Followers

Tuesday, September 13, 2011

தார் பூசியவர்கள் பாவம்...(!)

வணக்கம் நண்பர்களே.........



தார்பூச சொன்னவர் குடும்பம் இன்று சுவிஸ் பாங்கில் பணம் போட்டு மகிழ்ந்து கொண்டிருக்க....தார் பூசியவர்கள் குடும்பங்கள் பல 500 கிமீ தாண்ட முடியாமல் வேறு மொழி தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன....இதைப்பற்றிய பதிவே இது.....

இவ்வளவு பெரிய நாட்டில் இருந்து கொண்டு ஒரு குடையின் கீழ் இருப்பது என்பது(!) பெரிய அதிசயம்தான்....நான் சந்தித்த பல வெளி நாட்டினர்(!) இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்....அப்படிப்பட்ட அதிசய நாடு தான் நம் இந்தியா.....இனத்தால், மதத்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக மொழியால் பிரிந்து இருந்தாலும்(!)...அனைத்தையும் கடந்த ஒரு கண்ணுக்கு தெரியாத பிணைப்பால் நாம் கட்டுண்டு இருக்கிறோம்....


பக்கத்து பெரிய நாடு இன்றும் நம்மை அதிசயித்த வண்ணம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது...ஒரு கட்சி ஆட்சி முறையை வைத்திருக்கும் அவர்கள் பல கட்சி இருக்கும்(!) நம் நாட்டை பார்த்து உண்மையில் பெருமூச்சி விட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்(!)...ஆங் சொல்ல வந்ததை விட்டு விட்டேன் நண்பர்களே....


இவ்வளவு மொழிகள் இருந்தாலும் ஒரு மாநிலத்தவர் அடுத்த மாநிலத்தவர் புரிந்துணர்வு என்பது சற்று குறைவாகவே உள்ளது எனலாம்....அதிலும் தென்னாட்டில் கர்நாடகம், கேரளம் மற்றும் இப்போது ஆந்திரமும் வெகு விரைவாக தன் தாய் மொழியுடன் நாட்டின் தலைமையால் உந்தப்படும்(!)    மொழியை விரைந்து கற்று வருகிறார்கள்....அதனால் தான் எளிதான வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக கூறப்படுகிறது....

கடந்த அரை நூற்றாண்டுகளாக நம் தமிழ் நாடு மட்டும் தான் இதிலிருந்து அகன்று தனியே நிற்கிறது....இதற்க்கு பின் உள்ள பெரிய காரணம் இந்தி திணிப்பு என்று கூறப்பட்டாலும்... அதனை எதிர்த்து தங்கள் வாழ்வை தமிழுக்காக கொடுத்து விட்டு சென்றவர்கள் ஏராளம்...இருந்தாலும் இதை வைத்தே அரியணை ஏறியவர்கள் தங்கள்(பெற்ற!) மக்களை மட்டும் அம் மொழி அறியவைத்து பெரிய பதவிகளில் உட்க்கார வைத்து அழகு பார்த்ததை நாம் கடந்த காலங்களில் கண்டோம்...


இப்போது பார்த்தால் எதிர்த்த மகான்கள்(!) பயன்கள் அடைந்து விட்டனர்...அவர்களுக்கு பின் நின்ற எம் சாமானிய மக்களின் கதி(!) என்ன வென்று நாம் கண்கூடாக கண்டு கொண்டு இருக்கிறோம்...அரசியலை விட்டு பார்த்தால் நம் இன்றைய சமுதாயம் இந்த ஏமாற்றை புரிந்து கொண்டு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைத்து வருகிறது...முடிந்தவரை அலுவலுக்காக அனைத்து(ஹிந்தி உற்பட!) மொழிகளையும் நாமும் நம் அடுத்துவரும் சந்ததியினரும் கற்ப்போம்...அன்னை தமிழை மறக்காது காப்போம்...

கொசுறு: இது ஒரு சாமானியனின் நடைமுறை என்னவோட்டப்பதிவு...நன்றி!...இந்தப்பதிவுக்கு உதவிய திரு. மனோவுக்கு நன்றி(இவருக்கு இந்தி தெரியும்னு ஓவரா ஸீன் போடுறார் யுவர் ஆனர்!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

46 comments:

கும்மாச்சி said...

