Followers

Friday, June 24, 2011

மச்சி ஒரு டீ சொல்லேன்!

வணக்கம் நண்பர்களே.....

கடன் வச்சி சாப்பிட்டு வந்த காலம்............சென்னை சூளைமேட்டில் ஒரு உணவு விடுதி இயங்கிட்டு வந்தது...............அந்த ஓனரும், அங்கே வேல செய்ஞ்சிட்டு வந்தவங்களும் அருமையானவங்க(கடன் ஹி ஹி!)................


எப்பவும் எங்க ரூம்ல இருந்த நண்பர்கள் எல்லாருக்கும் நான் தான் சமையல் அப்போது(புகழுக்கு அடிமை என்பதால்!)...........ஆனாலும் தினமும் சமைக்க முடியாது. பக்கத்தில் இருந்த ஓட்டல் ஓனரின் மகன் எங்கள் நண்பர் என்பதால் இரவு உணவு அங்கதான். 

அதுவும் 11 மணிக்கு மேல் வரும் எனக்கு நண்பன் எப்பவும் சாப்பாடு எடுத்து வச்சிருப்பான். நான் அப்போது பல நாள் பட்டினி ஆக இருக்காமல் பார்த்துக்கொண்ட கொடை வள்ளல் அவன்.

அப்போ தான் ஒரு காதல் பிரச்சனையில நண்பன் மாட்டுனான்.........ஏற்கனவே என்னை எல்லோரும் ரொம்ப நல்லவன் என்றதால்(!) வீட்டிலிருந்து ஒதுங்கி வாழ்ந்த காலம்(!) அது.....அப்பேர்ப்பட்ட சூழ்நிலை(ஹி ஹி!)..........

இந்த சூழ்நிலையில காதல் பிரச்சனைக்கு ஆளானான் நண்பன்.............

இரவு நேரம் 11.15 மணி.............

என்ன தம்பி இவ்ளோ லேட்டா வரீங்க என்றார் கடைக்கார டீ மாஸ்டர்..........

இல்லன்னே இன்னிக்கு மாமல்லபுரத்துல வேல அதான்னே என்றேன்...........

சரி தம்பி சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்...........சாப்பிடுங்க நான் ஒரு தம் போட்டு வரேன் என்றார்.................

அண்ணே ............முனியாண்டி எங்க காணோம் என்றேன்....(முனியாண்டி நண்பனின் பெயர்!)

அது வந்து..............நீங்க சாப்பிடுங்க என்றார்.............

என்னனே என்ன ஆச்சு என்றேன்................

விடுங்க தம்பி என்றார்...............

இல்ல சொல்லுங்க எங்க அவன்..............

இப்போதான் வீட்டுல கொண்டு போய் படுக்க வச்சேன்..........

அந்த முக்கு தெரு பசங்க அடிப்பின்னிட்டாங்க என்றார்..............

ஏன்..............அந்தப்பொண்ணு மேட்டரு தான் தம்பி என்றார்...............

உடனே எழுந்து கை கழுவிக்கொண்டு பக்கத்துக்கு தெருவில் இருந்த அவன் வீட்டுக்கு ஓடினேன்.............

டேய் ஒன்னுமில்லடா விடு.......என்றான்...........

வாடா இன்னிக்கி பாத்துருவோம் என்று அவனை இழுத்துக்கொண்டு அந்த தெரு நோக்கி நடந்தேன்...............

முக்கில் தம் அடித்துக்கொண்டு இருந்த இருவரும் என்னைப்பார்த்த உடன்......இன்னா தம்பி காலைல தான் அவன் வாங்குனான் என்று ஆரம்பித்து சென்னை தமிழில் குதறினார்கள்....................

அதுவரை அமைதியாக இருந்த நான்.............என் கட்டுப்பாட்டை இழந்தேன்......ஒரு அடிதான் ..................அந்த கேவலமான வார்த்தைகளை சொல்லிக்கொண்டு இருந்தவன் கீழே பேச்சு மூச்சி இன்றி விழுந்திருந்தான்............

உடனே அந்த இன்னொருவன்...............ஓடிக்கொண்டே............நீ ஆம்பளையா இருந்தா இங்கயே நில்லுடா என்று சொல்லி விட்டு...........மறைந்தான்!

சில நிமிடங்களில் அந்த ஏரியா தாத்தா அல்ல தாதா என்று கூறிக்கொள்ளும் அந்த அழகான(!) மனிதன் வாயில் பான் பராக் மணத்தோடு என்னை நெருங்கினான். 

என்னடா என் ஆளு மேல கைவச்சிருக்க என்றான்.....(அந்த அடிவாங்கியவன் பெண் இல்லையே!)

இப்போ உம் மேலயும் வெப்பேன் என்றேன்................

அவர்கள் மொழியில் சொல்லப்படும் "சாமான்" என்பதை அவன் என்னை நோக்கி குத்த முயன்றான்............சில நிமிடங்களில்.........அவன் கையிலிருந்து அது என்கைக்கு இடம் மாறியது.............


