வணக்கம் நண்பர்களே!
தொலைபேசி உரையாடல் உங்களுக்காக..........
தம்பி நல்லா இருக்கீங்களா...
அண்ணே நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க...
நல்லா இருக்கேன்....என்ன மறந்திட்டியா...!
இல்லைண்ணே வேலை அதிகம்...உங்கள மறக்க முடியுமா....தப்பா எடுத்துக்காதீங்கன்னே...
என்னப்பா பண்றது என் ஆட்சி முடிஞ்சி போசிங்கறதால யாரும் கண்டுக்கறது இல்ல...
அப்படி இல்லன்ன எப்பவுமே நீங்க பெரிய ஆளுதான்....எங்களுக்கு மூத்தவுக..
எப்பதான் என்னை பாக்க வருவ....
இதோ கெளம்பிடென்னே வந்துட்டே இருக்கேன்...
மறக்காம உன் பொஞ்சாதி புள்ள விஷயத்த கொண்டுவா....
சரிண்ணே........
சிறிது நேரத்துக்குப்பிறகு....
என்னன்னே இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டீங்க...
இந்தாப்பா உன்னோட, உன் மனைவி மற்றும் பையனோட பாஸ் போர்ட்டு...உனக்கு ஒரு வருஷம் விசா அனுமதி....உன் குடும்பத்துக்கு ஆறு மாச அனுமதி....போதுமா....
என்னன்னே இப்படி சொல்றீங்க....நீங்க இல்லாம எதுவும் நடக்காது....
ஆமாம்யா...நான் உன்னை கூப்டு பாஸ்போர்ட்ட புடுங்கி விசா வாங்கி குடுத்தாத்தான் மலேசியா வருவியா...ஏன் உனக்கு இந்த அண்ணன் மேல அவ்ளோ அலட்சியமா.............
இல்லன்னே....
இந்த மாசத்தோட என் 5 வருஷ சர்வீஸ் முடிஞ்சிடுச்சி....உன்ன மாதிரி தம்பிகள விட்டு பிரியறது தான்யா மனசு கஷ்டமா இருக்கு...என்றார் அந்த அண்ணன்.
இவர் தான் மலேசிய (தமிழர்) அதிகாரியாகிய என் நண்பர்(அண்ணன்) திரு. கருணாநிதி....முதல் முறையாக நண்பரின் பிரிவுக்காக கண்கலங்கிய கருணாநிதியை(!) பார்த்தேன்...
கொசுறு: பேருல என்னங்க இருக்கு மனசுல தான் உலகமே இருக்கு...எல்லாரும் ஒரே மாதிரியா இருப்பாங்க...
கொசுறு இன்னும்: நம்மூரு மனுசங்களும் இப்படி மாறினால் எம்புட்டு நல்லா இருக்கும்..

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
16 comments:
டைட்டில் அட்ராக்ஷனுக்காக உன் பர்சனல் அட்ராக்ஷனை இழந்து விடாதே#நெஞ்சுக்கு நீதி
கலக்குதுங்கோ....
ரைட்டு..
ஏலே மாப்ள சிபி ஆன்லைனில் இருக்கியா?
பதிவு ஒன்னும் புரியல ..
ங்கே.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
கொசுறு இன்னும்: நம்மூரு மனுசங்களும் இப்படி மாறினால் எம்புட்டு நல்லா இருக்கும்.. :://///
ரொம்பவே நல்லா இருக்கும்` பாஸ்!
தலைப்பில் உள்ளது போல உண்மையாகவே உங்கள் நண்பரின் பெயர் கருணாநிதியா இல்லை புனைவா நண்பரே !?
///நம்மூரு மனுசங்களும் இப்படி மாறினால் எம்புட்டு நல்லா இருக்கும்.. ///
நல்லா இருக்கும் நல்லாதான் இருக்கும் அட நல்லா இருக்கும்யா...........அட போப்பா
நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு அப்புறம் ஏன் இப்படி தலைப்புலாம்? வியட்னாமுக்கு ஆட்டோ வராதுனு நினைப்பா?
யோவ், நக்கலா..எம்புட்டு ஆர்வமா ஓடி வந்தேன்..
தலைப்பை பார்த்து ஏமாந்து விட்டவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைதான்.
[எவ்வளவு நேக்கா ஏமாத்தறாங்க...]
அருமையான பதிவு... ஹி..ஹி... ஒண்ணுமே புரியல அப்படின்னு சொல்ல மாட்டேன்
//சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் அட்ராக்ஷனுக்காக உன் பர்சனல் அட்ராக்ஷனை இழந்து விடாதே#நெஞ்சுக்கு நீதி//
வயித்தெரிச்சல் திலகம் வாழ்க!
தலைப்பிலை சஸ்பென்ஸ் வைக்கிறாரா அண்ணாச்சி........
ரசித்தேன், கூடவே இறுதியாகச் சொல்லியிருக்கின்ற நச்சென்ற கொசுறு பதிவிற்குப் பக்க பலமாக இருக்கிறது.
சூப்பர் மாம்ஸ்!
யோவ் ரொம்ப குசும்புய்யா உனக்கு!
Post a Comment