வணக்கம் நண்பர்களே.........இந்த முறை உங்களை அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......
இந்த இடத்துக்கு பேரு ஹாலாங்............இது ஒரு அழகான சுற்றுலாத்தலம்.......இங்க 1960 திட்டுக்கள் இருக்கு..........இது பல கனிமங்கள் இருக்கும் இடம்........ஆனால் இந்த அரசாங்கம் இந்த இடத்த பத்திரமான இடமாக பாதுகாத்திட்டு வருது..........
இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............
பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......
அமைதியான இந்த இடமும் சுற்றிலும் அழகான தோற்றமுடைய திட்டுக்களும் கண் கொள்ளாக்காட்சி........
ஹலோங்கில் இருக்கும் குகை மிக சிறப்பான ஒன்றாகும்.........பவழங்கள் இருக்கும் குகை இது.............பல போர் காலங்களில் இதன் உள் இருந்து கொண்டு சீனர்களை ஓட விட்டுள்ளனர்..........
இந்த படகில் வரும் வெளி நாட்டவர் இங்கு நீச்சலடிக்க மிகவும் விரும்புவர்........
பல நாட்டு மக்கள் வந்து போகும் இடம் இந்த ஹாலாங்............
படகுல வந்து வியாபாரம் பண்ணுவாங்க...............
உங்களுக்காக...
இப்படி சாப்டு இருக்கீங்களா மக்களே...
கொசுறு: என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!)....உயிருடனான உணவுடன் ஹிஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
19 comments:
தமிழ்மணத்துல சேர்த்து ஓட்டும் போட்டுட்டேன்!
உங்க ஊர் இம்புட்டு அழகா இருக்கே! அது சரி அந்த கொசுறு மேட்டருக்கும் 7 வது படத்துக்கும் தொடர்பில்லைத்தானே!
ஆமா, இதுதான் 7 ம் அறிவா?
மிஸ்டர் விக்கி மாப்பிள்ளை
என்னமோ தெரியால வியட்நம் என்றதும் அமெரிக்கா ஆக்கிரமிப்பும் அதையோட்டிய வியட்நமிய மண்ணின் மைந்தர்களின் விடுதலைப் போராட்டமும் நினைவுக்கு வருகிறது அழகான பூமி மட்டுமல்ல வீரம் விளைந்த பூமியும் கூட
அழகான பகிர்வுக்கு நன்றி
சூப்பர் மாம்ஸ்!
எனக்கும் அங்கே (ஹாலாங்)போகணும் போல இருக்கு! :-)
அழகு & அருமை .
ஹாலாங் மிக அழகு! இன்னும் தமிழ் சினிமாக்காரங்க கண்ணுலே படலே போலிருக்குது. டுயட்டுக்கு சரியான இடம். :-)
இனிய காலை வணக்கம் பாஸ்,
காசில்லாமல் எங்களை வியட்னாமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறீங்க..
ஹாலாங் நல்ல அழகு தான்.
ஆனால் சிங்கப்பூரிலு, ஹேலாங் என்று ஒரு இடம் இருக்கிறது.
அதுவும் ஒரு விடயத்திற்கு பேமஸ் பாஸ்.
படங்கள் கலக்குது தலைவா!!!
ஓட்டிட்டோம்!
அழகான இடத்தை ஓசியிலே சுத்தி காட்டின மாப்ள ரொம்ப நன்றியா
அழகான ஊர்தான். சுற்றிப்பார்த்த உணர்வு
இது தன உலகத்திலே பெரிய குகை என்று பெயர் வாங்கியதா
அழகான இடம்
மாப்ள., அசத்தல் எனக்கும் வியட்நாம் பாக்கணும் போல இருக்கு..
இன்று முதல் நீ ஷேர் ஹேப்பி மேன் என அழைக்கப்படுவாய்
இந்தத் திட்டுப் பாறைகளே அவதார் படத்தில் வரும் மிதக்கும் பாறைகளுக்கு மூலம்!
கண் கொள்ளா காட்சி
இயற்கையின் எழிலோவியம்
நேரில் கண்டது போன்ற உணர்வு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அருமையான இடம் நன்றி.
போட் செல்லும் இடம் சூப்பாராயிருக்கு... அப்பறம அந்த அமிபா மாதிரி இருக்க ஏதோ ஒன்ன நீங்க முதல்ல சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க மாம்ஸ்... கருத்து சொல்ல வர்றவங்களுக்கு ஒரு பிளேட் கொடுங்க...
என்ன ஒரு அழகான இடங்கள். மாம்ஸ் ரொம்ப கொடுத்து வச்ச ஆளு நீங்க
வியட்நாம் பற்றியும், அங்குள்ள முக்கிய இடங்களையும் கண்முன்னே கொண்டு வந்தது பதிவு. பகிர்வினுக்கு நன்றி...!எனது வலைத்தளத்தில்: குறைந்த விலை பிராண்டட் செல்போன்களின் பட்டியல்வாசித்துப் பயன்பெறுங்கள்..
Post a Comment