Followers

Thursday, September 1, 2011

எங்காத்தா(!?).....Openarருக்கு நன்றிகள்...!

வணக்கம் நண்பர்களே...



முதல்ல சில விஷயங்கள் சொல்லிபுடுறேன்....இந்தப்பதிவு படப்பதிவு அல்ல(!)....அதனால யாரும் எதோ பட விமர்சனத்துக்கு எதிரா பதிவு போட்டதா நெனச்சிக்க வேணாமுங்க(பய புள்ளைங்க என்னமா திட்டுதுங்க!).....இந்தப்பதிவு ஒரு சொந்தக்கத பதிவு மட்டுமே....இதுல வரும் தொலைபேசி உரையாடல்கள் உபயம் குடும்பம்(!) எனும் ஆலமரத்திலிருந்து எடுக்கப்பட்டவை....

ஹலோ... சொல்லுப்பா எப்படி இருக்க.....

நான் நல்லா இருக்கேம்மா நீங்க எப்படி இருக்கீங்க....

நல்ல இருக்கேம்பா.....அது சரி என்ன இம்புட்டு காலையில போன் பண்ற....

என்னம்மா இன்னிக்கு என்ன நாளு....

ஆமாம்யா...இன்னிக்கு விநாயக சதுர்த்தி இல்ல....ஆமாம் மருமவ பலகாரம்லாம் செய்ஞ்சிட்டாளா....

காலையில இருந்து என்னைய பாதிவேலைய பிரிச்சி கொடுத்து பெண்டு எடுத்தாச்சி....இப்போ யாரு கேட்டா இந்த கொழுக்கட்டைய(!) செய்யலேன்னு....

எலேய் சாமிய கும்பிட்டியா...

ஆங் ஒபனருக்கு(Opener!) நன்றி சொல்லிட்டேன்....


அது என்னடா ஒபனறு....

ஹிஹி...அவரு தானே நம்ம கடவுள்களில் முதன்மையானவரு அதான் அப்படி சொன்னேன்...

நீ இன்னும் திருந்தவே இல்லையா....

ஹிஹி....

சரி உம்புள்ளாண்டான் என்ன பண்றான்...

ஸ்கூலுக்கு ரெடியாயிட்டு இருக்கான்.....

ஏன்டா இன்னைக்கு லீவு இல்ல....

அம்மா இன்னைக்கு இங்க விடுமுறை விட மாட்டாங்க....இது என்ன நம்மூரா....

சரிய்யா...கோயிலுக்காவது போயிட்டு வா....

இங்க ஹிந்து கோயில் இல்லன்னு ஏற்க்கனவே சொல்லி இருந்தேனே....

அடப்பாவமே...கோயில் இல்லாத ஊருல எப்படித்தான் இருக்கியோ போ....உனக்கெல்லாம் வேல கெடைக்குது பாரு இந்தமாதிரி ஊருல...இப்பவாவது சாமி கும்புடுற பழக்கம் வந்துதா...இல்ல இப்பவும் விதண்டாவாதம் பேசிட்டு இருக்கியா மருவமவக்கிட்ட...கையெடுத்து சாமிய கும்பிட்டாவது போவியா வீட்ல....

ஹிஹி...சரி செய்யிறேன்...

என்னமோ செய்ஞ்சா சர்தான்....

நல்ல நாளு அதுவுமா குழந்தைக்கு வாழ்த்து சொல்றேன் கூப்பிடு....

கண்ணு ராசா....புள்ளையாரு சதுர்த்தி வாழ்துக்கள்யா....

சரி அப்பம்மா....எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி நான் கெளம்பனும் சாயந்தரமா பேசுறேன்..சரியா...பை....

சரிப்பா சரி....

சரிம்மா வச்சிடறேன்....



என் அம்மாவுக்கு சொன்ன மாதிரியே உங்களுக்கும் இனிய புள்ளையாரு சதுர்த்தி வாழ்த்துக்கள்...

கொசுறு: எல்லோரும் விடுமுறையை இனிதே கொண்டாட வாழ்த்துக்கள்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

33 comments:

நிரூபன் said...

தமிழ்மணம் இணைச்சிட்டோமில்ல.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

நிரூபன் said...

ஆங் ஒபனருக்கு(Opener!) நன்றி சொல்லிட்டேன்....//

அவ்...என்ன போத்தல் திறப்பான் தானே....

நிரூபன் said...

விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க பாஸ்.

நிரூபன் said...

கோயில் இல்லா ஊரில் அன்னையைத் தெய்வமாக மதிக்கும் சுட்டியின் பண்பு அருமை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

கமாண்ட் ஓப்பனரா நிருபன் வந்துட்டாரு....

# கவிதை வீதி # சௌந்தர் said...

என் கணிப்பு படி இந்து கோயில்கள் இல்லாத இடமே இந்த உலகில் இல்லை....