நல்ல கருத்து விக்கி.

\\இப்போது பார்த்தால் எதிர்த்த மகான்கள்(!) பயன்கள் அடைந்து விட்டனர்...அவர்களுக்கு பின் நின்ற எம் சாமானிய மக்களின் கதி(!) என்ன வென்று நாம் கண்கூடாக கண்டு கொண்டு இருக்கிறோம்//

அதானே. பதிவுக்கு வாழ்த்துகள்.

suryajeeva said...

மொழி புரியாத ஊரில் ஒரு வாரம் இருந்தா ரொம்ப சுலபமா அந்த மொழிய கத்துக்கலாம்னா, ஆனாலும் சந்தடி சாக்கில இந்தியை தேசிய மொழின்னு சொல்லி நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாத்தி புட்டீங்களே..

நிரூபன் said...

இந்தியினையும், பிற மொழிகளையும் கற்காது துன்பப்படும் சாமானிய மக்களின் உணர்வுகளை உங்களின் இப் பதிவு பிரதிபலித்து நிற்கிறது.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
தார் பூசியவர்கள் குடும்பங்கள் பல 500 கிமீ தாண்ட முடியாமல் வேறு மொழி தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன..
//
உண்மைதான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//இவருக்கு இந்தி தெரியும்னு ஓவரா ஸீன் போடுறார் யுவர் ஆனர்!

//
லாப் டப் வச்சு அவர் போடாத சீனா ?

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

அவர்கள் தார் பூசியது நம் முகத்தில் ..
நம் எதிர்காலத்தில் ....

ரம்மி said...

உள்ளுரில் வாழுவதற்கு அவரவர் மொழியே போதும்! வெளி இடங்களுக்கு செல்ல வேண்டுமெனில் பொது மொழிகள் அறியத் தேவை! திணிப்பை எதிர்ப்பது வேறு! மொழியை கற்க விடாமல் தடுப்பது வேறு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் இணைச்சுட்டோமில்ல..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள உண்மை மாப்ள.. நான் கூட உன் கருத்துக்கு உடன்படுகிறேன்.

கறுவல் said...

உண்மைதான் விக்கி, மொழியினை புறக்கணிப்பதால் ஆகப்போவது நஷ்டமே.. எத்தனை மொழிகள் எமக்கு சரளமாகின்றாதோ அந்தளவிற்கு எமது ஆளுமைக்கான இடம் விசாலப்படுத்தப்படுகின்றது

அரசியல் செய்ய, மக்களின் அறிவுக்கண்ணை குருடாக்கா முனைகின்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை.. எதுவும் முன்னேறப்போவதில்லை.. எமது மொழி அறிவினையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன்..

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

விக்கி

சில கமெண்ட்ஸ் நம் மக்களின் அறியாமையை வெளிக்காட்டுகிறது. அல்லது அவர்கள் அவ்வாறு மூளை சலவை செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது!!

உதாரணம்

//suryajeeva Says:
September 13, 2011 12:04 PM

மொழி புரியாத ஊரில் ஒரு வாரம் இருந்தா ரொம்ப சுலபமா அந்த மொழிய கத்துக்கலாம்னா, ஆனாலும் சந்தடி சாக்கில இந்தியை தேசிய மொழின்னு சொல்லி நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாத்தி புட்டீங்களே..

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஹிந்தி தேசிய மொழி தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்டது. பெரும்பான்மை அடிப்படையில் அவ்வாறே கொள்ளவும் வேண்டும்..

ஆங்கிலம் கற்க விரும்பும் மனது ஏன் ஹிந்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ!!??

அதுவும் இன்னொரு மொழி என்கிற மனப்பான்மை இன்னும் நம்மிடையே வரவில்லை முந்தைய தலைமுறையின் ஹேங் ஓவர் இது, இன்று பெரும்பான்மையான பள்ளிகளில் ஹிந்தி கற்றுகொடுக்கிறார்கள் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது..

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி லேப்டாப் மனோவுக்கு ஹிந்திக்காரியை வேணா தெரியும்..

MANO நாஞ்சில் மனோ said...

