இந்த தலைப்பு கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னோட பதிவுல ஓட்டெடுப்பு மூலமா உங்க எண்ணத்தை புரிஞ்சிக்க நெனச்சி வச்சேன்..........
தேவை - 13
தேவையில்லை - 5
மனமுடைதல் அதிகம் - 10
முயற்சிக்க பயம் - 4
இவை வெறும் ஓட்டுக்கள் மட்டுமா அல்ல மனித மனங்களின் பிம்பங்களா......
இருந்தாலும்........தேவை என்று சொல்பவர்கள்..........தங்களின் அடுத்த சந்ததிக்கு இதனை தெரிவிப்பார்களா.........சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.......ஏனென்னில், காதல் வெறும் உடம்பு சம்பந்தபட்டே அதிகமாக வருவதாக தோன்றுகிறது.....இந்த இனக்கவர்ச்சி மட்டுமே அடுத்த 25 வருடங்களுக்கு போது மானதாக இருப்பதில்லை........அதனால் தானோ என்னவோ அதிகப்படியான பிரிவுகள் ஏற்படுகின்றன..........(மனமுடைதல்!)
காதல் புனிதமாவது என்பது எப்போது........!
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்கையிலும் இந்த காதல் தன் வலியை பதிவு செய்துவிட்டு செல்லும்......அதை வெறும் அப்போதைய வலியாக நினைப்பவன் மட்டுமே(!)....தொடர்ந்து செல்ல முடியும்....என்பது யதார்த்தம்......
இந்த கால கட்டத்தில்......காதல் எப்படி பார்க்கப்படுகிறது..........புரியவில்லை!
ஆனால், காதல் திருமணம் புரிந்தவர்களும் தன் குழந்தைகள் காதலித்தால் ஏன் எதிர்க்கிறார்கள்..........தன்னை போல தன் குழந்தைகள் எதையும் இழக்ககூடாது என்பதாலா.........!
எனக்கு ஒரு பெண் இருந்தால் நான் என் பெண்ணை காதல் திருமணம் செய்ய அனுமப்திப்பேனா!
இந்த கேள்வி என் நண்பர் என்னை கேட்டார்........
நானும் நிச்சயமாக.......என்றேன்....
இல்லை......நீ ஒரு தகப்பனாக இருந்து பார் என்றார்.........
உண்மைதான்........பேச்சிக்கு சொல்வதும் அதனால் நேரிடையாக பாதிக்கப்பட்டு சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது......
முதலில்...........காதல் வருமானத்தை பார்த்து வந்தால்........அது கண்டிப்பாக.....ஒரு இடத்தில முறிவதை நம்மால் தடுக்க இயலாது...........அதுவே திருமணத்துக்கு பிறகு வரும் காதல் பல விஷயங்களுடனே முதிர்ச்சியுடன் காணப்படும் என்பது என் தாழ்மையான கருத்து...........
அதே நேரத்தில்............சமுதாயம் என்று வரும்போது.........இந்த ஜாதி மத விஷயங்கள் ஒடுங்கி(!) போக இந்த காதல் திருமணம் தேவையானதாக உள்ளது.........இதை எந்த மாதிரி மாற்ற இயலும்...........
சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் போக வேண்டும்......அதே நேரத்தில் திருமணம் புரிந்தவர்களும்...........மனம் ஒத்து நீண்ட காலம் வாழ வேண்டும்........தங்களின் கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன நண்பர்களே........
கொசுறு: வாழ்கை எனும் நீண்ட நேர பயணத்தை துணையுடன் ரசிப்பவன் அறிவாளி.......அதை வினையுடன் பார்ப்பவன் முட்டாள் - இது என் தாழ்மையான கருத்து........நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
25 comments:
சிலர் எப்பவும் ஒரே மாதிரி பதிவு போடுவாங்க.. சிலர் சம்சாரம் பக்கத்துல இருக்கறப்ப வேற மாதிரி பதிவு போடுவாங்க. தக்காளி 2வது டைப் போல.. ஏண்டா இப்படி?
he he
@சி.பி.செந்தில்குமார்
அண்ணே ஏன்னே..இப்படி சொல்றீங்க.......உங்க கனிவான பதிலுக்கு நன்றி ஹிஹி!
இந்தப்பதிவின் மூலமா தக்காளி என்ன சொல்லவர்றான்னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு 25 டி வி டி பரிசு ஹி ஹி//
appo 25 dvd enakku thaana?
vootla anni kitta adi vaangurathula irunthu comment podura varaikkum
இந்தப்பதிவின் மூலமா தக்காளி என்ன சொல்லவர்றான்னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு 25 டி வி டி பரிசு ஹி ஹி
si.bi annan sema fast
நல்லவங்க என்னமா சொல்றாங்க ஹிஹி!
சகோ, இது கொஞ்சம் இடக்கு முடக்கான விடயம். அதாவது காதல் திருமணம் என்பது அடிப்படையில் பின்வரும் விடயங்களை வைத்து வேறுபடும்.
* முதலாவது எமது மனதிற்கு ஒருவரைப் பிடித்திருந்தால் காதல் வரலாம். அது பின்னர் திருமணத்தில் கை கூடலாம்.
