Followers

Friday, December 24, 2010

அக்கா - தாயா!நண்பியா!?


நான் இந்த தளத்தை என் மனசாட்சியாக கருதுவதால். என் மனதில் தோன்றுவதை, பாரத்தை இறக்கிவைக்கும் ஒரு சுமைதாங்கியாகவே நினைக்கிறேன். அதனால் நண்பர்கள் யாரும் இது ஒரு அழுகாச்சி பதிவு என்று எண்ணிவிடவேண்டாம்!



அவள் எப்போது என் வாழ்வில் வந்தாள்.....................

அது நான் 8 வது படித்துக்கொண்டு இருக்கும்போது நடைபெற்ற சம்பவம்:

டேய் குமாரு ..........

என்னப்பா ........... வா மாம்பலத்துக்கு போயி ட்ரஸ் எடுத்துட்டு வரலாம் வா.

என்னா திடீர்னு...........

மாமாக்கு கல்யானம்ல அதேன்........... அந்த திருமண நிகழ்வின் போது தான் அவளை நான் முதல் முறையாகப்பார்தது.

அதற்கடுத்து பல நாட்கள் கழித்து மாமா வீட்டுக்கு செல்லும்போது அன்புடன் அவள் அளித்த பலகாரங்களை தின்றபோது.......... அவள் கூறிய வார்த்தைகள் இன்றும் ஞாபகம் வருகிறது...

இங்கபாரு கூச்சப்படாதே .......உனக்கு என்னா வேணும் நா வாங்கி தாரேன்............ஆனா நீ நல்லா படிச்சி பெரியா ஆளா வரணும் சரியா.

எல்லோரும் சொல்லும் சாதாரண வார்த்தைதான். ஆனால் அதற்க்காக அவள் செய்த முயற்சிகள் கணக்கில் அடங்காதவைகள்.......... என் மீதும் என் படிப்பின் போக்கின் மீதும் வீட்டில் உள்ளோருக்கு நம்பிக்கை போனபோது....

இங்க பாருங்க..... இவன என்கூட அனுப்பி வைங்க நான் பாத்துக்கறேன் என்று அவள் வீட்டுக்கு கூட்டி வந்து என்னை படிக்கவைத்தது.

இவன் 10 வது பாஸ் ஆனாலே பெரிய விஷயம் என்று எல்லோரும் சொன்ன போது இவனை டிகிரி முடிக்க வைக்கிறேன் என்று அவள் போட்ட சபதம்............

என் தந்தை ஐயோ இப்படி முரட்டு பயலா போயிட்டானே என்று வருந்தும் போது.........கவலைப்படாதிங்க இந்த வயசுல அவனுக்கு பொறுப்புன்னா என்னா தெரியும்..........போக போக சரியாப்போயிடுவான் என்று தட்டிக்கொடுத்து ஊக்கு வித்த பாங்கு ...............

ஸ்பெஷல் கிளாசுக்கு போவதாக சொல்லிவிட்டு சினிமா பார்த்து விட்டு வந்த என்னை அடிக்க வந்த அப்பாவுக்கு முன் ....... ஏம்பா சினிமாவுக்கு தான் போறேன்னு என்கிட்டே சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் பணம் அதிகமா கொடுதிருப்பேனுள்ள..... 1st கிளாஸ் டிக்கட்டுக்கு போயி இருக்காலாமுள்ள என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்த அவள்.......

காலேஜுக்கு போயும் திருந்தாம சீனியரு ரெண்டு பேர காலேஜ் கிரவுண்டுல வச்சி புரட்டி புரட்டி எடுத்த போது (இதுல வீரம்னு நெனப்பு இவனுக்கு) பிரின்சிபால் என்னை காலேஜ விட்டே தூக்க முடிவு பண்ண போது ........... அங்கு வந்து எனக்காக பரிந்து பேசி உண்மையை விளக்கி ..........என் தம்பி வேணும்னு அடிச்சிருக்க மாட்டான்... நீங்க என்னப்பா பண்ணீங்க என்று விளக்கம் கெட்டு அவர்களின் அசிங்கமான (ராகிங்கு) நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி என்னை காப்பாற்றிய அவள்.

டேய் இந்த வயசுல சைட்டு அடிக்காமா சாமியாரு மாதிரி எப்ப பாரு உம்முன்னு மூடியா இருக்காத .............அது உன் எதிர்காலத்துக்கு நல்லது இல்ல ............ சந்தோசமா இரு ..........ஆம்பள.. பொம்பளன்னு பாத்து பாத்து பழகுனா நல்ல விதமா யோசிக்க வராது......வக்கிர புத்தி தான் பெருகும் என்று எனக்கு நடு மண்டையில் ஆணி அடித்தாட் போல உணர வைத்த அவள்.........


இன்று எங்கு சென்றாள் இந்த முரட்டு தம்பியை பார்க்காமல்............

தொடரவா வேண்டாமா.............தெரியவில்லை..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

ஜீ... said...

//நான் இந்த தளத்தை என் மனசாட்சியாக கருதுவதால். என் மனதில் தோன்றுவதை, பாரத்தை இறக்கிவைக்கும் ஒரு சுமைதாங்கியாகவே நினைக்கிறேன்//
நல்லது! தொடருங்கள்! :-)

நா.மணிவண்ணன் said...

கண்டிப்பாக தொடருங்கள் விக்கி உலகம்

எப்பூடி.. said...

நீங்கள் தொடர்ந்தால் முடிவு பொசிடிவாக இருக்குமென்று நான் நம்பவில்லை, ஏதோ ஒரு வலி காத்திருக்கிறது போல உணர்கிறேன். இருந்தாலும் தொடருங்கள்.

Philosophy Prabhakaran said...

தயவு செய்து தொடர வேண்டாம் நண்பரே....

Philosophy Prabhakaran said...

// தயவு செய்து தொடர வேண்டாம் நண்பரே.... //

இப்படி நான் சொன்னது சரியா என்று தெரியவில்லை.... அது உங்கள் விருப்பம்... எனினும் இதை நீங்கள் தொடர்ந்தால் நான் நிச்சயம் படிக்கமாட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

வணக்கம் நண்பரே இந்தப் பதிவு புனைவா அல்லது உங்களின் உண்மையான நிகழ்வுகளில் தொகுப்பா என்று எனக்குத் தெரியவில்லை . எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உணர்ந்து எழுதப்படாதாகவே எண்ணத் தோன்றுகிறது . பதிவின் இறுதியிலும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் முடித்திருக்கிறீர்கள் . தொடருங்கள் நண்பரே அக்கா என்ன ஆனார்கள் அறிந்துகொள்ள ஆர்வம் அதிகரிக்கிறது

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தொடருங்கள் நண்பரே...அக்கா பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளது..

சிவகுமாரன் said...

தொடருங்கள்

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்நன்றி திரு. நா.மணிவண்ணன்அவர்களே.

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@ஜீ...நன்றி திரு. ஜீ... அவர்களே.

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@எப்பூடி..நன்றி திரு.எப்பூடி.. அவர்களே.

உண்மைதான் ........

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫



நன்றி திரு. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ அவர்களே.

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@சிவகுமாரன்
நன்றி திரு.சிவகுமாரன் அவர்களே.

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@பிரஷா
நன்றி திரு.பிரஷா அவர்களே.

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@philosophy prabhakaran
நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே.

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.