இருந்தாலும் இதை வைத்தே அரியணை ஏறியவர்கள் தங்கள்(பெற்ற!) மக்களை மட்டும் அம் மொழி அறியவைத்து பெரிய பதவிகளில் உட்க்கார வைத்து அழகு பார்த்ததை நாம் கடந்த காலங்களில் கண்டோம்...//


இந்தி தெரியாமல் இங்கே தமிழர்கள் படும்பாடு பெரும்பாடு....

MANO நாஞ்சில் மனோ said...

இப்போது பார்த்தால் எதிர்த்த மகான்கள்(!) பயன்கள் அடைந்து விட்டனர்...//

ஆமாம் திகார் ஜெயில் வரைக்கும்....பூலாந்தேவி தோழிகளுடன், ஒரே ஒரு பாத்ரூம் உள்ளே...

MANO நாஞ்சில் மனோ said...

நன்றி!...இந்தப்பதிவுக்கு உதவிய திரு. மனோவுக்கு நன்றி(இவருக்கு இந்தி தெரியும்னு ஓவரா ஸீன் போடுறார் யுவர் ஆனர்!)//

எலேய் ஹிந்தி மட்டும் இல்லைலேய், அண்ணனுக்கு மராட்டி தெரியும், மலையாளம் எழுத படிக்கவே தெரியும் வெறும் பதினஞ்சே நாள்ல மலையாளம் எழுதப் படிச்சேன், பின்னே அரபி மொழி கேக்கவே வேண்டாம் சும்மா பிச்சி ஓதருவேன். ம்ஹும் ராஸ்கல் அண்ணனை கிண்டலா பண்ணுறே பிச்சிபுடுவேன் பிச்சி, இரு ஒரு துக்ளா அடிச்சிட்டு வாரேன்....

Ramani said...

முன்பு ஒரு சினிமா பாட்டு உண்டு
" உபதேசம் பண்ணுகிறேன்
அது ஊருக்குத்தானடி எனக்கு இல்லை " என்று போகும்
அது மாதிரி அவர்களும் அவர்கள் குடும்பமும்
ஹிந்தி படித்துக்கொண்டு கோவிலுக்குப் போய்க் கொண்டு
அவர்கள் திட்டுகிற ஜாதியில் உள்ள வல்லுனர்களை மட்டும்
அனைத்திற்கும் பயன்படுத்திக்கொண்டு இன்னமும்
மீசையில் மண் ஒட்டவில்லை என
வீர வசனம் பேசிக்கொண்டுதான் திரிகிறார்கள்
இப்போது மக்களும் அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்
கடவுள் மறுப்பு மகா நாட்டுக்கு மதுரை வருகிறவர்கள் கூட
காலையில் முதல் வேலையாக மீனாட்சி தரிசனம்
முடித்து விட்டுத்தான் மா நாட்டுப் பந்தலுக்கே வருகிறார்கள்
சிந்தனையிலுள்ள துருஎடுக்க முயலும்பதிவு
தொடர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
தம்பி லேப்டாப் மனோவுக்கு ஹிந்திக்காரியை வேணா தெரியும்..//



குற்றாலத்துல உனக்கு யாரை தெரியும்னு சொல்லவா மூதேவி.....

MANO நாஞ்சில் மனோ said...

தாய் மொழி அவசியம் கற்க வேண்டும் அதே வேலையில் இன்னபிற மொழிகளையும் தெரிந்து கொள்வது மிக அவசியம், ஹிந்தி இங்கே அரபிகளுக்கு நல்லாவே தெரிகிறது பேசுகிறார்கள். ஆனால் தமிழ்???
ஆக வெளிநாடு வேலைக்கு போகிறவர்கள் ஹிந்தி கர்ருகொல்லுங்கள் நல்லது...

M.R said...

ஏன் மாம்ஸ் அந்த படங்கள் எந்த ஊரிலே எடுத்தது.

அந்த வயதானவருக்கு தையல் மிசின் தான் காப்பாற்றுகிறது என்று எண்ணுகிறேன் .

M.R said...

t.m o.k

Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் விக்கியுலகம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

அருமையா அலசியிருக்கீங்க சார்! என்னதான் கோபம் இருந்தாலும் அதனை மொழிமீது காட்டாமல், தமிழர்கள் அனைவரும் இந்தி கற்பதே நல்லது!

நன்றி சார்!

NAAI-NAKKS said...