*பருவ கால இச்சைகளை/ உடலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டி நேரும் போது ஒரு சிலருக்கு அது காலக் கிரமத்தில்(Earlier) எழுவதால், அந்த உணர்ச்சிகளின் வடிகாலாகத் தோன்றும் காதல்- பின்னர் சந்தர்ப்ப சூழ் நிலைகளால் கலியாணத்தில் முடியலாம்.
* இன்னோர் விடயம் அட எல்லோரும் காதலித்து திருமணம் செய்கிறார்களே, அதே போல நாமும் ஒரு தடவை வாழ்ந்தால் என்ன எனும் நோக்கத்தில் காதலித்து திருமணம் செய்யும் நபர்கள்
* இக் காலத்தில் பார்க்கப்படும் ஜாதகம்- ஜோதிடக் குறிப்புக்களால் அரேஞ் மரேஜ் செய்ய முடியாதவர்களும் தமக்கான துணையினைக் காதல் திருமணத்தின் மூலம் தேட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.
* வறுமை, குடும்ப சூழ் நிலைகளும்- அரேஞ் மாரேஜ்ஜை விடுத்து காதல் திருமணம் எனும் கட்டாய நிலைக்குத் தள்ளி விடுகிறது.
ஆக இத்தைய மனிதர்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் காதல் திருமணம் என்பது காலத்தின் கட்டாயமாகத் தான் தோன்றுகிறது.
தல நீங்க என்ன சொல்ல வர்றீங்க...
உண்மையில் எமது எதிர்காலச் சந்ததியினர் மத்தியில் ஒரு திடமான வாழ்க்கையினையும், அவர்களிற்கான சுதந்திரத்தை நாம் பறிக்காது அவர்களின் மன விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட வைக்க வேண்டுமாயின் காதல் திருமணம் எனும் நிலைக்கு எம் எதிர்காலச் சந்ததியினர் ஆளாகும் போது நிச்சயமாக நாம் குறுக்கே நிற்கக் கூடாது.
@tamilan
அண்ணே படிச்சி பாக்குறேன்னே!
@நிரூபன்
நான் சொல்லவர்றது என்னன்னா இப்போ இருக்க பணிசுமைகளில் காதல் என்பது ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடாக இல்லாமல்......வெறும் சபலமாக பார்க்கப்படுகிறதோ என்பதே அது.........
கொஞ்சகாலத்துக்கு பிறகு வெறுப்புகள் உமிழப்படுகின்றன....
அதன் பொருட்டே சொல்லி இருக்கிறேன் நண்பா!
@சங்கவி
மாப்ள என்னை பொறுத்த வரை காதல் என்பது உண்மையில் வெளிப்படுவது திருமணத்துக்கு பிறகே.......அதை கட்டிக்காக்க வேண்டியது நமது கடமை....திருமணம் என்பதே வாழ்கையின் மிகப்பெரிய படிக்கல் தானே!
@நிரூபன்.
"நிரூபன் said...
உண்மையில் எமது எதிர்காலச் சந்ததியினர் மத்தியில் ஒரு திடமான வாழ்க்கையினையும், அவர்களிற்கான சுதந்திரத்தை நாம் பறிக்காது அவர்களின் மன விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட வைக்க வேண்டுமாயின் காதல் திருமணம் எனும் நிலைக்கு எம் எதிர்காலச் சந்ததியினர் ஆளாகும் போது நிச்சயமாக நாம் குறுக்கே நிற்கக் கூடாது."
>>>>>>>>>
வெற்று ஜாதி உணர்வுகளுடன் தடையாக நிற்பது தேவையற்றதாக இருந்தாலும்........
பெரியவர்கள் கவலைப்படுவதே தம்பதிகளின் நீண்ட நாள் வாழ்கை பற்றியே!
காதல் 21-ம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத விஷயம் அதை நாகரீகமாக கையாள வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய சமூதாயம் விளங்க வேண்டும்.....
காதல் திருமணத்தில்தான் கசப்புகள் அதிகமாகி பிரிவுகளை ஏற்படுத்துகின்றன...
என்ன ஒரு புனித பணி..சமூக தொண்டு
தக்காளி என்னப்பா ஆச்சு
இப்படி ஒரு பதிவ நான் எதிர்பார்க்கல
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html
...... , .............இது எதுக்குங்க ?
http://josephinetalks.blogspot.com/2011/06/blog-post.html காதலை பற்றிய என் கருத்துக்கள் !
மாப்ள நீம்பாட்டுக்கு இப்படி நல்லவனாயிட்டேன்னா அப்புறம் நாங்கள்லாம் என்ன பண்றதுன்னு சிபி கேட்க சொன்னாப்ல, பாவம்யா அவரு இந்த பதிவ பாத்துட்டு பொறி கலங்கி போய் இருக்காரு.....!
எதுவுமே புரியல மாம்ஸ்! இதைப்பற்றிப் பேச எனக்கு வயசு போதாதுன்னு நினைக்கிறேன்! :-)
விக்கி உலகம் said...
@சங்கவி
மாப்ள என்னை பொறுத்த வரை காதல் என்பது உண்மையில் வெளிப்படுவது திருமணத்துக்கு பிறகே.....///
செல்லாது செல்லாது...
காதலை வாழ்க்கை முழுமைக்கும் அனுபவிப்பவன் அதில் தோல்வி அடைபவன் மட்டுமே ........
Post a Comment