்: குமார் //
நான் வெங்கட் என்றுதானே நினைத்திருந்தேன்... அப்படின்னா whos vicky...?

>>>>>
வெங்கட்(உண்மையில அவரோட பேரு ரொம்ப பெரிசு அதனால ஸ்டைலா நான் சுருக்கினது) என்பது எனது தந்தை பெயர்.
குமார் என்பது எனக்கு என் தந்தை வைத்த பெயர்.

என் மகனின் செல்லப்பெயர் விக்கி.

2.// வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects) //
அப்படின்னா நீங்க ராணுவ வீரர் இல்லையா...?

-இப்பொழுது வாழ்வின் இரண்டாம் பாகம்.

முதல் பாகம் முடிந்து விட்டது(கடந்த காலம்)

3. // வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!) //
இதுல ஏதும் உள்குத்து இருக்கா...?

>>>>

இதில் எதுவும் உள்குத்து இல்லை.ஒரு flow ல வந்துடுச்சி.

4.உங்களை பாதித்த விஷயம் எங்களையும் பாதித்தது... கவலையை விட்டுத்தள்ளவும்... காலம் உங்கள் காயங்களை ஆற்றட்டும்...
>>>
நன்றி

5.நான் சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய உதவி வேண்டி ஒரு மெயில் அனுப்பி இருந்தேன்... ஆனால் இதுவரை உங்களிடம் இருந்து பதில்
இல்லையே....

>>>
நான் கவனிக்கவில்லை. முடிந்தால் மறுமுறை அனுப்பவும்.

விக்கியுலகம் said...

@ஆமினாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ...

விக்கியுலகம் said...

@பிரஷாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.பிரஷா அவர்களே

இரவு வானம் said...

50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@இரவு வானம்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. இரவு வானம் அவர்களே.