வணக்கம் நண்பர்களே...
ஒரு குழந்தைக்கு பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய சொத்து ஆரோக்கியமான உடல் மட்டுமே என்பது என்தாழ்மையான கருத்து...அதன் பின் அந்த குழந்தையின் ஆரம்பம் முதல் நல்ல நிலைமைக்கு வரும்வரையில் அந்த பெற்றோரின் பங்கு சொல்லி மாளாது....அப்பேர்ப்பட்ட பெற்றோர்களை உதறும் பிள்ளைகள் இந்தக்காலத்தில் பெருகி வருகிறார்கள்....நடைமுறைக்கு ஏற்றாற்ப்போல தங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களை இந்த சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது...அதை பற்றிய மாறுதலான பதிவு இது...
மதி தைரியம் மிக்கவள்...சிறுவயது முதல் தன் சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவள்...இதனால் பலரால் அகந்தை கொண்டவள் என்று புகழாரம் சூட்டப்பட்டவள்(!)...வறுமையின் பிடியிலும் பாதை மாறாது ஓடிக்கொண்டு இருந்தாள்...அந்த நேரத்தில் அவளுக்கு வந்த ஆசிரியை உத்தியோகத்தில் அமர விரும்பினாள்...ஆனால் வீட்டில் 6 பெண்களில் இரண்டாவதான காரணத்தாலும், பண நெருக்கடியாலும் திருமணம் முடித்து அனுப்பினால் போதும் என்று அவள் தந்தை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார்...
கணவன் 5 வது வகுப்புவரை படித்தவர்....மதியோ அந்தக்காலத்து PUC(!)...முதல் படிப்பு விஷயத்தில் சிறியதாக ஆரம்பித்த மன சஞ்சலம்...போகப்போக அதுவே முரண்பட்ட வாழ்கையாகிப்போனது (!)... இருந்தாலும் சகித்து செல்லும் மனப்பாங்கு இருவரிடமும் இல்லை....காலம் அவர்களை கடந்து சென்று கொண்டு இருந்தது....
பெற்றது இரு மகன்கள்...இருவரும் நல்ல வேலை கிடைத்து சம்பாதிக்க ஆரம்பித்து இருந்தனர்...மதியின் கணவர் சிறு சண்டையால் தன் சொந்த ஊருக்கு சென்று விட்டார்...இனி உன் முகத்தில் விழிக்க விரும்ப வில்லை என்று இருவரும் இறுமாப்புடன் இருந்தனர்...திருமணம் நடந்தது பெரியவனுக்கு தந்தை எங்கே என்று கேட்டு அசிங்கமாகக்கூடாது என்று வந்து சேர்ந்தார் அந்த மனிதர்...திருமணம் முடிந்தவுடன் சென்றுவிட்டார்...
ஆனால், கொஞ்ச நாளில் கூட்டு குடும்பத்தின் அழகை கண்டு மீண்டும் குடும்பத்துக்குள் வந்தார்...ஈகோ பெரியதாக போய் கொண்டு இருந்தது இருவருக்கும்...பேசாமல் இருந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாக சண்டையிட ஆரம்பித்தனர்...மதியின் தங்கையோ(!) கூட்டு குடும்பத்தை கெடுக்க தன்னால் முயன்றதை செய்தாள்(!)...பெரிய சண்டையாகி அதனால் மதியின் மகன்களுக்கு இடையில் அடிதடி அளவுக்கு போனது....
யார் யாரை வைத்து கொள்வது என்று பஞ்சாயத்து ஆரம்பமானது...அண்ணன் தாயையும், தம்பி தந்தையையும் வைத்துக்கொள்வதாக முடிவான நேரத்தில் மதியின் தங்கை நடுவில் புகுந்து இதை கோர்ட் முடிவு செய்யட்டும் என்று சொல்லி வீட்டு விவகாரத்தை கோர்ட்டுக்கு இட்டு சென்று விட்டாள்...
கோர்ட்டில் மதி எனக்கு இரு ஆண் மகவுகள்...எனக்கு ஆண் என்றாலே வெறுப்பாக உள்ளது...என் தலையெழுத்து எனக்கு பெண் இல்லை என்று நினைக்கும் போது அழுகையை அடக்க முடியவில்லை...நான் இவர்கள் யாருடனும் இருக்க பிடிக்க வில்லை எனவே எனக்கு சரியான பாதையை நீங்களே சொல்லுங்கள் என்று சொல்லி விட்டாள்...
கோர்ட் மதிக்கு முதியோர் இல்லத்தை காட்டியது...அங்கு மாதம் 10,000 ருபாய் (5000 X 2)அளித்து பாது காக்கும்படி இரு மகன்களுக்கும் நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது...மதியின் கணவருக்கு எந்த வித சொத்தும் இல்லாத காரணத்தால் அவருக்கும் தனியே அவ்வாறே அளிக்க உத்தரவிட்டுள்ளது....மகன்கள் எவ்வளவு கெஞ்சியும் எதுவும் நடக்க வில்லை...இறுதியில் மதி ஒரு இல்லத்திலும், அவளின் கணவர் ஒரு இல்லத்திலும்...