என் விறைப்பை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போயிருக்க வேண்டும் அவன்(!)

இப்போ என்ன பண்ணனும்கிற என்றான்................

யாரு இவன அடிச்சாங்களோ அவனுங்க இங்க வந்து மன்னிப்பு கேக்கணும்............இல்ல ஒவ்வொருத்தனையும் கேக்க வெப்பேன் என்றேன்............

அந்த மூன்று துக்கடா பசங்களும் சில நிமிடங்களில் என் நண்பன் முன் ஆஜர் படுத்தப்பட்டு.......ஆளுக்கு ஒரு அறை என் நண்பன் கையால் வாங்கிக்கொண்டு விடை பெற்றார்கள்.................

கடைசியில் அந்த க்ரூபுக்கு தலைவன் சொன்னது............தம்பி இங்க நடந்தது வெளிய தெரிய வேணாம்..........இங்க எதுவுமே நடக்காத மாதிரி நாங்களும் நடந்துக்குறோம் என்றான்...................

நானும் அமைதியாக வெளிஏறினேன் அந்த இடத்திலிருந்து.......முழு மதி வீசிக்கொண்டு இருந்தது...........

கொசுறு: இன்று நினைத்தாலும் நானா அப்படி என்று நினைக்க தோன்றுகிறது. அந்த நண்பன் இன்று ஒரு ஓட்டல் நடத்துவதாக கேள்விப்பட்டேன்.......வரும் விடுமுறைக்காலத்தில் அவனைக்காண வேண்டும் அவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த சகோதரியுடன்.........

கூச்சம்: தலைப்பு ஒரு ஜாலிக்கு ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

39 comments:

தமிழ்வாசி - Prakash said...

டீ, வடை

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி.. நீ நல்லவனா? கெட்டவனா? நல்லவனைபோல் நடிக்கும் கெட்டவனா? ஹி ஹி

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வாங்கோ வாங்கோ!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
தம்பி.. நீ நல்லவனா? கெட்டவனா? நல்லவனைபோல் நடிக்கும் கெட்டவனா? ஹி ஹி"

>>>>>>>>>>>

அண்ணே நானு மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைங்கறீங்க ஹிஹி!

தமிழ்வாசி - Prakash said...

எப்பவும் எங்க ரூம்ல இருந்த நண்பர்கள் எல்லாருக்கும் நான் தான் சமையல் >>>

விதி யாரை விட்டது? பாவம் அவங்க....

koodal bala said...

நீங்க ஏரியா தாதாவா....சொல்லவே இல்ல ......

சங்கவி said...

மாப்பு... நீங்க இவ்வளவு நல்லவரா????

ஷர்புதீன் said...

மாமா, அது என்ன கோடு விட்டு கோடு விட்டு எழுதுறீங்க.... உங்க பஞ்சா?

சசிகுமார் said...

மாப்ள என்னய்யா நைட் ஏதாவது தமிழ் சினிமா பார்த்துக்கொண்டே தூங்கிட்டியா...

சரி விடு அதெல்லாம் கனவு ஹி ஹி ஹி

சசிகுமார் said...

//இன்று நினைத்தாலும் நானா அப்படி என்று நினைக்க தோன்றுகிறது.//

உங்களுக்கே சந்தேகமா நாங்க எப்படி நம்புறது?

சசிகுமார் said...

//அவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த சகோதரியுடன்//

மாப்ள நல்ல காதலுக்கு தான் உதவியிருக்க சூப்பர் மாப்ள

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விக்கி..
நல்லவரு..
வல்லவரு..
தங்கமானவரு..
எல்லாம் தெரிஞ்சவரு..
நாளும் அறிந்தவரு..
(புகழுக்கு அடிமை என்பதால்!)

MANO நாஞ்சில் மனோ said...

டேய் ரவுடி, என்ன பயங்காட்டுரியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ ரவுடி....

செங்கோவி said...

இந்த சீனை நான் ஏதோவொரு தெலுங்குப் படத்தில் பார்த்திருக்கனே..

# கவிதை வீதி # சௌந்தர் said...

டீ ஆர்டர் பண்ணியாச்சி...

லைட்டா ஸ்ட்ராங்க.. மீடியமா...

கோவை நேரம் said...

இப்பவும் தாதா வா இருக்கிறீங்களா..?

Jana said...

யாரு இவன அடிச்சாங்களோ அவனுங்க இங்க வந்து மன்னிப்பு கேக்கணும்............இல்ல ஒவ்வொருத்தனையும் கேக்க வெப்பேன்...
mmmmm.....

மைந்தன் சிவா said...

ம்ம் அனுபவ பகிர்வு..
ஹிஹி சி பி அண்ணன் கேட்ட கேள்வி ரிப்பீட்டு!

டக்கால்டி said...

meel pathivu...thalaippu mattum vera...

உலக சினிமா ரசிகன் said...

