Followers

Tuesday, June 7, 2011

பயம் எப்படி என்னை விட்டு போனது!


வணக்கம் உறவுகளே.. 

பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். ஆனா என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிரமமான விஷயம் அதுவும் குழந்தையுடன் செல்லும் பெண்களுக்கு பெரிய போராட்டம் என்பேன்.

பெண்களுக்கு பொறுமை என்பது மிகத்தேவையான ஒன்று அதுவும் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள் மிகுந்த பொறுமையுடன் கூடிய விழிப்போடு இருக்க வேண்டியது மிக அவசியம் என்று நினைக்கிறேன். என்னுடைய பயணம் பற்றிய பகிர்வே இந்த பதிவு.


நான் மிகவும் அதிகமாக படித்தவள் இல்லை! அதனால் எனக்கு ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியுமே தவிர சரளமாக பேச இயலாது. எனினும் என் துணைவரின் வற்புறுத்தலால் ஓரளவுக்கு இப்போது பேசுகிறேன். நாடு விட்டு நாடு பயணிக்கும் விமானத்தை திருமணத்துக்கு முன் பார்த்திருக்கிறேன் அவ்வளவே! பயணித்தது இல்லை.


இந்த விஷயத்தில் நான் மிகுந்த பயம் கொண்டவளாக இருந்திருக்கிறேன். அதாவது எந்த இடத்திற்க்கு சென்றாலும் யாராவது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் சென்று தான் பழக்கம். பெரிய குடும்பம் என்பதால் அப்படியே வளர்ந்து விட்டேன். திருமணம் முடித்த பிறகும் சில வருடம் அப்படியே இருந்தேன். அந்த நேரத்தில் துணைவருக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்து கிளம்பினார். 


வேலை பொருட்டு அவர் முதலில் சென்று விட்டார். பின்பு கிட்ட தட்ட மூன்று மாதம் கழித்து நான் செல்ல முடிவாகியது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது...எங்கள் வீட்டிலோ என் கணவரை வற்புறுத்த சொன்னார்கள். அதாவது நான் தனியாக செல்லவேண்டாம் என்று சொல்லி அவரை வந்து கூட்டிப்போக சொன்னார்கள். அதுவும் குழந்தையுடன் செல்வது இன்னும் கடினம் என்று பய முறுத்தினார்கள். 


ஆனால் நான் தனியாகவே செல்வதாக முடிவு செய்து விட்டேன். தேவையில்லாமல் அவருக்கு தொந்தரவு மற்றும் வீண் பண செலவு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அவரும் தைரியமாக வந்து சேர் என்று சொல்லி விட்டார்!. அதுவும் எங்கள் மகன் அப்போது 2 வயது குழந்தை. 

எல்லோருக்கும் தைரியம் சொல்லி விட்டு நான் புறப்பட்டேன்......

தொடரும்...

கொஞ்சம் மேலாக: நான் சிறிய சிறிய பதிவுகளாகவே இடுவதை பொறுத்துக்கொள்ளுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி!


வித்யா குமார்

கொசுறு: பதிவை படித்து விட்டு கமன்ட் போடவும்...இப்படிக்கு "விக்கிஉலகம்" ப்ளோக்கை இப்போதைக்கு தத்து கொடுத்த தக்காளி.....ப்ளீஸ் மேடம் இது மட்டுமாவது நான் எழுதிக்கரனே!...(நண்பர்கள் கவனிக்கவும்!)

இது ஒரு காபி பேஸ்ட் பதிவு இந்த பயம் என்பது எப்படி என்னை விட்டு போனது! ப்ளோகில் இருந்து சுடப்பட்டது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுல சமாளிப்பு வேற..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அடப்பாவி .. வீடுக்காரம்மவிர்க்கு ஐஸ் ஸா ?

அவங்க போடற மாதிரியே ஒரு போஸ்ட் நீயே போட்டுட்டு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள் உங்களின் வாழ்க்கை துணைவியாருக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆனால் நான் தனியாகவே செல்வதாக முடிவு செய்து விட்டேன். தேவையில்லாமல் அவருக்கு தொந்தரவு மற்றும் வீண் பண செலவு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

இந்த பதிவை மிசஸ் விக்கி தான் எழுதுனாங்க என்பதற்கான ஆதார வரிகள்...

ஷர்புதீன் said...

//நான் சிறிய சிறிய பதிவுகளாகவே இடுவதை பொறுத்துக்கொள்ளுமாறு //முடியாது ., என்ன செய்வதாக உத்தேசம்., ஹி ஹி

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனுபவம் பேசுகிறது..

அந்த பதிவுக்கும் போயிட்டு வருகிறேன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னங்க இப்படி ஒரு பதிவு...

இராஜராஜேஸ்வரி said...

பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். ஆனா என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிரமமான விஷயம் அதுவும் குழந்தையுடன் செல்லும் பெண்களுக்கு பெரிய போராட்டம் என்பேன்.//

உண்மைதான். குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது கணவர், குழந்தைகள் இடையே நேரத்தைக் கடைப்பிடிகக தவியாய் தவித்திருக்கிறேன்.

சசிகுமார் said...

யோவ் மாப்ள நீ தான் இந்த பதிவுலகத்துல மாட்டிகிட்டு படாத பாடு படர இருக்க தேவையில்லாம அவுங்களை ஏன்யா கூப்பிடுற ஹா ஹா

NKS.ஹாஜா மைதீன் said...

மனைவிக்கு மரியாதை..nice..

ஈரோடு தங்கதுரை said...

வாழ்த்துக்கள் .....வாழ்த்துக்கள் ....!

கந்தசாமி. said...

வாழ்த்துக்கள்...............

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சுட்டதகூட சொல்லிடிங்க ... நீங்க ரொம்ப நல்லவர்

THOPPITHOPPI said...

படிக்கவே பயங்கரமா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்ள. நல்ல விஷயம்... தொடர்ந்து எழுத சொல்லு!

தமிழ்வாசி - Prakash said...

எப்படிஎல்லாம் காப்பி அடிக்கிறாங்க... திருமதி விக்கி அவர்களே... உங்களிடம் அனுமதி வாங்கினாரா?

நிரூபன் said...

எழுத்து நடையைப் பார்க்கும் போதே நினைத்தேன்.
வீட்டுக்கார அம்மா தான் எழுதி இருக்காங்க.
ஹி...ஹி...

நிரூபன் said...

பயம் பற்றிய முதலாவது தொடரில், விமானப் பயணத்தினைப் பலர் ஏன் வெறுக்கிறார்கள் தொடர்பான அலசலினைக் கிராமப் புற மக்களில் இருந்து ஆரம்பித்திருக்கிறார் கட்டுரையாளர். அடுத்த அங்கள் எப்படியிருக்கும் என்பதைப் படிக்க வெயிட்டிங்.