இன்று தனிமையில் அவள் தன் தொலைந்து போன வாழ்கையை அசை போட்ட வண்ணம்...
கொசுறு: இதில் பல விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை...ஏனெனில் இந்தப்பதிவையும் வாசிப்பார்கள் அந்த நண்பனின் தாய்!
இன்று தனிமையில் அவள் தன் தொலைந்து போன வாழ்கையை அசை போட்ட வண்ணம்...
கொசுறு: இதில் பல விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை...ஏனெனில் இந்தப்பதிவையும் வாசிப்பார்கள் அந்த நண்பனின் தாய்!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
29 comments:
சோகம், வலி, வேதனை
என்ன செய்வது... குடும்பத்தில் புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு இல்லாவிட்டால் வேதனையே
புரிதலும் விட்டு கொடுத்தலும் கிடைக்காத ஏராளமானோர் வாழ்க்கை இது போல் இருண்டு கிடக்கிறது..
வணக்கம்..பாஸ் நல்லாருக்கீங்களா..மனதை கனக்க செய்கிறது.அத்தாயின் புலம்பல்கள்
மனம் நெகிழுது மாம்ஸ்..
விட்டேத்தியாய் நினைத்ததை சாதிக்க எண்ணி
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமல் எத்தனை
வாழ்க்கை இப்படி பாழாய்ப் போனதுவோ ???
செழிப்பாக இருக்க வேண்டிய வாழ்க்கை விட்டுகொடுத்தல் மனப்பாங்கு இல்லாததால் எந்த நிலைமைக்கு வந்துள்ளது பாருங்கள். இது அனைவருக்கும் ஒரு பாடம் நன்றி மாப்ஸ்
மனதை நெகிழச்செய்த பதிவு..
மனதை நெகிழச்செய்த பதிவு..
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்
- கிச்சிளிக்காஸ் - மிலிடரி 22.9.11
- பதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு!
- விரதமிருக்கும் நண்பிகளே(நண்பர்களே!)...
- கிச்சிளிக்காஸ் - 20.9.11
- இது ஒரு டீசன்டான பதிவு ....!
சன்னலை மூடு
கஷ்டமான செய்திதான்
என்ன திடீர்னு நல்ல பதிவு ?
என்ன செய்ய மனசுக்கு கஷ்டமா இருக்கு....
தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டுட்டேன் ஒரு ஆயிரம் டாலர் அனுப்பி வை எனக்கு....
என்னங்க இது இப்படியாப் போச்சுது? கவலை தரும் பதிவு!
இங்கே தொலைந்தது
வாழ்க்கை / உறவு / அன்பு / ஆதரவு மொத்தத்தில் எல்லாம் !! இனி உயிர் இருந்தும் பிணங்கள்..
நிறைய நடக்கிறது இந்த அவலங்கள்...
தற்ப்போது தங்கியிருக்கும் இடத்திலாவது நிம்மதி கிடைக்கட்டும்...
இந்த பாழாய் போன ஈ.கோ
எல்லாவற்றையும் பாழாக்கித்தான் போகுமோ
தெளிவூட்டிப் போகும் பதிவு
த.ம 6
குடும்பத்தின் அஸ்திவாரமே அன்பும் விட்டுக்கொடுத்தாலும். இவை இல்லாத குடும்பம் சிதறிப்போகும்.
ம் ...
நெகிழ்ச்சி!
ராஜ நாகத்துக்கு முத்தம் கொடுப்பது யார்?
///யார் யாரை வைத்து கொள்வது என்று பஞ்சாயத்து ஆரம்பமானது...அண்ணன் தாயையும், தம்பி தந்தையையும் வைத்துக்கொள்வதாக முடிவான / கொடுமையிலும் கொடுமை ((
இந்த சோக வரலாறு டோக்கியோ ஸ்டோரி என்ற ஜப்பானிய உலகசினிமாவை ஞாபகப்படுத்தியது.
பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளை சவுக்கால் அடித்த படம்.
மிக sirnthsa இடுகை பாராட்டுகள் இன்றைய சூழலில் இதே நிலைதா ன் பல இடங்களில் நடக்கிறது
கனத்த இதயத்துடன் செல்கிறேன், விக்கி செண்டிமெண்ட் பதிவும் போடுவாரா என்ற கேள்வியுடன்
பரிதாபப் படுவதை தவிர, என்ன சொல்ல!
தனிமை-கொடுமை!
வருத்தம் தான்,...
விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை...
வணக்கம் அண்ணாச்சி,
மனதைக் கனக்கச் செய்யும் ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.
கவனிப்பாரற்றிருக்கும் பெற்றோர்களின் நிலமையினை எண்ணும் போது மனதில் வேதனையெழுகின்றது.
Post a Comment