டிங்கு: சார் இங்கதான் இருந்தான்....
அரவிந்த்: இருங்க இந்த பக்கமா பாக்கலாம்....இல்லையே எங்க போயிருக்கும்...நீங்க தண்ணி ஏதாவது போட்டு இருந்தீங்களா...
டிங்கு: என்ன சார்...உங்களுக்கு தெரியாதா...எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இல்ல சார்....
அரவிந்த்: சாரி, மறந்திட்டேன்....சரி விடுங்க பாத்துக்கலாம்...இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் குமாரவேல் நம்ம நண்பர் தான் பாத்துப்போம்...எதுக்கும் நீங்க இங்க இருக்கறது அவ்வளவு பாத்துக்காப்பா இருக்காது...உடனே எங்கயாவது வெளியூர் போய் இருங்க...பிரச்னை ஓஞ்சதுக்கு பிறகு வாங்க....
டிங்கு: எங்க சார்...போகுறது...எனக்கு சொந்தக்காரங்க அதிகமில்லீங்க...
அரவிந்த்: வேணும்னா ஒரு வாரம் என் நண்பர் வீட்ல இருங்க...என் நண்பர் பாண்டிசேரில இருக்காரு...
டிங்கு: சரி சார் நான் வீட்டுக்கு போய் ஏதாவது காரணம் சொல்லிட்டு கெளம்பறேன்...
அரவிந்த்: இந்தாங்க இந்த பணத்த வச்சிக்கங்க....இது அவரோட விசிட்டிங் கார்ட்....அவரோட வீட்டு விசாலம் எங்கிட்ட இப்போ இல்ல....நானும் அவருக்கு போன் பண்ணி சொல்லிடறேன்... ஆபீஸ்ல இருந்தாருன்னா ஒன்னும் பிரச்சன இல்ல...வீட்டுக்கு போயிட்டு இருந்தாருன்னா...நீங்க மீட் பண்ணப்புறம் ஸ்டேஷனுக்கு போன் பண்ணுங்க....அவர எனக்கு ரொம்ப வருசமா தெரியும்...
டிங்கு: சரி சார் நன்றி...
அரவிந்த்: இன்னொரு விஷயம்...இப்போ வீட்டுக்கு போக வேணாம்...உங்க நண்பர்கள் யார் கிட்டயாவது சொல்லி வீட்ல inform பண்ணசொல்லுங்க நீங்க வேலையா வெளியூர் போகறதாகவும் வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும்னும்....
டிங்கு: சரி சார்....
(அருகிலிருந்த கடையிலிருந்து மீனாக்கு போன் செய்தான் டிங்கு...தான் வேலை விஷயமாக பாண்டி செல்ல வேண்டி இருப்பதாகவும் வர ஒரு வாரம் ஆகும் என்பதை வீட்டில் சொல்ல சொல்லி விட்டு அவளின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்)
பஸ் தாம்பரத்தை விட்டு கிளம்பியது...அசதியின் காரணமாக தூங்கிவிட்டான் டிங்கு....பாண்டியை நெருங்கிக்கொண்டு இருந்தது வண்டி....அடிவயிற்றில் ஒரு பயங்கர வலி....தொட்டுப்பார்த்தால் ரத்தம் பீரிட்டு கிளம்பியது...
அடிவயிற்றில் சதக்கென்று சிறிய கத்தி இறங்கி இருந்தது...இறக்கியவன் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடிக்கொண்டு இருந்தான்....
கொசுறு: நான் எழுதுறது என் மனத்தில் பதிந்த விஷயங்களை மட்டுமே....இன்றிலிருந்து 10 நாள் வேலை நிமித்தமாக மங்கோலியா செல்வதால் முடிந்ததை பகிர்கிறேன் நண்பர்களே...உங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள்....

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
18 comments:
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
யாரு மாம்ஸ் அந்த கத்தி குத்து கண்னாயிரம்
ஆஹா... காலேயிலேயே குட்டி சுவத்துல உக்காந்தாச்சா... நானும் ஐக்கியமாகறேன்... மாம்ஸ்
மங்கோலியா போயி வரும் மாம்ஸ்... பத்து நாட்களுக்கு பிறகு அனைவராலும் மங்கோலியா மாம்ஸ் என அன்போடு அழைக்க்ப்படுவார்.... சென்று வென்று வார்ங்கள் மாம்ஸ்
தமிழ் மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு
nalla padiya poyittu vaanga maams
வாழ்த்துக்கள்.
மங்கோலியா போறீங்களா??
நல்ல படியா பார்த்து சூதானமா போட்டு வாங்க மாம்ஸ்...
அதுவரை நாங்க
நீங்க எழுப்பிய குட்டிசுவர்களில் உட்கார்ந்து காத்திருக்கோம்...
மங்கோலியா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
தமிழ்மணம் 5
Happy journey friend
வியட்நாமிய ஜொள்ளு மாதிரி மங்கோலியாவிலும் நிறைய எதிர்பாக்கிறோம் மாம்ஸ்... வந்து பயணக்கட்டுரை எழுதுறதுக்கு இயற்க்கை காட்சிகள எல்லாம் படம் புடிச்சுட்டு வாங்க...
டிங்கு டாங் டிங் ....
கண்டிப்பாக மங்கோலிய ஜொள்ளு போடவும் மாம்ஸ்!
உள்ளேன் ஐயா!
பத்து நாளாகுமா ஒன்பதாம் பாகம் வருவதற்கு..
பஸ் ஸ்டேசனில் கத்தியால் குத்து வாங்கிய டிங்குவிற்கு குத்தியவர் யார்? எனும் தேடலை மனதினுள் தந்து சஸ்பென்ஸாக கதை நகர்கிறது.
Post a Comment