ITS TRUE!!!

மதுரன் said...

உண்மைதான்
வேற்றுமொழிகளை கற்பதில் தவறில்லையே. தவறு என்றவர்கள் தாம் கற்றுபயனடைந்துவிட்டார்கள்

இராஜராஜேஸ்வரி said...

அனைத்து மொழிகளையும் நாமும் நம் அடுத்துவரும் சந்ததியினரும் கற்ப்போம்...அன்னை தமிழை மறக்காது காப்போம்.../

நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

வியபதி said...

.மற்ற எல்லா மாநிலகங்ளிலும் பேசப்படுவது இந்தி மொழிஅல்ல. வேலைக்கு எந்த மாநிலத்திற்குப் போகிறோமோ அந்த மாநில மொழியைத் தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கலாம்..

செங்கோவி said...

ஹிந்தி மட்டுமில்லாம முடிந்தவரை அனைத்து மொழிகளையும் கற்போம் எனபது சரியே..ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துக்கான நியாயமான காரணங்கள் அப்போது இருந்தன. அது கட்டாயமாக ஆக்கப்படாதவரை, அதைக் கற்பதில் பிரச்சினை இல்லை..

சசிகுமார் said...

அனைத்து தமிழர்களின் மனதில் உள்ள கோவத்தை அப்படியே பகிர்ந்துள்ளீர்கள்

முனைவர்.இரா.குணசீலன் said...

இருந்தாலும் இதை வைத்தே அரியணை ஏறியவர்கள் தங்கள்(பெற்ற!) மக்களை மட்டும் அம் மொழி அறியவைத்து பெரிய பதவிகளில் உட்க்கார வைத்து அழகு பார்த்ததை நாம் கடந்த காலங்களில் கண்டோம்...

உண்மைதான்!!

முனைவர்.இரா.குணசீலன் said...

அனைத்து(ஹிந்தி உற்பட!) மொழிகளையும் நாமும் நம் அடுத்துவரும் சந்ததியினரும் கற்ப்போம்...அன்னை தமிழை மறக்காது காப்போம்...

நல்ல பதிவு விக்கி

இன்றைய அரசியல்வாதிகளுக்கு மொழி என்பது ஓட்டு வாங்கச் சொல்லும் பொய்களுள் ஒன்று!!!!!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை!

தாய்மொழியைப் புறம் தள்ளி வாழ்ந்த நாடும் இல்லை!

முனைவர்.இரா.குணசீலன் said...

தாய்மொழி மீது பற்றுவை!
பிற மொழிகளையும் கற்றுவை!

தனிமரம் said...

நல்ல பதிவு தேவையும் கூட மொழியைக் கற்காமல் வீழ்வது நம் இனம்தான் தொழில் நிமித்தம் சரி ஹிந்தி தேவைதான்!

Jana said...

பிறமொழிகளை கற்றுக்கொள்வது தவறு இல்லை. திணிப்பதும் தாய் மொழியை விட மற்றைய மொழிகளை கௌரவமாக நினைப்பதும்தான் தவறு

Lakshmi said...

எப்பவுமே நாலு பாஷைதெரிந்து கொள்வதில் தப்பே இல்லை. என் பசங்களுக்கு தமிழே தரியாதுன்னு பெருமையாகச்சொல்லும் பெற்றோரை
எந்தக்கணக்கில் சேர்க்க?

பாலா said...

மாப்ள நான் அடிக்கடி சாட்டில் வட இந்திய ஆட்களோடு பேசுவதுண்டு. அவர்கள் கேட்கும் முதல் கேள்வி ஹிந்தி தெரியுமா? எனக்கு தெரிந்தாலும், தெரியாது என்று சொல்வேன். உடனே அவர்கள் கேட்கும் கேள்வி ஹிந்தி தெரியாத நீயெல்லாம் ஒரு இந்தியனா? இதை கேட்டவுடன் கோபம் தலைக்கெறி, அவனை திட்டி விடுவேன். இதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

shanmugavel said...

//கடந்த அரை நூற்றாண்டுகளாக நம் தமிழ் நாடு மட்டும் தான் இதிலிருந்து அகன்று தனியே நிற்கிறது....//

சிந்திக்க வேண்டிய விஷயம் நண்பா!

ரெவெரி said...

