வணக்கம் நண்பர்களே...
கொஞ்ச நாளைக்கு அரசியல் பக்கமா போறது குறைஞ்சி இருக்குது....சரி சொந்த புராணங்களை சொல்லலாமேன்னு தான் இன்னைக்கும்(!) முடிவு பண்ணிட்டேன்....விஷயம் என்னனா...
கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம நாட்டுல இருந்து ஒரு அய்யா இங்க வருகை புரிஞ்சி இருந்தாரு...அதுவும் முக்கியமான விஷயங்களில் இரு நிர்வாகத்துக்கும் நல்லிணக்கத்துடன் செயல்பட விரும்பி வந்து இருந்தாரு....பக்கத்து வீட்டுக்காரன்(சைனா!) தொல்ல தாங்க முடியாத இந்த ஊரு ஆளுங்களும் நம்ம அய்யாவ விரும்பி வரவேற்றாங்க....
எப்படியெல்லாம் ஒன்றினஞ்சி நல்லுறவுடன் முன்னேற்ற பாதையில் போறதுன்னு பேசிகிட்டாங்க...நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல...
பெரிய கையேந்தி பவன்ல(!) விருந்து ஆரம்பமாச்சி....எல்லாரும் கையில ஒரு பிளேட்ட வச்சி கிட்டு லைன்ல நின்னு என்ன தேவையோ அதை எடுத்து கிட்டு நகர ஆரம்பிச்சாங்க...இந்த மாதிரி சாப்பாடு கொடுமை பிடிக்கலன்னாலும், வேற வழி இல்லாம நானும் வரிசையில போயிட்டு இருந்தேன்...பிளேட்ட எடுத்துகிட்டு...கும்பலா இருந்த இடத்த நோக்கி போயி பாத்தா....
அவர சுத்தி பலர் நின்னுகிட்டு வழிஞ்சி கிட்டு இருந்தாங்க....சரி நாம ஒரு ஓரமா நின்னு என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு பாத்தேன்...வந்தவங்கள்ல பலர் அவரோட கால்ல விழுந்து கும்பிட்டு போனாங்க...எனக்கு நம்ம
நித்தி அல்லது
சித்தி (மம்மி!) ஞாபகமா வந்துது...என்றா இது கொடும்மன்னு பாத்தா எல்லோரும் எதோ ஒரு ஆதாயத்தோடத்தான் விழறாங்கன்னு மட்டும் புரிஞ்சிது....
என்கூட இருந்த ஒரு நண்பர் பாருய்யா இந்த வயசுல என்னமா இருக்காரு அப்படின்னு சொல்றது காதுல விழுந்துது...நானும் அடக்கி வாசிச்சிட்டு இருந்தேன்(அமைதியா இருந்தேங்க!)...ஒவ்வருதரா அவர் கிட்ட தங்கள அறிமுகம் செய்ஞ்சிகிட்டாங்க...பாவம் மனுஷன் கையில ப்ளேட்டோட வாயில உணவோட(!) அவங்களுக்கு கை கொடுக்க முடியாம திண்டாடிகிட்டே ஹாய் சொல்லிக்கிட்டு இருந்தாரு...
இவரு வர்ற நேரமா பாத்து சீனாக்காரேன் ONGC பிரச்சனைய வேற கெளப்பி விட்டுட்டான்....அதாவது வியட்நாமிய கடல் எல்லையில் இருக்கும் பெட்ரோலிய வாயுவை எடுக்க இந்தியா ஒப்பந்தம் போட்டு இருக்கு...இதனை ஆரம்பிக்கும் நேரத்தில் இது எங்க ஏரியா உள்ள வராதன்னு சீனாக்காரேன் வம்பு பண்றான்...ஆனா இது உன்னோட எல்லையில்ல பேச்சி பேச்சாத்தான் இருக்கணும் பார்டர தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாதுன்னு இந்தியாவும் இந்த நாடும் கூட்டறிக்கை விட்டு இருக்காங்க....
இந்த நிலமையில தான் அய்யாவோட விசிட் முக்கியத்தும் பெற்றது...இப்படி போயிட்டு இருந்த விருந்துல ஒருத்தரு மறுபடியும் இந்த வயசுல என்னமா கலக்குறாரு அய்யான்னு சொன்னாரு...அதுக்கு இந்த பக்கி(நாந்தேன்!)
"ஏன்யா இவருக்கே இப்படி கால்ல விழுந்து கும்புடுரீங்களே...பாக்கி லேடி மாதிரி ஆள் நம்ம நாட்ல இருந்து வந்தாங்கன்னா உங்க கும்புடு எப்படி இருக்கும்னு சொன்னேன்(ஹிஹி!)...எல்லா நாட்டுக்காரனையும் ஈசியா பேசியே சமாளிச்சிபுடலாம்...சீக்கிரத்துல எதிர்த்து பேச மாட்டாங்க அப்படின்னும் சொன்னேன்..(சரிதானுங்களே!)....நண்பர்கள் என்னைய ஒரு முறை முறைச்சாங்க பாருங்க(சர்ரா விடுங்கடா!)....
கொசுறு: நல்ல வேலை அந்த அய்யா காதுல விழல ஹிஹி!...இது ஒரு கதம்ப பதிவு அதனால இப்படி இருக்கு!

மறுமொழிப்பெட்டி: | |
தமிழிலும் மறுமொழியிடலாம் |
Post Comment