Followers

Saturday, December 18, 2010

மானிட்டர் மூர்த்தி 18/12/2010

இன்னாபா குவாட்டரு எப்படிகீர கேட்டுகொண்டே குடிமகன் குடிலுக்குள் நுழைந்தார் மூர்த்தி சாரி மானிட்டர் மூர்த்தி.

குவாட்டர்: ஏதோ கீறேன்பா அப்புறம் நேத்து நம்ம மக்கள்லாம் உன்ன திட்டிகிட்டு இருந்தாங்கப்பா!

மானிட்டர்: எதுக்கு பா?



குவா: நீ எப்ப பாத்தாலும்  ஊரு வம்ப பத்தியே பேசிறியாம், அதுவும் இல்லாம குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னுட்டானுங்க!

மானி: மச்சி நானு டைய்லி கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அதுல பாரு உழச்ச காசுல என் தங்கம் முனியம்மாவுக்கு முக்காபாகம் கொடுத்துட்டு மீதி கிற காசுலதான் சரக்கடிக்கவே வரேன். புரிஞ்சிதா அதும் என் பொண்டாட்டி முனியம்மா இது வரைக்கம் என்னை திட்டி நீ பாத்துகிறியா. நம்ம கடைமைல கரீட்டா இருந்தா யவனப்பத்தியும்  நாம கவலப்படத்தேவயில்ல.

குவா: சூப்பருபா உன்னோட சுயவிளக்கம்!?

சரி மேட்டருக்கு வா இன்னிக்கி என்னா உலகத்துல நடந்துன்னு கீது?


மானி: அப்படிக்கேளு ,,,,,நம்ம சென்ட்ரலு கட்சி ஸ்டேட்டு கட்சிய கழட்டி விட்டுட்டு நாங்க யோக்கியனுங்கன்னு சொல்லிக்கலாமுன்னு பாத்துக்கிட்டு இருக்கு!!

குவா: அதெப்படிப்பா முடியும் ரெண்டுமே கூட்டுகளவானிங்கதானே!

மானி: அதில்ல மச்சி ... இப்போ இந்த பாத போற போக்க பாத்தா ஸ்டேட்டுக்கு பெரிய ஆப்பா வரும்போல.......... அதுனாலதான்.

குவா: நீ என்னமோ சொன்னியே நம்ம தலையோட சம்சாரத்துக்கும் அந்த சொத்துக்கும் சம்பந்தமுன்னு. பாரு அவங்ககிட்ட வேலசெஞ்சவரு சொத்துபா அது.

மானி: டேய் கூமுட்ட ........... வேலசெஞ்சவனே 300 கோடி சொத்து சேத்துகிறான்னா பாத்துக்க............

குவா: வேற இன்னாபா


மானி: இந்த விக்கிலீகு இருக்குல்ல அவங்க நம்ம இந்தியருங்கள உலகத்துலேயே ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிகிறாங்க தெரியுமா!

குவா: அப்படியா ஆச்சரியமா கீது பா, பாரு அவங்களுக்கு தெரிஞ்சது நமக்கு தெரியல!

மானி: டேய் அவங்க சொன்னது எவ்ளோ அடிச்சாலும் அதாவது எவ்ளோ ஊழல் செய்ஞ்சாலும் இந்த மக்கள் தாங்கராங்கள்ள அத சொல்றாங்க. அதுவும் இல்லாம இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் நல்லா புரிஞ்சிக்கிற மனப்பான்மை இருக்காம். என்னதான் இந்த அரசியல் வியாதிங்க சிண்டு முடிஞ்சாலும் மக்கள் தெளிவா இருக்காங்கன்னு சொல்லிகிறாங்க.

குவா: அப்படியா! சரி நம்ம தல படம் இன்னாப்பா டிராப்பா?


மானி: இல்லப்பா பட எடுக்குற கம்பனிக்காரங்க கொஞ்சம் இப்போதைக்கு நெலம
சரியில்லாததினால தற்காலிகமா ஸ்டாப்பு பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்களாம்.

குவா: புரிஞ்சிடுச்சிபா ஆம்மா சரக்கு காலியாயிடுச்சே இன்னொரு குவாட்டரு வாங்கட்டா ..?

மானிட்டர்: டேய் போதும் அதிகமா குடிச்ச குடிமகனும், அதிகமா சொத்து சேர்த்த அரசியல்வாதியும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்ல .......

குவாட்டரு: பன்ச்சு சூப்பரு..

கொசுறு: இந்த நாடும் நாட்டு மக்களும் நலமோடு வாழனும்னா அந்த கடவுளே நேரா இறங்கி வந்தாலும் கஷ்டம்னு சொல்றவங்க வாயில தர்பைய போட்டு பொசுக்க கடவது. 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

14 comments:

பாரத்... பாரதி... said...

சுவையான அலசல். சூடான செய்திகளை சுவையா சொல்லியிருக்கீங்க..

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...நன்றி திரு. பாரத்... பாரதி...அவர்களே வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. கொதிக்கிற அரிசி அப்படியே இருக்காது சீக்கிரத்தில் பானைய விட்டு இறங்கும் அந்தநாள் விரைவில்.....

THOPPITHOPPI said...

நீங்க இப்பவும் வியாட்னம்ள்ளதான் இருக்கிங்களா?

THOPPITHOPPI said...

இதுவும் நச்

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIநன்றி திரு. THOPPITHOPPI அவர்களே வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஆமாம் நண்பரே

எங்கிருந்தாலும் துடிக்கும் என் இதயம் என் தாயகத்துக்காக.

பாரத்... பாரதி... said...

அய்யா, நாங்கள் ரோஜாப்பூந்தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள், உங்கள் இந்த பதிவில் எமக்குத்தான் வடையும், சுடுச்சோறும். ஏற்கனவே
வாக்கும் அளிச்சாச்சு..
ஏன் எங்கள் பதிவில்,
எமக்கு நடுமண்டையில் பின்னூட்ட
கொட்டு....

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...தப்பாக எடுத்துக்கொள்லாதீரகள் நான் பொதுவாகசொன்னேன்,

மன்னிப்பீராக

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்போருருள் மெய்பொருள் காண்பதறிவு

நா.மணிவண்ணன் said...

என்னாது தல படம் ட்ராப்பா ? ப்ரோடுசிங் கம்பனி திவாலா ஆய்புச்சா. .அது நம்ம அழகிரி மகன் கம்பெனி ஆச்சே . இந்த வாட்ட ஓட்டுக்கு ஏகப்பட்ட காசு குடுக்கனும்னு மகனாண்ட இருந்த காச புடுங்கிருப்பாரோ

எப்பூடி.. said...

உங்க பாணியில சூப்பரா சொல்லியிருக்கிறீங்க

விக்கியுலகம் said...

@எப்பூடி..நன்றி திரு.எப்பூடி.. அவர்களே வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி

இங்க நான் உண்மையமட்டும்தான் நான் சொல்வேன்

Philosophy Prabhakaran said...

ஒரு பதிவிற்கு தலைப்பு தேவைப்படுகிறது... அதற்கு உதவ நீங்கள்தான் சரியான ஆள் என்று நினைக்கிறேன்... உதவ முடியுமா...?

Philosophy Prabhakaran said...

Present... தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...

விக்கியுலகம் said...

@philosophy prabhakaranநன்றி திரு. philosophy prabhakaran அவர்களே வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

நான் ஒரு சராசரி அரசியல் விமர்சகன் என்னால் தங்களுக்கு உதவமுடியும் என்று நீங்கள் எண்ணினால் சொல்லுங்கள்.