நண்பர்களே நேற்று சில நண்பர்களிடம் இணையம் வழியாக பேசிக்கொண்டு இருக்கும் போது சில விஷயங்கள் நெஞ்சை அடைத்தன.
அவைகள் நட்டாற்றில் விடப்பட்ட பெரியவர்களின் வாழ்வாதாரப்பிரச்சனை. அதாவது இந்தப்பெரியவர்களை வீட்டில் வைத்துக்கொள்ள இவர்களின் வாரிசுகள்(பணத்திற்க்கு மட்டும்!) தயாராக இல்லை.
நான் பேசிப்பார்த்த போது பணம் தரத்தயார் ஆனால், "எங்களுக்கு நேரம் இல்லை" அதனால் முடிந்தால் நீங்களே நல்ல முதியோர் காப்பகம் சொல்லுங்கள். நாங்கள் ஒரு முறை வந்து படிவம் வேண்டுமென்றால் எழுதிக்கொடுத்து எங்கள் வீட்டு பெரியவர்களை சேர்த்து விட்டு வந்து விடுகிறோம் என்றனர்.
இந்த மக்கள் தங்களால் ரூபாய் 3000 - 3500 (மாததிட்க்கு)வரை தர இயலும் என்று கூறுகின்றனர். இந்த குடும்ப தலைவர்களின் மாத வருமானம் ரூபாய் -15000 கீழ் என்பது குறிப்பிடத்தக்கது.
எமக்கு வேண்டிய தகவல் இதுவே:
1. சென்னையில் உள்ள முதியோர் இல்லம்(குறைந்த பணம் வாங்கும்!)முகவரி மற்றும் தொலைபேசி ...
2. இந்த முதியோர் இல்லங்க ரூபாய் 3000 - 3500 க்குள் வாங்குபவை பற்றிய தகவல் தேவை.
3. முன் வைப்பு தொகை ரூபாய் 5000/- வரை கொடுக்க இயலும்(சம்பந்தப்பட்டவர்களின் அதிக பட்சமாக!).
4. முக்கியமான விஷயம் இந்த பெரியவர்கள் அனைவரும் வாரத்தில் மூன்று முறை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை (சென்னை central railway station எதிர் இருப்பது) சென்று வந்தாகவேண்டும். அதனால் அதிக பட்சமாக 5 - 10 கிமீக்கு மிகாமல் இருந்தால் நல்லது.
தெரிந்தால் தெரிவிக்கவும்.
தெரிவிக்க வேண்டிய முகவரி : vbvvvmv@gmail.com அல்லது dandanaka.vijay@gmail.com
ஏனெனில் நானும் எனது நண்பர்களும் இனைய வழி தொலை பேசி மூலம் பல இல்லங்களுக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் கேட்ட தொகை ரூபாய் 7000 - 10000. அதுமட்டுமின்றி முன்தொகை (deposit) - ரூபாய் 30000 லிருந்து 1 லட்சம் வரை.
இந்தப்பெரியவர்களுக்கு செய்யும் உதவி அந்த கடவுளுக்கு செய்வது போன்றது.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் .................