வணக்கம் நண்பர்களே.....
முதலிலேயே சொல்லிடறேன் இந்தப்பதிவு ஒரு சராசரி மனிதனின் என்ன வோட்டம்(!).....தான் யோக்கிய சிகாமணின்னு சொல்லிப்புட்டு பொண்டாட்டிக்கு எப்படி தெரியும்னு பல விஷயங்களுக்கு பின்னாடியும் போயிட்டு நான் யோக்கியன்னு நடிக்கிறவங்க இதோட நிறுத்திக்கவும்....
மும்மூர்த்திகள் - இவர்கள் சினிமா ஜாம்பவான்கள் அல்ல....மனிதனை தன்னிலை மறக்கச்செய்யும் கொடுமையான அரக்கர்கள்....
புகை (சிகரட்!)
புகை நமக்கு பகை என்று சொல்கிறோம்...இந்தப்புகை சராசரி மனிதனை
தொடர் புகை போக்கியாக மாற்றி விடுகிறது...இதை தொட்டவன் விட்டாலும்...கூட இருக்கவன் மீண்டும் தொட சொல்லி வர்ப்புறுத்துவதை கண்ணால் கண்டிருக்கலாம்(!)....பொதுவாக தனியாக இருப்பவர்கள் ஆரம்பிக்கும் கொடுமையான கெட்டப்பழக்கத்தில் இது முதல் என்று சொல்லுவேன்(துக்லாவ விட்டுட்டோம்ல! - மனோ கவனிக்க!).....
அதுவும் நான் வேலை புரிந்த இடத்தின் தன்மையால(!) சிகார் எனப்படும் தடிமனான சுருட்டை புடிக்க வேண்டி இருந்தது....அந்தப்புகை இல்லன்னா அந்த பனில நானும் ஐஸ் கட்டியாயிருப்பேன்! நிக்கவே முடியாத இடங்கள் என் வாழ்கையில்(!) பாத்து இருக்கேன்....
அப்படி ஏற்ப்பட்ட கொடிய நண்பனை நான் விட்டு விட நினைக்க வில்லை...இதற்கும் என் தந்தை தொடர்ந்து புகை புடிப்பவர் என்பதே எனக்கு 18 வயதில் தான் தெரியும்....அந்த அளவுக்கு எனக்கு தெரியாமல் வைத்திருந்த ரகசியம் அது..(!)..
உண்மையில் இது ஒரு ஸ்டைலாக ஆரம்பித்து பின் விட முடியாமல் திண்டாடியவர்களில் நானும் ஒருவன்....என் தோழிகளில் சில பேர் என்னை எத்தனையோ முறை திட்டியும் விடாமல் தொடர்ந்தேன்....
அதில் ஒரு நல்ல விஷயம் என்னன்னா வீட்டில் ஒரு வாரம் இருந்தா கூட அந்த நினைப்பு வராது எனக்கு!...அதுவே நண்பர்கள் கூட செல்லும்போது எப்படித்தான் சட்டுன்னு கைக்கு வரும்னு தெரியாது...
"என்னை பொறுத்தவரை தனிமையில் இருக்கும் போது கையாளும் கெட்ட(!) பழக்கங்கள் சீக்கிரத்தில் நம்மை விட்டு போவதில்லை என்பேன்...."
எதிர்கால மனைவியிடமே...நான் சிகரட் புடிப்பேன்னு சொன்ன முட்டாள் நான்(ஹிஹி!).....அதுக்கு அவங்க கொஞ்ச நாளைக்கப்புறம் நீங்க "காமடிக்கு சொன்னீங்கன்னு நெனச்சேன்" என்ற போது நான் மிகப்பெரிய பல்ப் வாங்கியது போல் உணர்ந்தேன்(!).......
அப்படிப்பட்ட ஆளாகிய நான் ஒரு நாளைக்கு 40 வெண் சுருட்டில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக என் மனைவியால் வெளிவர ஆரம்பித்தேன்....கடைசியா 5 க்கு வந்து லேன்டானேன்.....(பெரிய விமானம் கொய்யால!)
இப்படி போயிட்டு இருந்த நான்....கொஞ்ச நாளில் அதுக்கும் ஆபத்து வந்தது என் மகனின் ரூபத்துல....நான் வெளிய இருந்து வந்த உடன் அவனிடத்தில் வாய துறந்து ஊதிக்காட்டனும்...ஏன்னா நான் ஏதாவது சாப்பிட்டு வந்துருக்கனான்னு செக் பண்றாராம்... பய புள்ள என்னமா செக் பண்ணும்...!
இந்த கொடுமைய ரொம்ப நாளைக்கு தாங்க முடியாம "போடங்கோ" அப்படின்னு திடு திப்புன்னு அந்த கருமத்த(!) தூக்கி போட்டுட்டேன்யா....(பல மாதங்களாச்சி!)
