வணக்கம் நண்பர்களே...........
என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.
என் பதிவுகளை மதித்து, எவ்வளவு மொக்கைபதிவாக இருப்பினும் அதைத்தாங்கிக்கொண்டு என்னைப்பின்தொடரும் கலியுக கடவுள்கள்(அவர்தான நாம என்னா சொன்னாலும் அமைதியா போவாரு) 159 பேருக்கும் நன்றி.
இத்துடன் எனது சிறிய சுயபுராணத்தை (அதாங்க பயோடேட்டா!?) இணைத்துள்ளேன்.
பெயர்: குமார்.
வேலை: மேலாளர் (infrastructure & power projects Development)
உப வேலை : ப்ளாக் எனும் பெயரில் ஊர் வம்பை விலைக்கு வாங்குவது(கொல்றாங்களே ,காப்பாத்துங்க, காப்பாத்துங்க).
தலைவர்கள்: தமிழ் ஆர்வலர்கள்.
உப தலைவர்கள்: மனைவி மற்றும் மகன்.
வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!)
நண்பர்கள்: ப்ளாகில் ஓட்டும் கருத்தும் சொல்பவர்கள்.
பலம் : எதையும் தாங்கும் மனைவி கிடைத்தது.(யப்பா ஐஸ் போதும்னு நெனைக்கிறேன்)
பலவீனம்: சொந்தங்களை பிரிந்து வேலை(பணம்) காரணமாக வெளிநாட்டில் உழைப்பது.
சமீபத்திய சாதனை: நானும் ஒரு ப்ளாக்கர்.
நீண்ட நாளைய சாதனை: முன்கோபத்தை விட்டது.
பாதித்த விஷயம்: மூர்த்தி(மானிட்டர் மூர்த்தி பக்கங்களுக்கு சொந்தக்காரன்!)......காதலி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டது......அது தெரியாமல் இன்னும் நண்பன் மனநல மருத்துவ இடத்தில் இருப்பது!
சாதித்தது: இதுவரை நண்பர்களைத்தவிர ஒன்றுமில்லை (ஐயோ கல்யாணம் மறந்துட்டனே!)
உண்மையில் "தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்(பலம் மற்றும் பலவீனம்)" - இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். அதாவது எனக்கு பேச்சு பலம் கொஞ்சம் இருக்கிறது, எழுத்து பலம் அந்தளவுக்கு இல்லை என்பதை அடிக்கடி யோசித்துக்கொண்டு இருக்கும்போது தான் இந்தப்பதிவிடும் விஷயம் என்னை அடுத்த கட்டதிட்க்கு அழைத்து சென்றது.
என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே. அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து.
இந்த விஷயங்களை உலகில் எங்கோ இருந்தும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன்.
பொதுவாக கவிதை ரசிக்க தெரிந்தால் போதும் என்று நினைக்கும் சராசரி மனிதன் நான். அதனால் அந்த விஷயத்தில் விஷப்பரீட்சை எடுப்பதில்லை. இதுவரை நான் எந்த சினிமாவுக்கும் விமர்சனமோ, நடிகர்களை புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பதிவிட்டதில்லை. அது பலரின் மனத்தை காயப்படுத்தும் என்பதால் மற்றும் அவரவர் தொழில்களில் சிறந்து விளங்குபவர்களை விமர்சிப்பதால் மட்டுமே என்னால் உயரத்திற்க்கு செல்லமுடியும் என்ற மாய நம்பிக்கை என்னிடம் இல்லை(பதிவர்கள் மன்னிக்க!).
250 வது பதிவிலாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெரிஞ்சிக்கிற விஷயம் சொல்லலாமுன்னு.....ஹி ஹி!
நான் வாழும் நாட்டுல நம்ம தமிழனோட ரேக்ளா ரேஸ் ரொம்ப பேமசு...........வருசத்துல அக்டோபர் மாசம் 9 மற்றும் 10 தேதில நடத்தப்படுது இந்த பந்தயம்.........இதுல கொஞ்சம் வித்தியாசம் என்னன்னா இந்த பந்தய மைதானத்துல கொஞ்சம் தண்ணியும் இருக்கும் அதுனூடே திறமையா ஓட்டனும் அதுதானுங்க பங்களிக்கரவங்களோட தெறமையே!
நான் வாழும் நாட்டுல நம்ம தமிழனோட ரேக்ளா ரேஸ் ரொம்ப பேமசு...........வருசத்துல அக்டோபர் மாசம் 9 மற்றும் 10 தேதில நடத்தப்படுது இந்த பந்தயம்.........இதுல கொஞ்சம் வித்தியாசம் என்னன்னா இந்த பந்தய மைதானத்துல கொஞ்சம் தண்ணியும் இருக்கும் அதுனூடே திறமையா ஓட்டனும் அதுதானுங்க பங்களிக்கரவங்களோட தெறமையே!
இந்த பந்தயம் நடக்கும் போது அப்படியே தமிழ் நாட்டுல இருக்குறா மாதிரி இருக்கும்..........என்னா ஒரு கைத்தட்டலு...........மக்கள் என்னமா என்சாய் பண்ணுவாங்க தெரியுங்களா.............சும்மா அப்படி ஒரு அமக்களமா இருக்கும்....
நீங்களும் பாத்து சந்தோசப்படுவீங்கன்னு நெனைக்கிறேன்...