உங்க மாதிரியே எங்க ஊர்ல ஒருத்தர் இருக்காரு .அவரை நாங்க கேப்டன்...கேப்டன்னு கூப்பிடுவோம்.

நிரூபன் said...

நெசமாவே நீங்க பலசாலி தான் பாஸ்..
பின்னிட்டீங்க போங்க...

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

புரிந்து கொண்டதுக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@koodal bala

"koodal bala said...

நீங்க ஏரியா தாதாவா....சொல்லவே இல்ல ......"

>>>>>>>

அடப்பாவமே...ஏன்யா ஏன்..நான் ஒரு அப்ராணி ஹிஹி!

விக்கியுலகம் said...

@சங்கவி

"சங்கவி said...

மாப்பு... நீங்க இவ்வளவு நல்லவரா????"

>>>>>>>>

மாப்ள உமக்கும் புரிஞ்சி போச்சா ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஷர்புதீன்

"ஷர்புதீன் said...

மாமா, அது என்ன கோடு விட்டு கோடு விட்டு எழுதுறீங்க.... உங்க பஞ்சா?"

>>>>>>>

மாப்ள கொத்தி விட்டு கொத்தி விட்டு எழுதனும்னு பாக்குறேன் முடியல ஹிஹி!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...

மாப்ள என்னய்யா நைட் ஏதாவது தமிழ் சினிமா பார்த்துக்கொண்டே தூங்கிட்டியா...

சரி விடு அதெல்லாம் கனவு ஹி ஹி ஹி"

>>>>>>

மாப்ள இது வேறயா...அப்படியே நெனச்சிக்கய்யா ஹிஹி!
..........................

"சசிகுமார் said...

//இன்று நினைத்தாலும் நானா அப்படி என்று நினைக்க தோன்றுகிறது.//

உங்களுக்கே சந்தேகமா நாங்க எப்படி நம்புறது?"

>>>>>>>>>>>

எல்லோருக்கும் சிறுவயதுல இப்படி நாம நடந்துகிட்டமான்னு ஒரு சந்தேகம் இருக்கும்யா!
...........................

"சசிகுமார் said...

//அவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த சகோதரியுடன்//

மாப்ள நல்ல காதலுக்கு தான் உதவியிருக்க சூப்பர் மாப்ள"

>>>>>

அந்த மனத்திருப்தி போதும்யா!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விக்கி..
நல்லவரு..
வல்லவரு..
தங்கமானவரு..
எல்லாம் தெரிஞ்சவரு..
நாளும் அறிந்தவரு..
(புகழுக்கு அடிமை என்பதால்!)"

>>>>>>>>

பாருங்க மாப்ள...நான் இப்போ சொல்லல...
திட்டவேனாம்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...

டேய் ரவுடி, என்ன பயங்காட்டுரியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி...."

>>>>>>

ரொம்ப காலத்துக்கு முன்னே இது......அண்ணே ஏன்னே ஏன்..உண்மைய சொல்லப்படாதா ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"செங்கோவி said...

இந்த சீனை நான் ஏதோவொரு தெலுங்குப் படத்தில் பார்த்திருக்கனே"

>>>>>>

ஆமாம்யா...
என்னைபோல ஆளுங்க கதை அப்படித்தான் போல ஹிஹி!

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

டீ ஆர்டர் பண்ணியாச்சி...

லைட்டா ஸ்ட்ராங்க.. மீடியமா.

>>>>>

ரைட்டு நன்றிங்கோ!

விக்கியுலகம் said...

@Jana

Thank you for mmmmmmm hehe!

விக்கியுலகம் said...

@கோவை நேரம்

"கோவை நேரம் said...

இப்பவும் தாதா வா இருக்கிறீங்களா..?"

>>>>>>>>>>>>

மாப்ள இப்போ தாத்தா போல இருக்கேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"மைந்தன் சிவா said...

ம்ம் அனுபவ பகிர்வு..
ஹிஹி சி பி அண்ணன் கேட்ட கேள்வி ரிப்பீட்டு!"

>>>>>

மாப்ள பதில் அவருக்கு சொன்னதே ரிப்பீட்டு ஹிஹி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

public public...i know about your memory power hehe!

விக்கியுலகம் said...

@உலக சினிமா ரசிகன்

"உலக சினிமா ரசிகன் said...

உங்க மாதிரியே எங்க ஊர்ல ஒருத்தர் இருக்காரு .அவரை நாங்க கேப்டன்...கேப்டன்னு கூப்பிடுவோம்"

>>>>>>

மாப்ள நான் உண்மைய சொல்றேன்..பொய்யில்ல!.

விக்கியுலகம் said...

நிரூபன் said...

நெசமாவே நீங்க பலசாலி தான் பாஸ்..
பின்னிட்டீங்க போங்க.

>>>>>

மாப்ள முரடங்கறீங்க ஹிஹி!

நாடோடிப் பையன் said...

நீங்க ஒரு நல்ல நண்பன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்ள இது மீள்பதிவுதானே? இருந்தாலும் நல்லாத்தான்யா இருக்கு!