Followers

Wednesday, January 12, 2011

திரும்பி பார்க்கிறேன்!?-(என்னா இருக்கு பாக்க!?)

சக பதிவுலக தோழர்களுக்கு வணக்கமுங்க. என்னை திரு. ஆர்.கே.சதீஷ்குமார் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. தெரிந்து 248 என்று தொடருபவர்களையும், தெரியாமல் அவரை தொடரும் ஆயிரக்கணக்கானவர்களையும் கொண்ட ஒரு பிரபலம் என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.





நானும் திரும்பி பார்காலாமுன்னு நினைக்கிறப்ப சில விஷயங்கள் தோணிச்சி. நான் கிட்ட தட்ட 2 வருடமாக இந்த தமிழ் களங்களை கண்டு கொண்டு இருந்த காலம். நம்ம வேலை வேற திடீர்னு ஆரம்பிக்கும் திடீர்னு 10 நாளைக்கு சும்மா இருப்போம். அப்போ இந்த தமிலிஷ் பாக்க நேர்ந்தது(2 வருடம் முன்பாக). அப்போதிலிருந்து தொடர்ந்து பதிவுகளை படிச்சிட்டு வந்தேன். திடீர்ன்னு மூளைக்கு போகுற ரத்தத்துல கொஞ்சம் கொழுப்பு அதிக மானதால, நாமும் எழுதுவோம் என்று முடிவு பண்ணினேன்.


முதல் பதிவு அக்டோபர் 22, 2010 போட்டேன். ஒன்னுமில்லேங்க ஒரு வணக்கம் தான். முதல் முறையா என்னை பதிவுலகத்தில் வரவேற்ற திருசௌந்தர் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.என்னுடைய மூன்றாவது பதிவிலேயே வந்து என்னை உட்சாகப்படுத்திய மர்மயோகி மற்றும் ம.தி.சுதா அவர்களுக்கும் நன்றி. அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக சில முன்னேற்றங்கள் என்று போய் கொண்டு இருக்கிறேன். 




உண்மையில் "தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்(பலம் மற்றும் பலவீனம்)" - இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். அதாவது எனக்கு பேச்சு பலம் கொஞ்சம் இருக்கிறது, எழுத்து பலம் அந்தளவுக்கு இல்லை என்பதை அடிக்கடி யோசித்துக்கொண்டு இருக்கும்போது தான் இந்தப்பதிவிடும் விஷயம் என்னை அடுத்த கட்டதிட்க்கு அழைத்து சென்றது. 


என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே.
அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து  செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து.


இந்த விஷயங்களை உலகில் எங்கோ இருந்தும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன். 


பொதுவாக கவிதை ரசிக்க தெரிந்தால் போதும் என்று நினைக்கும் சராசரி மனிதன் நான். அதனால் அந்த விஷயத்தில் விஷப்பரீட்சை எடுப்பதில்லை. இதுவரை நான் எந்த சினிமாவுக்கும் விமர்சனமோ, நடிகர்களை புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பதிவிட்டதில்லை. அது பலரின் மனத்தை காயப்படுத்தும் என்பதால் மற்றும் அவரவர் தொழில்களில் சிறந்து விளங்குபவர்களை விமர்சிப்பதால் மட்டுமே என்னால் உயரத்திற்க்கு செல்லமுடியும் என்ற மாய நம்பிக்கை என்னிடம் இல்லை(பதிவர்கள் மன்னிக்க).




என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன். என் பதிவுகள் எதுவும், இல்லாத ஒன்றை சொல்லும் விஷயங்கள் இல்லை, அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதரிடமும் ஆயிரம் விஷயங்கள் உள்ளன அதனை வெளிப்படுத்தும் ஒரு இடமே பதிவுலகம் - இது என்னுடைய தாழ்மையான கருத்து.


பொதுவாக ஒரு பக்கம் படிக்கவே யாருக்கும் நேரம் இல்லை. அதனால்தான் என் பதிவுகள் அனைத்தும் அரைப்பக்கதிட்க்கு இருக்குமாறு வைத்துக்கொள்கிறேன். இன்றுவரை என்னை உற்சாகப்படுத்தி ஓட வைத்துக்கொண்டு இருக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.


என்றும் நட்புடன்....
வருங்கால அரசியல்வாதி (வியாதி அல்ல ஹி ஹி !)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

28 comments:

THOPPITHOPPI said...

//வருங்கால அரசியல்வாதி//

வாங்க

THOPPITHOPPI said...

//அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து.//

நிஜம்

மாணவன் said...

சொல்ல வந்தத நச்சுன்னு சொல்லீட்டீங்க பாஸ்...

சூப்பர்...

மாணவன் said...