முதலில் தாய்மொழியை கற்றுக்கொண்டு பிற மொழிகளையும் (இந்தி உட்பட) கற்றுக்கொள்வோம்...

சில மொழிகள் சிலருக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தும்...தமிழ் போல் சில மொழிகளில் இலக்கியங்கள் வாழ்வை ருசிப்படுத்தும்...

ஏற்கனவே சூர்யாவை திட்டி விட்டீர்கள்...இருந்தாலும்

இந்தி இந்திய தேசிய மொழி இல்லை...அது முதன்மை நடைமுறை மொழி...ஆங்கிலம் இரண்டாவது...
இந்தியா தேசிய மொழி இல்லாத வெகு சில நாடுகளில் ஒன்று...அரசியல் அமைப்பின் எட்டாவது செடுளில் உள்ள மொழிகள் அனைத்தும் ஒருமித்து தேசிய மொழிகள் என்று சொல்லப்பட்டாலும் அதுவும் இதுவரை சர்ச்சைக்குரியதாய் உள்ளது...

இருந்தாலும் எனக்கு திராவிட மொழிகள் தெரியும்...வேலைக்கு உதவும் என்று இந்தி கற்றேன்...இதுவரை உபயோகம் இல்லை..அதற்காக வருந்தவும் இல்லை...அடுத்தவர் திட்டுவதை அறிந்து கொள்ள பயனாகிறது..-:)என் மகளும் இந்தி படிக்கிறாள்...நிறைய எழுதிவிட்டேன்..நிறுத்தி கொள்கிறேன்...

ஆமினா said...

//தங்கள்(பெற்ற!) மக்களை மட்டும் அம் மொழி அறியவைத்து பெரிய பதவிகளில் உட்க்கார வைத்து அழகு பார்த்ததை நாம் கடந்த காலங்களில் கண்டோம்..//

இது மக்களின் அறியாமையால் விளைந்ததல்லவா?

M.R said...

முடிந்தவரை அலுவலுக்காக அனைத்து(ஹிந்தி உற்பட!) மொழிகளையும் நாமும் நம் அடுத்துவரும் சந்ததியினரும் கற்ப்போம்...அன்னை தமிழை மறக்காது காப்போம்...

ஏற்றுக்கொள்ள கூடிய உண்மையான வார்த்தைகள் மாம்ஸ்

ஷீ-நிசி said...

///ஒரு கட்சி ஆட்சி முறையை வைத்திருக்கும் அவர்கள் பல கட்சி இருக்கும்(!) நம் நாட்டை பார்த்து உண்மையில் பெருமூச்சி விட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்(!)..///

கட்சிய பார்த்தே பெருமூச்சு விட்டா.. கட்சியோட ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை எல்லாம் பார்த்தா என்ன ஆவாங்க?! :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அதிசய நாடு தான் நம் நாடு ...

Real Santhanam Fanz said...

கண்டிப்பா, நாம இந்தி கத்துக்கணும், பதிவுக்கு நன்றி மாப்ளே

வைரை சதிஷ் said...

நீங்கள் சொன்னது உண்மைதான்.நாம
இந்தி கத்துகனும்

ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...

ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...
ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.

என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே...குறிப்பாக..செங்கோவி.நிரூபன்.சி.பி.செந்தில்குமார்.பன்னிக்குட்டி ராம்சாமி.காட்டான்.தமிழ்வாசி போன்றவங்கள்..வந்து உங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்...இவங்க பெயர் மட்டும் தெரிஞ்சதால சொன்னன்...எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.

வெளங்காதவன் said...

///தார்பூச சொன்னவர் குடும்பம் இன்று சுவிஸ் பாங்கில் பணம் போட்டு மகிழ்ந்து கொண்டிருக்க....தார் பூசியவர்கள் குடும்பங்கள் பல 500 கிமீ தாண்ட முடியாமல் வேறு மொழி தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன....////குத்துங்க எசமான்.... குத்துங்க...

veedu said...

எனக்கென்னமோ நிறைய சேட்ஜிகள் தமிழ் கத்துக்கறாங்க...ன்னு நினைக்கின்றேன் நாம வளர்ந்து வருகின்றோம் பாஸ்
ஹிந்தி கத்துக்கறது தப்பில்லை