Followers

Monday, December 20, 2010

ஈமச்சடங்கு - பாவமன்னிப்பு உண்டா!?


என்னுடைய அடிவருடிகள் என்னை சாணக்கியன் என்பார்!?




நன்றி கெட்ட என்னை மன்னியுங்கள். உங்கள் கால்களுக்கு செருப்பாய் பிறந்தாலும் எனக்கு கிடைத்த பழி போகாது. என் சுயநலத்துக்காக உங்களை கொன்றேன். உங்கள் நல் ஆவி என்னை விடாது என்று தெரிந்தும் என் வயது என்னை இந்த கொடுமையான செயலை செய்ய வைத்தது.

நான் இன்று நான் அல்ல என்று சொன்னாலும் என்னை யாரும் மதியார். எனக்கு முன் இருந்த என் நண்பன் உங்களுக்கு செய்த காரியங்களை எண்ணி மனம் வெதும்பி இருக்கும்போது, எப்படியேனும் நான் உங்களுக்கு தலைவனாக காட்டிகொள்ள முயற்சித்தேன். பதவி எனும் மகுடத்தை எத்தனை முறை என் தலை மேல் வைத்து அழகுபார்தீர்கள். நான் அதற்க்கு தகுதியானவனாக நடந்து கொண்டேனா என்று காலம் போனபின் இன்று நினைத்து பார்க்கிறேன். என்(பலரை முட்டாளாக்கி என் மூளைபலம் கொண்டு வாங்கிய) பதவி எனும் போதை தலைகேறிவிட்டது. மன்னியுங்கள் என்று கேட்டாலும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட நல்லோரே. நான் வரும் போது(மேலோகத்தில்) எனக்கு விருந்தோம்பல் முறையில் "வாருங்கள்" என்று கூறி  உடகாரவைத்து பேசும் பண்பு உங்களிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் என் செய்வேன் நான் அறிவு கெட்டு ஒன்று பெற்காமல் ஊருக்கு நாலு பெற்றதால் என் தலை இன்று பல இடங்களில் உருண்டு கொண்டே இருக்கிறது.


மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.

மக்களே நான் என்னால் முயன்ற்றதைசெய்தேன் என்று சொல்லி உங்களை இப்போது ஏமாற்ற விரும்பவில்லை. அப்படிசொல்லித்தான் உங்களை ஏமாற்றினேன் என்பதை என் மனசாட்சி எனக்கு அடிக்கடி கூறிக்கொண்டு இருக்கிறது. நான் செய்த பாவங்கள் அடுத்த பிறவியில் அனுபவிக்க முயன்று தோற்று இப்பிறவியிலேயே என் மூலமாக வந்தவர்களாலே அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். என் தமிழினமே என்னை மன்னிக்காதே.


என் பால் கொண்ட அன்பால், நான் ஏதாவது முயற்சி செய்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்து மாண்ட என் அன்புக்கினியோரே. அன்று நான் உங்கள் அவஸ்தை தெரியாமல் என்(பெற்ற)மக்களுக்காக மத்தியில் போராடிக்கொண்டு இருந்ததால் எனக்கு
உங்கள் நினைவு வராமல் போனது. மன்னியுங்கள் என்று என் மனம் சாதாரணமாக கூறினாலும் என் உடல் அந்த விஷயத்தால் ஏற்பட்ட கலக்கத்தால் துவண்டு போனது.

மன்னிக்காதீர் என்னை மறந்து விடுங்கள்.

கொசுறு: ஓர் மனசாட்சின் குரல்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

10 comments:

THOPPITHOPPI said...

எழுத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறதே?

Philosophy Prabhakaran said...

சில சொலவடைகள் சரிவர புரியவில்லை... இவை ஏதேனும் தேவாலயத்தில் பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட் வரிகளா...

வெறும்பய said...

வித்தியாசம் நிறைய இருக்கிறது.. எழுத்துக்களிலும். மனசாட்சியின் குரலிலும்...

விக்கியுலகம் said...

@வெறும்பயதிரு. வெறும்பய அவர்களே
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

இது என்னுடைய மனசாட்சி அல்ல. மற்றும் மனசாட்சி இருப்பின் இவை அந்த மனசாட்சி மனிதரின் சொற்க்கலாகக்கடவது.

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIதிரு. THOPPITHOPPI அவர்களே
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

இது என்னுடைய மனசாட்சி அல்ல. மற்றும் மனசாட்சி இருப்பின் இவை அந்த மனசாட்சி மனிதரின் சொற்க்கலாகக்கடவது.

விக்கியுலகம் said...

திரு. philosophy prabhakaran அவர்களே
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

என்னப்பா ஒரு சராசரி மனுசனோட வார்த்தைகள் புரியலையா!?

எப்பூடி.. said...

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் said...

@எப்பூடி..திரு. எப்பூடி..அவர்களே
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

மாணவன் said...

//உங்கள் நினைவு வராமல் போனது. மன்னியுங்கள் என்று என் மனம் சாதாரணமாக கூறினாலும் என் உடல் அந்த விஷயத்தால் ஏற்பட்ட கலக்கத்தால் துவண்டு போனது.

மன்னிக்காதீர் என்னை மறந்து விடுங்கள்.//
கொசுறு: ஓர் மனசாட்சின் குரல்

சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் வித்தியாசமான எழுத்துநடையில் அருமை...

தொடருங்கள்..........

விக்கியுலகம் said...

@மாணவன்திரு.மாணவன் அவர்களே
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.