///என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன்//

பதிவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று

பகிர்வுக்கு நன்றி நண்பரே

அஞ்சா சிங்கம் said...

நல்ல பதிவு .........தொடரட்டும் உமது பணி.................

பட்டாபட்டி.... said...

சூப்பர்

நா.மணிவண்ணன் said...

அண்ணே நல்லாருக்குனே

இரவு வானம் said...

உண்மையிலேயே நச்சுன்னுதான் சொல்லி இருக்கீங்க

பாரத்... பாரதி... said...

உங்களை பொறுத்த வரை சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறீர்கள். அதுவே உங்கள் பலம். கண்டிப்பாக உங்கள் பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சில சமயங்களில் நீங்களும் தொப்பி தொப்பியும் ஒருவரோ என தோன்றுவதுண்டு..

பாரத்... பாரதி... said...

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

ரஹீம் கஸாலி said...

சும்மா சொல்லக்கூடாது நச்சுன்னுதான் திரும்பி பார்த்திருக்கீங்க....வாழ்த்துக்கள் நண்பரே....

NKS.ஹாஜா மைதீன் said...

சும்மா நச்சுனு திரும்பி பார்த்துட்டிங்க ...

எப்பூடி.. said...

நல்லாயிருக்கு, திரும்பி பாத்தீங்களே முன்னாடி யாராவது வந்தா முட்டிக்க மாட்டீங்களா?

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள்... உங்கள் முற்போக்கு சிந்தனைகள் தொடரட்டும்...

sathish777 said...

248 என்று தொடருபவர்களையும், தெரியாமல் அவரை தொடரும் ஆயிரக்கணக்கானவர்களையும் கொண்ட ஒரு பிரபலம் என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.//
நிஜமாவா பெருமையா இருக்கு நன்றி

sathish777 said...

பொதுவாக ஒரு பக்கம் படிக்கவே யாருக்கும் நேரம் இல்லை. அதனால்தான் என் பதிவுகள் அனைத்தும் அரைப்பக்கதிட்க்கு இருக்குமாறு வைத்துக்கொள்கிறேன்//
அப்படி நினைக்காதீங்க

sathish777 said...

நல்லாவே திரும்பி பார்த்து இருக்கீங்க

விக்கியுலகம் said...

@மாணவன்வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு. மாணவன் அவர்களே.

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIவருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு. THOPPITHOPPI அவர்களே.

"//வருங்கால அரசியல்வாதி//

வாங்க"

அரசியல் இல்லாத இடம் இல்லீங்களே!?

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.அஞ்சா சிங்கம்அவர்களே.
சிங்கம்.


நன்றி

விக்கியுலகம் said...

@இரவு வானம்வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.இரவு வானம் அவர்களே.

நன்றி

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.பட்டாபட்டி... அவர்களே.

கடைசில நீங்களும் "template கமன்ட்" போட்டுட்டீங்களே பட்டா!

நன்றி

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.பாரத்... பாரதி...அவர்களே.

"உங்களை பொறுத்த வரை சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறீர்கள். அதுவே உங்கள் பலம். கண்டிப்பாக உங்கள் பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சில சமயங்களில் நீங்களும் தொப்பி தொப்பியும் ஒருவரோ என தோன்றுவதுண்டு".

>>>>>>

நன்றி

அவர் அளவுக்கு எனக்கு விளக்கமா சொல்லத்தெரியாதுங்க.

விக்கியுலகம் said...

@NKS.ஹாஜா மைதீன்வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.NKS.ஹாஜா மைதீன் அவர்களே.

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலிவருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.ரஹீம் கஸாலி அவர்களே.

என்னுடைய பலமும் இதுதான் பலவீனமும் இதுதானுங்க(straight!).

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.எப்பூடி..அவர்களே.

"நல்லாயிருக்கு, திரும்பி பாத்தீங்களே முன்னாடி யாராவது வந்தா முட்டிக்க மாட்டீங்களா?"

>>>>>>>>

முட்டித்தான் ஆகணும்னா என்னா பண்றது.

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

நன்றி

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்வருகைக்கும், சமையல நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே.

"நிஜமாவா பெருமையா இருக்கு நன்றி"

>>>

உண்மை தானுங்களே

"பொதுவாக ஒரு பக்கம் படிக்கவே யாருக்கும் நேரம் இல்லை. அதனால்தான் என் பதிவுகள் அனைத்தும் அரைப்பக்கதிட்க்கு இருக்குமாறு வைத்துக்கொள்கிறேன்//
அப்படி நினைக்காதீங்க"

>>>>>>>>..

முழுசா படிக்கிறவங்க அதிகமில்லன்னு நினைக்கிறேன்.