கொசுறு: ஓ....மறந்துட்டேன் பாருங்க...வியட்நாமிய மொழில "துக்லா" அப்படின்னா வெண் சுருட்டுன்னு அர்த்தம்..வெண் சுருட்டுன்னா சிகரட் ன்னும் சொல்லுவாங்க!...
மும்மூர்த்திகளில் அடுத்து குடி பதிவு அதற்கடுத்து பெண் போகம் விரைவில் எதிர்பாருங்கள்(!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
29 comments:
எப்படியோ... புகையை விட்டுடிங்களே... (பழக்கத்தை சொன்னேன்.)
புகைப்பழக்கம் மிகவும் தவறானது...
அடுத்த மும்மூர்த்திகள் அதைவிட கொடுமையானவர்கள் தான்...
மனிதனைப்பார்த்து
ஒரு சிகரேட் சொல்லியது...
மரணம்...!
இன்று உன்னால் நான்..
நாளை என்னால் நீ...
இது எப்படியிருக்குன்னு சொல்லுங்க தல...
அனுபவ பகிர்வுக்கு நன்றி
மாப்ள வென்சுருட்ன்னா சிகரெட்டா?
நானும் சிகரெட் பத்தி ஒரு பதிவு போடணும்..
நல்ல பதிவு
நல்லவேளை இதில் மாட்டாமல் எப்படியோ
தப்பித்துவிட்டேன்
ஒருவேளை சிகரெட் குடிக்கிற நண்பர்களுடன்
நெருக்கமாக பழகாதது கூட ஒரு
காரணமாய் இருக்கலாம் த.ம 4
என்னாது உண்மையாவே துக்லாவை விட்டுட்டியா....?? நம்பமுடியலையே...!!!
மும்மூர்த்தியில ஒன்னு வந்தாச்சு, இன்னும் ரெண்டு இருக்கே அவ்வ்வ்வ் முடியல....
அண்ணே பொறு சிபி ராஸ்கல் இன்னும் வரல....
கவிதை வீதி # சௌந்தர் said...
மனிதனைப்பார்த்து
ஒரு சிகரேட் சொல்லியது...
மரணம்...!
இன்று உன்னால் நான்..
நாளை என்னால் நீ...
இது எப்படியிருக்குன்னு சொல்லுங்க தல...//
சூப்பர்லேய் மக்கா....!
சுற்று சூழலுக்கு மிகப் பெரிய நன்மை செய்திருக்கிறீர் மாம்ஸ் !
ம் ...
தன் மகன் சிகரட் பிடிப்பதை எந்த தந்தையும் விரும்புவதில்லை, ஆனால் தன் மகன் தந்தையை காப்பி அடிப்பான் என்பதை மட்டும் ஏனோ மறந்து விடுகிறார்கள்..
மொத்தமா விட்டாச்சா இப்போ .....)))
:)
:(
ஏன் இந்த கொலை வெறி?
வணக்கம் சார், கும்புடுறேன்!
சார் உங்களை நெனைக்கப் பெருமையா இருக்கு சார்! ஏன்னா, இந்த மாதிரிப் பழக்கவழக்கங்கள விட்டுட முடியலையேன்னு சிலபேரு புலம்பிக்கிட்டுத் திரியுறாங்க!
இவரு ரொம்ப நல்லவர் என் இந்த தருணத்தில் இருந்து அறிவிக்கபடுகிறது....
அண்ணன் தன் பராக்கிரமங்களை வெளிய எடுத்து விட போறாரு போல இருக்கே? படிச்சிட்டாவது யாராவது திருந்தட்டும்....
சே குவாரா சுருட்டு புகைப்பது அழகாகத்தான் இருக்குது. இருந்தாலும்ம்ம்ம்...
மாப்ள, ’பதிவு எழுதறது’ மும்மூர்த்திகள்ல வராதா?
நல்ல பழக்கம் புகைத்தலுக்கு மூடுவிழா!
வணக்கம் மாம்ஸ்,
புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க..
வாழ்க்கைக்குத் தேவையான நல்லதோர் அனுபவப் பகிர்வு.
நீங்க பல்பு வாங்கிய மேட்டரை நினைத்துச் சிரித்தேன்.
புகைப்பழக்கம்
தன்னைத்தானே
தற்கொலை செய்துகொள்ளும்
முயற்சி...
கலக்கிடீங்க மாம்ஸ்......
வாழ்த்துக்கள் புது (மாதிரி)வாழ்க்கைக்கு...
:)
வாழ்க்கைக்குத் தேவையான அனுபவப் பகிர்வு.
ஓணம் நல்வாழ்த்துக்கள்
என்னது>? விக்கி திருந்திட்டானா?நம்ப முடியவில்லை வில்லை.. வில்லை வில்லை..
இதனால் பல ஆண் நண்பர்கள் சேர்க்கை! நிறைய பெண் நண்பிகள் விலகல்!ஒரே முச்சில் விட்டால் தான் வெளி வர முடியும்!
Post a Comment