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னது வியட்நாம்ல இந்து கோயில்கள் இல்லையா...

விக்கி பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது பாத்துக்கங்க...

விக்கியுலகம் said...

@நிரூபன்

மாப்ள வருகைக்கு நன்றி!

# கவிதை வீதி # சௌந்தர் said...

வீட்டு வேப்ப மரம்

ஆத்தேர அரசமரம்...

ஊர் பொது ஆலமரம்...

அப்படி இல்லன்னா புளிய மரம்

இல்ல ஏதோ ஒரு மரம்...

ஒரு மூன்று செங்கல்...

ரோட்டுல மைல் கல்...

உயரத்தில் பறக்கி கருடன்...

ஊர்ந்து செல்லும் பாம்பு...

கிளி..

மலைச் சிகரம்...

இவைகள் இல்லாத நாடு ஒரு நாடா...?

விக்கியுலகம் said...

@நிரூபன்

மாப்ள வருகைக்கு நன்றி!

# கவிதை வீதி # சௌந்தர் said...

நம்ம மௌசுக்கும் நன்றி..

அதாங்க தலைவர் வாகனம்

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
என்னது வியட்நாம்ல இந்து கோயில்கள் இல்லையா...

விக்கி பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது பாத்துக்கங்க..."

>>>>>>>>>>>

மாப்ள வருகைக்கு நன்றி!...நான் இருக்கறது வடக்கு வியட்நாம்....இங்க கிடையாது தெற்க்கே ஹோசிமிங்க்லதான்யா இருக்கு!

# கவிதை வீதி # சௌந்தர் said...

கிண்டலுக்கு இல்லிங்க....

எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அப்படி சொன்னேன்...
இதுதான் இந்துக்களின் நம்பிக்கை..

பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

கிண்டலுக்கு இல்லிங்க....

எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அப்படி சொன்னேன்...
இதுதான் இந்துக்களின் நம்பிக்கை..

பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
கிண்டலுக்கு இல்லிங்க....

எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அப்படி சொன்னேன்...
இதுதான் இந்துக்களின் நம்பிக்கை..

பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்..."

>>>>>>>>

பய புள்ள ரொம்ப நாளா என்னைய கும்மனும்னு ப்ளான் போட்டு இருந்திருப்பாரோ...ஹிஹி....
விநாயக சதுர்த்தி வாழ்துக்கள்யா!

koodal bala said...

Same to you maams

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

சி.பி.செந்தில்குமார் said...

ஏதோ கொஞ்சம் புரியுது ஹி ஹி

மகேந்திரன் said...

பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...

M.R said...

தமிழ் மணம் ஆறு

வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் மாம்ஸ்

வினாயகருக்கு ஒரு பெயரும் வைத்து விட்டீர்கள் ,ஹா ஹா நன்று

இரவு வானம் said...

மாம்ஸ் உங்களுக்கும் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

ராஜா MVS said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.. மாம்ஸ்..
ஓப்னர் போட்டோ அருமை..

சேட்டைக்காரன் said...

கோவில் இல்லாத ஊரில் என்பதை மாற்றி கொழுக்கட்டை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்-னு மாத்திரலாம் போலிருக்குதே!

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said...

இனிய புள்ளையாரு சதுர்த்தி வாழ்த்துக்கள்...

நிகழ்வுகள் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் ...

தனிமரம் said...

எனக்கும் ஒரு கொழுக்கட்டை அனுப்புங்க மாப்பூ விடுமுறை நாளைக் கொண்டாடுங்கள் பிள்ளையார் கோயில் போய்!

Prabu Krishna said...

உங்களுக்கும் வாழ்த்துகள்...

அம்பாளடியாள் said...

ஆகா பிள்ளையாருக்கே பட்டப்பேரா!:..........
அருமையா வாழ்த்துச் சொன்ன உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
ஐயா ....தமிழ்மணம் 11

செங்கோவி said...

இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

செங்கோவி said...

//சரி அம்மம்மா....எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி நான் கெளம்பனும் சாயந்தரமா பேசுறேன்---விக்கி பையன்//

//என் அம்மாவுக்கு சொன்ன மாதிரியே உங்களுக்கும்--- விக்கி//

உண்மையைச் சொல்லும்யா..இந்தப் பதிவை எழுதுனது யாரு? விக்கிக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ற அளவுக்கு கூறு கிடையாதே..

உம்ம பையன் அம்மம்மா எப்படி உங்க அம்மா ஆனாங்க?

(இதுக்குத் தான் பதிவைப் படிக்கக்கூடாதோ!)

கும்மாச்சி said...

நானும் ஏதோ சினிமா விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் என்று வந்தேன், ஹோ மாப்ள நீயும் நம்ம ஜாதியா? அதான்பா கோயில் இல்லாத ஊருல குடியிருக்கிரவரா?