Followers

Friday, December 31, 2010

ததாதிதிது...(புத்தாண்டு(English new year) பிடுங்கல்கள்!?)


முதலில் எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீங்கல்லாம் எல்லா சந்தோசத்தையும் இந்த வருசம் இரட்டிப்பா பெறனும் என்று விரும்புகிறேன்.



எல்லோரும் இந்த வருஷ குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள் என்று சபதமெடுப்பது வழக்கமாகிவிட்டது(நடக்குதோ இல்லையோ அதுவேற!!). நானும் எடுத்துதான் வைப்போமே என்றால்.....................?


அ. வீட்டுல மனைவி இந்தியா போயி திரும்பி வந்து மறுபடியும் பெரிய விக்கட்டு(அதாங்க இன்னொரு பெரியவங்க இயற்கஎய்திட்டாங்க) ஒன்னு விழுந்திடுச்சின்னு போய் இருக்காங்க. இந்த வீட்டு சாப்பாடு பறிபோய் ஏற்கனவே ரெண்டு மாசமாச்சி. அதனால bachelor ஆக இருந்த போது நல்ல சமையல்காரன்னு நண்பர்கள் கிட்ட பேர் வாங்கிய அந்த பழைய கலைய திரும்ப கொண்டு வர்றதா முடிவு பண்ணி இருக்கேன்.

ஆ. இது வரை பதிவுலகத்துல யாரிடமும் எந்த வாக்குவாதமும் நடத்தாம ஏதோ பொழப்பு நல்ல விதமா போயிட்டு இருக்க எனக்கு துணையா இருக்கும் எங்காத்தா மாரியாத்தாவுக்கு பொங்க வைக்கணும்(இந்த வருசம் முடியாது - ரெண்டு பெரிய தல போச்சே)

இ. இந்த வருடம் - ரொம்ப வருசமா விட்டு இருந்த பல நட்புகள் திரும்ப கிடச்சதுல மிகுந்த சந்தோசம். வரும் வருடமும் மீத மிருக்கும் நண்பர்களையும் கண்டு பிடுச்சிடுவேன்னு நம்பிக்கை வந்து இருக்கு.....


ஈ. எப்படியாவது தேர்தல் நேரத்துல லீவு எடுத்து சென்னைக்கு போயி என் ஓட்ட நான் பதிவு பண்ணனும்(ஆண்டாவா அதுவரை யாரும் என்னோட ஓட்ட போடாம பாத்துக்க!?)

உ. உலக பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்து பல பெரிய ஒப்பந்த வேலைகள் அடுத்த வருசம் ஆரம்பமாக இருக்கு. இதன் மூலம் என்னோட கனவு பலிசி நானும் ஒரு நல்ல அரசியல்வாதியா(வியாதியா அல்ல) என் தமிழ் மண்ணுல கால் பதிக்க முடியும்னு நம்புறேன்(எத்தன நாள் தான் அவன் சரியில்ல இவன் சரியில்ல என்பது).


ஊ. இன்னும் நாலு வருஷ கடமை நாளையிலிருந்து ஆரம்பிக்குது. அது முடிஞ்சி என் மக்களுக்கு என்னால் ஆன சேவையை செய்ய கடவுள் எனக்கு துணை இருப்பார் என்று நம்புகிறேன்.


எ. என் பழைய நண்பர்களும் இந்தியாவுக்கு இன்னும் நாலு வருடத்துல திரும்ப இருப்பதால் நல்ல பல விஷயங்கள செய்யறதா முடிவு எடுத்திருக்கோம். அதுவரை எங்க ஊர காப்பாத்து சாமியோவ்!!

கொசுறு: என்ன முடியும் இந்த மக்களால் என்பவரை, எல்லாம் முடியும் இதே மக்களால் என்பதை நிரூபிப்போம்(தும்பிக்கை போன்ற நம்பிக்கையுடன் நாளை நமதே).
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே.

தங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்வில் இன்று போல் என்றும் அமைதி தவழ வேண்டுகிறேன்.

வைகை said...

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

விக்கியுலகம் said...

@வைகைவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.வைகை அவர்களே.

நன்றி

மாணவன் said...

//என்ன முடியும் இந்த மக்களால் என்பவரை, எல்லாம் முடியும் இதே மக்களால் என்பதை நிரூபிப்போம்(தும்பிக்கை போன்ற நம்பிக்கையுடன் நாளை நமதே).//

அருமை நண்பரே சூப்பரா சொல்லிருக்கீங்க பாராட்டுக்கள்.....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..........

விக்கியுலகம் said...

@மாணவன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.மாணவன் அவர்களே.

நன்றி

உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நா.மணிவண்ணன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

ஜீ... said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

// எப்படியாவது தேர்தல் நேரத்துல லீவு எடுத்து சென்னைக்கு போயி என் ஓட்ட நான் பதிவு பண்ணனும் //

சென்னை வந்தா மறக்காம சொல்லுங்க... மீட் பண்ணலாம்...

எப்பூடி.. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@யோவ்
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.யோவ் அவர்களே.

உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@ஜீ...
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே.

உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@philosophy prabhakaran
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே.

உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

"சென்னை வந்தா மறக்காம சொல்லுங்க... மீட் பண்ணலாம்.."
>>>>>

கண்டிப்பா மீட் பண்ணுவோம் - உங்களைப்போல செயல் வீரர்கள் இந்த நாட்டுக்கு நெறைய தேவைப்படுகிறார்கள்.

THOPPITHOPPI said...

பதிவுலகில் நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கும்.

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே.

உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

விக்கியுலகம் said...

@சிவகுமாரன்வருகைக்கும், கவிதைக்கும் நன்றி திரு.சிவகுமாரன் அவர்களே.

உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.