Followers

Tuesday, January 11, 2011

அரசியல் செய்யலாம் வாங்க..!? - 1

என்னடா இது தலைப்பு இப்படி இருக்கேன்னு நெனசீங்கன்னா, ஒன்னுமில்லீங்க உண்மையான விஷயங்களை கொஞ்சம் பகிர்த்து கொள்ளவே இந்தப்பதிவு.




அரசியல் = அறம் + செயல் = அதாவது தருமம், கொடை, கருணை - இப்படி மூன்று பெரும் விஷயங்கள் இந்த ஒரு சொல்லில் அடக்கம்.

அரசன் = அறம் செய்யும் தலைவன் = அதாவது மக்களின் துயரங்களுக்கும், சந்தோசங்களுக்கும் முழுமுதல் பொறுப்பானவன் என்பதே.

ஆனால், அன்று தொட்டு இன்று வரை - இந்தப்பேருக்கு சொந்தக்காரர்கள் பெரும்பாலும் அச்சொல்லுக்கு ஏற்றாற்போல நடந்ததில்லை.

அன்று அவரவர் காழ்புணர்ச்சி மற்றும் தானே உயர்ந்தவன் எனும் திமிரில் அடுத்தவன் நாட்டின் மீது படையெடுத்து சென்று வெற்றி பெறுவதை கவ்ரவமாக நினைத்தார்கள்.
- அன்றும் அந்த நாட்டின் மக்களை ஒரு வார்த்தையேனும் கேட்டா போர் புரிந்து இருப்பார்கள்!? - வாய்ப்பே இல்லை!.


இன்று தன் நாட்டு மக்கள் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்று அந்நிய நாடு என்னா செய்கிறது என்று பார்த்துக்கொண்டே பல குண்டுகளையும், அதி நவீன படைக்கலங்களையும் சேர்த்துக்கொண்டு இருக்கின்றனர் ஆளும் வர்க்கம்.

அன்று தொட்டு இன்று வரை மக்கள் ஆட்டு மந்தைகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.


அன்று தான் தவறான தீர்ப்பிழைத்து தன்னால் ஒருவன் இறந்து விட்டானே என்று எண்ணி தன்னுயிர் நீத்த மன்னனும் வாழ்ந்து மறைந்தான்.

இன்று தன் மக்கள்(பெற்ற!) மனம் கோணக்கூடாது என்று மக்களை சுண்டு விரல் அசைவில் ஆட்டுவிக்கும் மன்னர்களும் இருக்கிறார்கள் இந்தக்காலத்தில்!


என்று தணியும் இந்த ஆட்டு மந்தைகளின் தாகம்.............காத்திருங்கள் ...........காலம் கனியும்..............

நானும் தொடர்வேன்............உங்களின் விழி வழியே என் வழியாக.......

கொசுறு: என்னுடைய குறிக்கோளின் ஆரம்பம் இது....தொடர்வேன். என் மக்களுக்காக என்று பொய் சொல்ல நான் தலைவனல்ல .........என் அடுத்த சந்ததிக்காக என்று மெய் சொல்வேன் ஒரு குடும்ப தலைவனாக...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

10 comments:

MANO நாஞ்சில் மனோ said...

super makkaa...

MANO நாஞ்சில் மனோ said...

vadai....

sathish777 said...

வாழ்த்துக்கள் உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிரேன்

இரவு வானம் said...

அருமையான பதிவு நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

GOOD POST SIR. WE R EXPECTING MORE FROM U

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

புகைப்படங்களும் தகுந்த வர்ணனைகளும் சிந்திக்க செய்கிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

அஞ்சா சிங்கம் said...

நல்ல பதிவு
அரசியல் செய்யலாம் வாங்க..!?///////

எந்த கட்சின்னு சொல்லலையே .........
கேப்டன் கட்சியா ??????????

எப்பூடி.. said...

//என் மக்களுக்காக என்று பொய் சொல்ல நான் தலைவனல்ல .........என் அடுத்த சந்ததிக்காக என்று மெய் சொல்வேன் ஒரு குடும்ப தலைவனாக...//

தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க :-)

Philosophy Prabhakaran said...

சொல்ல வந்த விஷயம் எதுவும் முதல் பாகத்தில் இல்லாததால் இரண்டாம் பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்...

Philosophy Prabhakaran said...

// என்னுடைய குறிக்கோளின் ஆரம்பம் இது //

உங்களது இந்த குறிக்கோள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்...