Followers

Wednesday, January 5, 2011

மக்கள் ஆட்சி!? -பாகம் 1



காலையில இருந்து ஒரு வேலையும் நடக்கல(நடந்துட்டாலும்!). நல்லவங்க நாலுபேரு கூப்பிட்டும் இரவு வெளியே  செல்லாமல் போனதால் உடல் நலம் நன்றாக உள்ளது. சொந்தகதைய விட்டு பதிவு எழுத வந்தக்கதயப்பார்ப்போம்......



திடீர்ன்னு ஒரு கொடுமையான எண்ணம் - இப்படி நடந்தால் ............ அதோட வெளிப்பாடே இந்தப்பதிவு.

மக்கள் ஆட்சி அதாவது உண்மையான மக்கள் ஆட்சி வந்தது என்றால்?!


அரசியல்வாதி(!?) தகுதிகளாக அறிவிக்கப்படுபவை:

1. அரசியல்வாதியாக மக்கள் சபை தேர்தலில் நிற்கவேண்டும் என்றால் அடிப்படை தகுதியாக குறைந்தது 10 வது படித்திருக்கவேண்டும்(அதுக்காக தமிழ் கவிதை சொல்லித்தான் ஆகவேண்டும் என்றுஇல்லை!).

2. 5 வருடம் குடுக்கப்படும் வேலைக்கு(பதவி) இவருக்கு மாதந்திர ஊதியமாக ஒரு லட்சம் வழங்கப்படும்.மற்றபடி எதாவது சம்பாதிக்க முயன்றால் இவரையும் இவருக்கு அடுத்து வரும் தலைமுறை மக்களையும் பாலர் கல்வி(1 முதல் 3 வகுப்பு வரை)  அகத்தில் விடப்படுவார்கள்(குயந்தைங்க படுத்துற பாட்டுலயே வாழ்கை புரிஞ்சிடும்!).


3. அரசியலுக்கு வரும் மனிதருக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே இருக்கவேண்டும். மனைவி அல்லாது வேறு எதாவது தொடர்பு இருந்து நிரூபிக்கப்பட்டால் பின்வரும் காலங்களில் அவர் எந்த இரவுக்கும் மகிழாதவண்ணம் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

4. குழந்தைகள் 2 க்கு மேல் இருப்பின் அவருக்கு அனுமதி மறுக்கப்படும்.

5. இவரின் அரிய தொண்டு மூலம் மக்கள் பயனடைந்தது நிரூபிக்கப்பட்டால் இவருக்கு ஆயுள் ஊதியம் (மாதாந்திரமாக) தொடர்ந்து வழங்கப்படும்.

6. இவ்வேலைக்கு(பதவிக்கு) எடுக்கப்படும் போது இவருக்கு எல்லாவித மருத்துவ பரிசோதனைகளும் எடுக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்ட பிறகே தகுதி பற்றி அறிவிக்கப்படும்.

7. நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்கும் சபையில் உள்ள விவசாயி,மாணவர்,பெண்உறுப்பினர், சுயதொழில் செய்பவர், பொதுமக்களில் ஒருவர்(நல்ல வேலை பதிவர் சேக்கல!) - இவ்வனைவரின் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களின் மதிப்பெண் வைத்தே தேர்வு செய்யப்படுவார்.

8. ஒழுக்கத்துக்கான சான்று - இவரின் சொந்த பந்தங்கள் அல்லாத ஒருவருடன் இரண்டு நாட்கள் பழகவிட்டு அவர் தரும் ஒப்பைப்பொருத்தே எடுத்துக்கொள்ளப்படும்(living together அல்ல!).


9. எந்தப்பிரச்சனயாயிருந்தாலும்(மக்கள் விஷயம்) மாநில அளவில் தீர்க்கப்படவேண்டும் அது மத்திய நிலை பொறுத்த விஷயமாக இருந்தால் கடிதம் எழுதாமல் மக்கள் மன்றத்தில் உடனே முடிவெடுத்து அதனை மத்தியில் ஆளும் மக்கள் மன்றத்திடம் இவர் சமர்பிக்கவேண்டும். சமர்பித்த அரைநாளில் பதில் வரவேண்டும்.வராவிடில் மத்திய மக்கள் மன்றத்திற்க்கு அளிக்கப்படும் மாநில வரி அளிக்கப்படாது.

10. இதெல்லாம் மீறி இவர் நல்லவர் என்று 5 வருடம் கழித்து தெரிந்தால் இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் அரசு வீடு தரப்படும்(இப்பதவி ஒருமுறை மட்டுமே மறுமுறை இவர் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட மாட்டார்). அப்போதும் இவர் சம்பந்தப்பட்ட யாருக்கும் அரசில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலைகள் கிடைக்காது.

தொடரும்.................

கொசுறு: மக்களே கனவு காண்பது மனித இயல்பு. நான் காண்பது நாளைய உலகம்.........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

14 comments:

நா.மணிவண்ணன் said...

உங்க கனவு நம்ம முதல்வரை குடும்பத்த அதிகமா தாக்குதே . நீங்க இன்னும் இலவச டிவி வாங்கலையா ? ஹி ஹி ஹி

வைகை said...

ஆசைதானே.....நல்லா பட்டுக்கங்க...நடக்கவா போகுது?!

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே ....!!

பாரத்... பாரதி... said...

நல்லாவே யோசிக்கிறீங்க. அருமையான சிந்தனைகள்.
அதிரடியாய் தொடருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

பாரத்... பாரதி... said...

அதெல்லாம் சரி. ஏன் இந்த பதிவை இன்ட்லியில் நகைச்சுவை பகுதியில் பகிர்ந்துள்ளீர்கள்.

எப்பூடி.. said...

மக்கள் ஆட்சி என்றால் மக்கள் பணத்தில் நாட்டு தலைவர்கள் தங்கள் குடும்பங்களை ஆட்சி செய்வதுதான் :-)

வெறும்பய said...

ஆசைப்படுரதில தப்பே இல்ல.... படுங்க படுங்க...

பாரத்... பாரதி... said...

//மக்கள் ஆட்சி என்றால் மக்கள் பணத்தில் நாட்டு தலைவர்கள் தங்கள் குடும்பங்களை ஆட்சி
செய்வதுதான் /
இது கொஞ்சம் மாறட்டுமே...

விக்கியுலகம் said...

@வைகை@வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.வைகை அவர்களே,

உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க
>>>>>
உதவுங்கள்...

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன்............

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.கே.ஆர்.பி.செந்தில் அவர்களே,

உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க
>>>>>
உதவுங்கள்...

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன்..........

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.பாரத்... பாரதி... அவர்களே,

உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க
>>>>>
உதவுங்கள்...

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன்..........

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி..அவர்களே,

உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க
>>>>>
உதவுங்கள்...

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன்..........

Philosophy Prabhakaran said...

// உங்க கனவு நம்ம முதல்வரை குடும்பத்த அதிகமா தாக்குதே . நீங்க இன்னும் இலவச டிவி வாங்கலையா ? ஹி ஹி ஹி //

வியட்நாமில் இருக்குரவங்களுக்கும் தர ஆரம்பிச்சிட்டாங்களா என்ன...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே,

// உங்க கனவு நம்ம முதல்வரை குடும்பத்த அதிகமா தாக்குதே . நீங்க இன்னும் இலவச டிவி வாங்கலையா ? ஹி ஹி ஹி //

வியட்நாமில் இருக்குரவங்களுக்கும் தர ஆரம்பிச்சிட்டாங்களா என்ன..
>>>>>>>
"நான் டைம் பாம் எல்லாம் வாங்குறதில்லைங்கோ'