என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன். என் பதிவுகள் எதுவும், இல்லாத ஒன்றை சொல்லும் விஷயங்கள் இல்லை, அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதரிடமும் ஆயிரம் விஷயங்கள் உள்ளன அதனை வெளிப்படுத்தும் ஒரு இடமே பதிவுலகம் - இது என்னுடைய தாழ்மையான கருத்து.இன்றுவரை என்னை உற்சாகப்படுத்தி ஓட வைத்துக்கொண்டு இருக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.
கொசுறு:இருக்குற இடத்த சொந்த இடம் மாதிரி பார்ப்பவனே வாழத்தெரிந்தவன். வழக்கம்போல ஓட்ட குத்துங்க, கருத்த மறக்காம சொல்லுங்க.
என்றும் நட்புடன்....
வருங்கால அரசியல்வாதி (வியாதி அல்ல ஹி ஹி !)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
33 comments:
நண்பனிடமே இத்தனை நாட்களாக உண்மையை மறைத்த தக்காளி வாழ்க.. ஹி ஹி
அடேங்கப்பா.. 250 ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?ஆ?
சொல்லவே இல்லை? ஹி ஹி
>>
பொதுவாக கவிதை ரசிக்க தெரிந்தால் போதும் என்று நினைக்கும் சராசரி மனிதன் நான்.
ஓஹோ புரிஞ்சுது.. ஒன்லி ரசிப்பு மட்டும்? ஹி ஹி
VAAZHTHUKKAL MAAMS.
BIODATA ICE DATA'VAA IRUKKE
போட்டு தாக்குங்க .வாழ்த்துக்கள் !
நீண்ட நாளைய சாதனை: முன்கோபத்தை விட்டது.
அதனால் தான் தங்களால் இந்த உயரத்தை எட்டமுடிந்திருக்கிறது.
மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா.
என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன்
நல்லாச் சொன்னீங்க நண்பா.
ஒவ்வொரு பதிவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் இது.
He He..Congrats anne...
அரசியல்வாதியா???????
நீ எல்லாம் அதுக்கு சரி பட்டு வரமாட்ட??????? :P
வாழ்த்துக்கள்
250-ஆவது பதிவிற்கும், நல்ல அரசியல்வாதியாக வருவதற்கும்(கிண்டல் பண்ணலை, உண்மையா தான் சொல்றேன்) என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா!
அடுத்த முதல்வர் தக்காளி குமார் வாழ்க
அடுத்த முதல்வர் தக்காளி குமார் வாழ்க
அடுத்த முதல்வர் தக்காளி குமார் வாழ்க
அடுத்த முதல்வர் தக்காளி குமார் வாழ்க
அடுத்த முதல்வர் தக்காளி குமார் வாழ்க
இனிய குமார் அவர்களுக்கு வாழ்த்த்துக்கள்
வருங்கால அரசியல்வாதி (வியாதி அல்ல ஹி ஹி !) //// வாழ்த்துக்கள்..
( சொல்லி வைப்போம் பிற்காலத்தில் உதவலாம்)
என்னது அதற்குள்ள 250 ஆ? நம்பவே முடியல! வாழ்த்துக்கள் தல! இன்று தமிழ்மணத்துல 7 வது ஓட்டு என்னுடையது!! அண்ணன் வாழ்க!
எப்பா 250 பதிவா தக்காளி பெரிய தக்காளி ஆயிடுச்சி வாழ்த்துக்கள் நண்பா
முதலில் வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்துக்களே கவிதை. பிறகு கவிதை எழுதவில்லை என்று கவலை ஏன்?
மனம் நிறைந்த வாழ்க்கை இருக்கே, அதுவே ஒரு வரம்தான்.
வலிமை கொண்ட உங்கள் மனம், இன்னும் பல வரலாறு படைக்கட்டும்.
வாழ்த்துக்கள் மாம்ஸ்!! :-)
வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க வளர்க..தொடர்க ...
வாழ்த்துக்கள் மாம்ஸ், வலையுலகில் மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மாமா இவ்வளவு பதிவுகளையும் எழுதிய கனனிக்கைகளுக்கும் சேர்த்து ஒரு ஓப்போடு!
சுய வடிவிலான பயோ டேட்டா கலக்கல்...வாழ்த்துக்கள் மாம்ஸ்...
வாழக பதிவுடன்.வாழ்த்துக்கள்.
மாமு!
மங்கிஸ்தான்..கிங்கிஸ்தான்...
சிங்கிஸ்தான்...பாயாஸ்தான்...
கவுண்டமணி பாஷையில் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.. விக்கி...
சமத்தா தொடர்ந்து வேலைசெய்யுங்க...
மாம்ஸ் தீய வேல செய்யணும்
//முன்கோபத்தை விட்டது.//எதிரில் ஆள் இல்லாத உலகமாச்சே , அதனால் பதிவர்கள் தப்பிட்டாங்க .....வாழ்த்துக்கள் மாமா!
பதிவுலகில் பெரியதொரு மைல் கல்லினை கடந்திருக்கிறீர்கள்.
உங்கள் காத்திரமான எழுத்துக்களால் தொடர்ந்தும் எம்மையெல்லாம் கட்டி வைத்திருப்பீங்க என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் அண்ணாச்சி..
தொடர்ந்தும் தமிழோடு, தமிழால் இணைந்திருப்போம்.
என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் கோடி!
250வது பதிவுக்கு வாழ்த்துகள் விக்கி!
Post a Comment